இதுக்கு மம்பட்டியான் பாட்டை போட்டே ஆடி இருக்கலாம்! கார் ஓனரின் கண் முன்னே சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க!

இன்றைய இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகள் பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுவிட்டன. சடங்குகள், சம்பிரதாயங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்தாலும், அவற்றை சுற்றி நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அந்த வகையில், மாப்பிள்ளை மட்டுமின்றி அவரது நண்பர்கள் மற்றும் சகோதரர்களும் ஒரே மாதிரியான உடையில் திருமணத்தில் கலந்து கொள்வது, மணமகன் அழைப்பின் போது சுவாரஸ்யமாக எதாவது செய்வது என மற்றவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில், இங்கு சில மணமகன் தோழன்கள் திருமண விழாவில் ஆர்ப்பாட்டம் செய்து ஃபோர்டு எஃப்-250 (Ford F250) என்கிற பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனத்தை துவம்சம் செய்துள்ளனர். வாகனத்தின் பொனெட்டின் மீதும், மேற்கூரையின் மீதும் நின்றுக் கொண்டு இளைஞர்கள் நடமாடுவதும், குதிப்பதும் என வாகனத்தை ஒருவழி செய்துள்ளனர்.

indian marriage party in america

இதுதொடர்பாக 'பஞ்சாப் பியாண்ட்' (punjabbeyond) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இளைஞர்களின் அட்ராசிட்டியை கண்டு கோபமடையும் ஒரு நடுத்தர வயதுடைய குடும்பஸ்தரின் முகத்தை க்ளோஸ்-அப்பில் காட்டி நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி உள்ளனர். ஃபோர்டு எஃப்250 போன்ற பவர்ஃபுல்லான மற்றும் பலரது ஃபேவரட்டான வாகனத்தின் மீது இளைஞர்கள் குதிப்பதை பார்த்ததும் இந்த நபருக்கு உடனே முகமே மாறிவிட்டது.

இளைஞர்கள் குதித்து ஆடியதில் வாகனத்தின் முன்பக்க பொனெட்டின் மூடி முற்றிலுமாக நசுங்கி போனது. இருந்தாலும், திருமணத்தை மனதில் வைத்து எதுவும் சொல்லாமல், போலியாக சிரித்து சமாளித்துள்ளார். ஃபோர்டு எஃப்250 ஆனது பிக்-அப் டிரக் வாகனம் என்பதால், வாகனத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்ட லோடு பகுதியிலும் இளைஞர்கள் நின்றப்படி நடனமாடி உள்ளனர்.

indian marriage party in america

நல்லவேளையாக ஓடும் வாகனத்தில் இவ்வாறு செய்யவில்லை. ஏனெனில், வாகனம் கொஞ்சம் நகர்ந்தாலும் அனைவரும் கீழே விழ வேண்டியதுதான். பஞ்சாப் பியண்ட் என்கிற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து இருந்தாலும், இது இந்தியாவில் நடக்கவில்லை. ஏனெனில், இந்தியாவில் ஃபோர்டு எஃப்250 பிக்-அப் டிரக் வாகனம் விற்பனையில் இல்லை.

இது அமெரிக்காவில் நடந்த நிகழ்வாகும். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு, "பணத்தின் மதிப்பு இந்த இளைஞர்களுக்கு தெரியவில்லை" என்கிற ரேஞ்சில் பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஏனெனில் அந்த அளவிற்கு, பொருளாதாரத்தில் முன்னோக்கி இருக்கும் அமெரிக்க மக்களுக்கே விலையுயர்ந்த வாகனமாக ஃபோர்டு எஃப்250 விளங்குகிறது.

indian marriage party in america

அமெரிக்காவில் ஃபோர்டு எஃப்250 பிக்-அப் டிரக் வாகனத்தின் ஆரம்ப விலை ஆனது தற்சமயம் 49 ஆயிரத்து 90 டாலராக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு தற்சமயம் ரூ.42.80 லட்சம் ஆகும். எக்ஸ்.எல், எக்ஸ்.எல்.டி, லாரியட், கிங் ராஞ்ச் மற்றும் பிளாட்டினம் என்கிற ஐந்து விதமான வேரியண்ட்களில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஃபோர்டு எஃப்250 பிக்-அப் டிரக்கின் விலை அங்கு அதிகப்பட்சமாக 77,865 அமெரிக்க டாலர்கள் (ரூ.67.90 லட்சம்) வரையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் எந்த மூலையில் நடந்தாலும் சரி இந்தியரின் திருமணம் என்றாலே அங்கு கொண்டாட்டமும், ஆராவாரமும் அதிகமாக இருக்கும். இருப்பினும், இவ்வாறு முகம் சுளிக்க வைக்கும் செயல்களை தவிர்க்கலாம். இளைஞர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர்தான் இந்த ஃபோர்டு எஃப்250 வாகனத்தின் உரிமையாளர் என நினைக்கிறோம். இளைஞர்களால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு டாலர்கள் செலவழிக்க போகிறாரோ...!!

More from DriveSpark

Article Published On: Saturday, August 2, 2025, 5:00 [IST]
English summary
Ford f250 smashed at indian marriage party in america check all details here
மேலும்... #car damage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X