7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

7 வயது சிறுவனின் கனவு அவனது பிறந்த நாளன்று நிஜமாகியுள்ளது. அவனது வாழ்வில் நிகழ்ந்த ஆச்சரியம் என்னவென்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

கார் மற்றும் பைக் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்புகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்கள் ஏராளம் பேர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான இந்த அன்பு பெரும்பாலும் வாழ்க்கையின் பின் நாட்களில்தான் ஒருவருக்கு தொடங்கும். அதாவது ஓரளவிற்கு வயது வந்த பின்பு. ஆனால் ஒரு சிலர் மிக சிறு வயதில் இருந்தே ஆட்டோமொபைல் உலகில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.

7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

கார்கள் மீது பேரன்பு செலுத்தும் ஒரு சிறுவனின் கனவை ஃபோர்டு நிறுவனம் நிஜமாக்கியிருப்பதே இதை தற்போது பேசி கொண்டிருக்க காரணம். அந்த சிறுவனின் பிறந்த நாளன்று, அவனுக்கு மிகவும் விருப்பமான கார்களில் ஒன்றான மஸ்டாங் உடன் அவனுக்கு ஃபோர்டு நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அத்துடன் அந்த சிறுவனை அதில் ரைடு செல்லவும் அனுமதித்திருக்கிறது.

7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

நாம் இங்கே பேசி கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் அபீர். சமீபத்தில் அவனுக்கு 7வது பிறந்த நாள் வந்தது. நடை பழக தொடங்கிய காலம் முதலே அபீருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம் என அவனது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அபீருக்கு 2 வயதாக இருந்தபோது அவனது தந்தை பொம்மை கார் ஒன்றாக பரிசாக வழங்கியுள்ளார். அதன் பின்புதான் கார்கள் மீதான அபீரின் ஆர்வம் அளவு கடந்து சென்றது.

7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

எனவே அபீரின் குடும்பத்தாரும், ஃபோர்டு நிறுவனமும் அவனது 7வது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்தனர். இதன் விளைவாக உண்மையான ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) கார் பரிசாக அபீர் முன்பு வந்து நின்றது. பிறந்த நாளன்று கண்கள் கட்டப்பட்ட நிலையில், அபீர் ஒரு திறந்த வெளிக்கு அழைத்து வரப்பட்டான்.

7 வயது சிறுவனின் கனவு நிஜமானது... பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம் இதுதான்...

கண் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதும் மகிழ்ச்சியில் அபீர் துள்ளி குதித்ததற்கு அளவே இல்லை. அவன் முன்னால் சிகப்பு நிற மஸ்டாங் நின்று கொண்டிருந்ததே இதற்கு காரணம். அதன் பின்பு அபீர் காருக்குள் ஏறினான். அந்த காரின் ஸ்போர்ட்டியான இன்டீரியர்கள் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கும். அபீரின் பிறந்த நாள் கேக்கையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கார் வடிவிலேயே அந்த கேக்கும் டிசைன் செய்யப்பட்டிருந்ததுதான் அதன் சிறப்பம்சம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவின் கதாநாயகன் குறித்தும் இங்கே பேசியாக வேண்டும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபோர்டு மஸ்டாங் காரில், 5.0 லிட்டர், வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 396 பிஎச்பி பவர் மற்றும் 515 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மலிவான வி8 இன்ஜின் காராகவும் இது திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, April 12, 2019, 14:16 [IST]
English summary
Ford India Surprises Birthday Kid With Mustang. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+