விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இரையான விலையுயர்ந்த மஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

ஃபோர்டு நிறுவனத்தின் விலையுயர்ந்த மஸ்டாங் காரை வைத்து சாகசம் செய்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரின் எஞ்ஜின் பகுதி முழுமையாக தீயில் கருகி நாசமாகியுள்ளன.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

ஃபோர்டு நிறுவனம், அட்டகாசமான ஸ்டைலில் மஸ்டாங் 6-வது தலைமுறை காரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் விற்பனைக்காக அறிமுகம் செய்தது. பலரின் கனவு வாகனமாக இருக்கும் இந்த மஸ்டாங், பெரும்பாலானோரின் பெட்ரூமில் மட்டுமே புகைப்படமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

இதுபோன்ற அதிக சக்தி கொண்ட கார்களை வாகன பிரியர்கள் வாங்குவதோடு சரி, அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று முழுமையான தகவலை அறிந்துகொள்வது இல்லை. பணம் இருக்கு, அதனால என் நண்பர்கள் வைத்திருக்கும் விலையுயர்ந்த சூப்பர் கார்களை விட அதிகமான விலையில் லக்சூரி காரை வாங்கிவிட்டேன், என சக தோழர்களுடன் பிதட்டி மட்டுமே கொள்கிறார்கள்.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

மேலும், சிலர் அந்த காரை வைத்து சக நண்பர்கள் முன்நிலையில், சாகச நிகழ்ச்சி செய்து விளையாடுவார்கள். இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகள் அமெரிக்கா, அரபு உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைபெறுவது வழக்கம். இதேபோன்றதொரு சம்பவம் தான் அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்லேக் என்னும் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

ஆனால், அந்த விளையாட்டு நிகழ்ச்சி, விளையாட்டாகவே முடியவில்லை. அன்றைய தினத்தில் மாலை இருள் சூழும் நேரத்தில், அந்த கார் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. அந்த சமயத்தில், கார் சாகசம் செய்யும் சகநண்பர்களுடன், விபத்துக்குள்ளான மஸ்டாங்கின் உரிமையாளரும் கலந்துக்கொண்டார். ஆனால், அவருக்கு தெரியாது, இன்றைய தினத்தில் நடைபெறும் விளையாட்டு விபரீதமாக முடியும் என்று.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

மஸ்டாங்கின் உரிமையாளர் தன்னுடைய காரை வட்டமிட்டவாறு, முன்பக்க வீலை தரையில் உராய்த்தபடி சுழற்றி சாகசம் செய்து கொண்டிருந்தார். டயர் சாலையில் அதிகமாக உராய்ந்ததால், அந்த இடமே புகை மண்டலமாக சூழ ஆரம்பித்தது. அப்போது, திடீரென காரின் அடிப்பகுதியில் இருந்து புகை வெளியேற ஆரம்பித்தது.

இதனையறியாமல் அங்கு சூழ்ந்திருந்த இளைஞர்கள், மஸ்டாங் உரிமையாளரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும், புகையானது காரின் டயரில் இருந்து வருவதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

பின்னர், சிறிது நேரம் கழித்துதான் தெரியவந்தது அந்த புகை காரின் அடிப்பகுதியில், அதாவது எஞ்ஜினில் பிடித்த தீயினால் வருகிறது என்பதை உணர்ந்தனர். இதைத்தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் மஸ்டாங்கின் உரிமையாளர் உட்பட அங்கிருந்த பலர் ஈடுபட்டனர். ஆனால், அதில் தோல்வியையேச் சந்தித்தார்கள். ஏனென்றால் தீயானது அணைக்க முடியாத வண்ணம் காரின் அடிப்பகுதியில் பிடித்திருந்தது.

சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் இந்த மஸ்டாங் தீ விபத்து காட்சியானது, பெரும் பரபரப்பிற்கு இடையிலும் வேறொரு நபரால் எடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த சில நிமிடப் போராட்டங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், மஸ்டாங்கின் எஞ்ஜின் முழுமையாக தீயில் கருகி வெறும் கூடாக காட்சியளித்தது.

ஃபோர்டு நிறுவனம் தனது ஆறாம் தலைமுறை மஸ்டாங் காரை கடந்த 2016ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. இதையடுத்து, அந்த ஆண்டின் இறுதியிலேயே விற்பனையையும் தொடங்கியது. இந்த கார் இந்திய மதப்பில் சென்னை ஷோ-ரூம்களில் 85.5 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோட் விலையில் விற்பனையாகி வருகிறது.

விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் - தீயிற்கு இறையான விலையுயர்ந்த முஸ்டாங் கார்: அதிர்ச்சி வீடியோ...!

உலகெங்கும் மஸ்டாங்கின் ரசிகர்கள் இதனை மஸ்கிள் கார் என அழைக்கிறார்கள். மேலும், பெரும்பாலான நபர்கள் இந்த காரை மாடிஃபை செய்தே பயன்பாட்டில் வைத்து வருகின்றனர். இந்த மஸ்டாங் கார் 0-100 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளிலேய எட்டிவிடும் சக்தி வாய்ந்தது. இது அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 6ம் தலைமுறையான இந்த மஸ்டாங்கில் 5.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 401பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2019, 14:52 [IST]
English summary
Ford Mustang Caught Fire After Stunt Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+