இந்த விபத்துக்கு காரணம் போக்குவரத்து சிக்னல் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவா??

இந்த விபத்துக்கு காரணம் போக்குவரத்து சிக்னல் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவா??

By Arun

விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணங்களாக பார்கப்படுவது ஓட்டுநரின் விதிகளை மீறிய செயல்பாடும், கவனக் குறைவுமே ஆகும். ஆனால் ஒவ்வொரு விபத்தும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கவே செய்கிறது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

நாம் பார்க்கவிருக்கும் விபத்துக்கு, ஓட்டுநரின் கவனக் குறைவு மட்டுமே காரணம் அல்ல இருந்தாலும் சாலையில் எப்போதும் அதிக கவனம் இருத்தல் அவசியம் என்பதை இந்த விபத்து நமக்கு எடுத்துரைக்கிறது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் ஒரு மோட்டார்சைக்கிள் ரைடரின் ஹெல்மெட் கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அமெரிக்க மஸில் காராண ஃபோர்டு மஸ்டாங்க், ஹூண்டாய் கெட்ஸ் காரில் மோதி சிதைந்துள்ளது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

இந்த வீடியோவை பதிவு செய்த மோட்டார்சைக்கிள் ரைடர் சென்ற அதே பாதையில் ஃபோர்டு மஸ்டாங் காரும் பயணிக்கிறது. அப்போது ஒரு போக்குவரத்து சிக்னலில் மஸ்டாங் கார் நிற்கிறது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

இந்த சிக்னலில் இருந்து கிளம்பும் போது சிறிது தூரத்தில் எதிரே ஒரு சாலை குறுக்கு சந்திப்பு தென்படுகிறது. ஆயினும் அந்த சிக்னல் இயங்காதது வீடியோவில் தெரியவருகிறது. இதனை உணர்ந்த மோட்டார்சைக்கிள் ரைடர் எதிரே வாகனங்கள் கடந்து செல்வதைக் கண்டு தனது பைக்கை நிறுத்திவிடுகிறார்.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

கோளாறு காரணமாக போக்குவரத்து சிக்னல் இயங்கவில்லை என்பதை கவனிக்கத்தவறிய மஸ்டாங் காரின் ஓட்டுநர் அதிவேகத்தில் செல்கிறார், அப்போது சாலையை கடந்த கெட்ஸ் காருடன் மஸ்டாங் கார் பலமாக மோதிவிடுகிறது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

இந்த சம்பவத்தில் மஸ்டாங் காரை ஓட்டிவந்த ஆண் ஓட்டுநரின் கையில் ரத்த காயம் ஏற்பட்டுவிடுகிறது. ஹூண்டாய் கெட்ஸ் காரை ஓட்டிவந்த வயதான பெண்மணிக்கு காயம் இல்லை என்றாலும் அதிர்ச்சியில் உறைந்து போனார் அவர்.

டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் கவனத்திற்கு...

டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் கவனத்திற்கு...

இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் போக்குவரத்து சிக்னல் இயங்காமல் இருந்தது என்று அதன் மீது பழியை சுமத்தினாலும், மஸ்டாங் மற்றும் ஹூண்டாய் கெட்ஸ் காரின் ஓட்டுநர்களின் கவனக் குறைவும் மற்றொரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

சாலையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. எனவே சாலையில் செல்லும் போது அதிக கவனத்துடனும், விழிப்புடனும் செல்லுதல் பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பழுதான சிக்னலால் ஏற்பட்ட விபத்து கற்றுத்தந்த பாடம்..!!

போக்குவரத்து சிக்னல்கள் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு அல்லது மின்சார பழுது காரணமாக இயங்காமல் இருக்காலாம், அந்த நேரத்தில் வேகத்தை குறைத்து நாலாபுறமும் பார்த்துவிட்டு வாகனங்களை வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு பின்னர் கடப்பதே சாதுர்யமான நடவடிக்கை ஆகும்.

ஹெல்மெட் கேமராவில் பதிவான இந்த விபத்தின் வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil about ford mustang accident teaches how to be cautious while driving
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X