பெங்களூரில் விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார் - வீடியோ

Written By:

பெங்களூரில் நடந்த விபத்தில் புத்தம் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் பைக் மற்றும் காருடன் மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்த படங்கள், வீடியோ மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

ஃபோர்டு மஸ்டாங் கார் வாங்கியவுடனே இந்த விபத்தில் சிக்கியிருக்கிறது. காரை ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடந்த பைக் மற்றும் காருடன் மோதி விபத்தில் சிக்கியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

இந்த விபத்தில் ஃபோர்டு மஸ்டாங் காருக்கும் டட்சன் கோ காருக்கும் இடையில் கேடிஎம் ட்யூக் 390 பைக் ஒன்று சிக்கி சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

பைக்கில் பயணித்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரத்தில், இரண்டு காரிலும் பயணித்தவர்களுக்கு அதிக பாதிப்பு இல்லை என தெரிகிறது.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

தற்போது அதிக திறன் வாய்ந்த கார் மற்றும் பைக்குகள் விற்பனை ராக்கெட்டில் உயர்ந்து வருகிறது. ஆனால், சக்திவாய்ந்த கார், பைக்குகளை வாங்குவோருக்கு இதுபோன்ற சக்திவாய்ந்த கார்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரியவில்லை என்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கார், பைக்குகளை விற்பனை செய்யும்போதே, அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து பின்னர் விற்பனை செய்வது ஓரளவு இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க பலன் தரும். ஆனால், வர்த்தகத்தில் குறியாக இருக்கும் கார் நிறுவனங்களும், டீலர்களும் இந்த விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்தும் வாய்ப்பே இல்லை.

விபத்தில் சிக்கிய புத்தம் புது ஃபோர்டு மஸ்டாங் கார்!

எனவே, அரசாங்கம் இந்த விஷயத்தில் கடுமையான நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வருவது பலன் தரும். இதுபோன்ற சக்திவாய்ந்த கார், பைக்குகள் விபத்தில் சிக்காத நாளே இல்லை எனும் அளவுக்கு இது தினசரி செய்தியாக மாறி இருக்கிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் கார் விபத்து வீடியோவை காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
This is the third Ford Mustang crash in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark