Just In
- 31 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 45 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
சுச்சி தெரிஞ்சுதான் பண்றாங்களா? அதை எதுக்கு சொல்லணும்.. சுச்சி பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
- News
தூய்மை பணியாளர் முத்துமாரிக்கு தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காருக்கு மிக மலிவான வாடகை! ஒரு நாள் கட்டணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி!!
பலராலும் சொந்தமாக்க முடியாத மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி மற்றும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்கள் இந்தியாவில் வாடகைக்கு கிடைக்கின்றன. இதில், ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரின் ஒரு நாள் வாடகை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

லக்ஸரி கார்கள் மற்றும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்களை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஆனால் அப்படிப்பட்ட கார்களை சொந்தமாக வாங்குவது என்பது அனைவராலும் இயலாத காரியம். ஏனெனில் லக்ஸரி மற்றும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை.

அதையும் மீறி சொகுசு மற்றும் அதிக செயல்திறன் வாய்ந்த கார்களை வாங்கினால், அவற்றை பார்க்கிங் செய்ய மிகவும் பாதுகாப்பான இடத்தை கண்டறிய வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உள்ளது. லக்ஸரி மற்றும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்கள் இந்தியாவில் வாடகைக்கு கிடைக்கின்றன. உங்களுக்கு தேவையும், விருப்பமும் இருந்தால் அவற்றை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

ஃபோர்டு மஸ்டாங் ஜிடி (Ford Mustang GT)
ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகை: 5,000 ரூபாய்
இந்திய மார்க்கெட்டில் ஃபோர்டு மஸ்டாங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட உடனேயே இந்தியாவில் அது மிகவும் பிரபலமாகி விட்டது. ஷோரூமில் இருந்து ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரை நீங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டுமானால், தோராயமாக கோடிகளில் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

ஆனால் பெங்களூரை சேர்ந்த டிரைவன் கஃபே பல்வேறு பேக்கேஜ்களுடன் இந்த காரை வாடகைக்கு வழங்கி வருகிறது. குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் செலுத்தினால், நீங்கள் ஒரு நாள் காரை ஓட்டி கொள்ளலாம்!! இந்தியாவில் ஃபோர்டு மஸ்டாங் காரின் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. இதில், 5.0 லிட்டர் வி8 நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 396 பிஎச்பி பவர் மற்றும் 515 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

பொதுவாக ஒரு சில ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்திய சாலைகளில் ஓட்டுவது மிகவும் சிரமமான ஒரு விஷயம். அவற்றின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம். குண்டும், குழியுமான மற்றும் வேகத்தடைகள் நிரம்பிய இந்திய சாலைகளில், குறைவான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்ட கார்களை இயக்குவது மிகவும் சவாலானது. ஆனால் இந்த கார் இந்திய சாலைகளில் இயக்குவதற்கு மிகவும் உகந்தது. இந்தியாவில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 137 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo)
ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகை: 2.36 லட்ச ரூபாய்
இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று கல்லார்டோ. ஆனால் லம்போர்கினி நிறுவனம் கல்லார்டோ காரை மார்க்கெட்டில் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது. அதற்கு பதிலாக லம்போர்கினி நிறுவனம் ஹூராகேன் காரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இன்னமும் கூட லம்போர்கினி கல்லார்டோ காரை பெரும்பாலானோர் வைத்துள்ளனர்.

இந்த காரும் கூட இந்தியாவில் வாடகைக்கு கிடைக்கிறது. ஆனால் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரை போல இது மிகவும் குறைவான வாடகைக்கு கிடைக்க கூடியது அல்ல. ஹைப் எனும் லக்ஸரி கார் ரென்டல் போர்டல், இந்த காரை வாடகைக்கு வழங்குகிறது. ஆனால் இதற்கு நீங்கள் செக்யூரிட்டி டெபாசிட்டாக 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். 350 கிலோ மீட்டர்கள் வரை எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் காரை ஓட்டி கொள்ளலாம்.

லம்போர்கினி கல்லார்டோ காரில், 5.2 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவர் மற்றும் 540 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? மணிக்கு 320 கிலோ மீட்டர்கள்!! பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை லம்போர்கினி கல்லார்டோ வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும்.

போர்ஷே 911 கரீரா (Porsche 911 Carrera)
ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகை: 99,120 ரூபாய்
இந்த காரையும் ஹைப்தான் வாடகைக்கு வழங்குகிறது. 24 மணி நேரம் நீங்கள் இந்த காரை ஓட்ட 99,120 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த காரை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால், நீங்கள் செக்யூரிட்டி டெபாசிட்டாக 1 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி 250 கிலோ மீட்டர்கள் வரை காரை ஓட்டி கொள்ளலாம்.

ஆனால் நீங்கள்தான் எரிபொருள் நிரப்பி கொள்ள வேண்டும். இந்தியாவில் வாடகைக்கு கிடைக்கும் இதுபோன்ற ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்களில், ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரின் வாடகை மட்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 5 ஆயிரம் ரூபாய் என்பது உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் மற்ற கார்களின் வாடகை கொஞ்சம் அதிகம்தான்.