விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

விலை உயர்ந்த கார் விபத்தில் சிக்கியதால், உதவி செய்ய ஓடி வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று கிடைத்தது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாக ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) உள்ளது. இங்கு ஃபோர்டு மஸ்டாங் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கிறது. 2 டோர் ரக காரான ஃபோர்டு மஸ்டாங், இந்தியாவில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

ஃபோர்டு மஸ்டாங் காரை இந்திய சாலைகளில் எளிதாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு மிக பிரபலமான காராக ஃபோர்டு மஸ்டாங் திகழ்கிறது. இந்த சூழலில், ஃபோர்டு மஸ்டாங் கார் ஒன்று சமீபத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் வாகனங்களில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இந்திய சாலைகளில் எப்படி வாகனம் ஓட்டக்கூடாது? என்பதை இந்த விபத்து நமக்கு கற்று கொடுக்கிறது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்த விபத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் பெரும்பாலான சாலைகளில் டிவைடர்கள் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அத்துடன் சாலைகள் பெரும்பாலும் சிங்கிள் லேன் கொண்டவையாகவே இருக்கும். ஒரு கட்டிடத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து காட்சி பதிவாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

சரியாக என்ன நடந்தது? என்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. இந்த வீடியோவில் லாரி ஒன்று ரிவர்ஸ் எடுக்கப்பட்டு கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அவ்வழியாக வந்த மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் டிரைவர் பிரேக் பிடித்து வேகத்தை குறைத்து விட்டார். மேலும் அதற்கு பின்னால் வந்த ஒரு ஹேட்ச்பேக் காரின் வேகமும் குறைக்கப்பட்டு விட்டது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

ஆனால் இந்த இரண்டு கார்களை தொடர்ந்து வந்த ஃபோர்டு மஸ்டாங் அதிவேகத்தில் பறந்தது. எனவே அதன் டிரைவரால் உடனடியாக வேகத்தை குறைக்க முடியவில்லை. எனவே கூடுதல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்த காரின் டிரைவர் எதிர்திசையில் இருந்த லேனிற்கு காரை செலுத்தினார். அப்போது அவ்வழியாக வந்த மினி டிரக்கின் மீது ஃபோர்டு மஸ்டாங் மோதி விட்டது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

வீடியோவை வைத்து பார்க்கையில், ஃபோர்டு மஸ்டாங் மற்றும் மினி டிரக் ஆகிய இரண்டு வாகனங்களின் டிரைவர்களுமே வேகத்தை குறைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக விபத்து அரங்கேறி விட்டது. எனினும் ஃபோர்டு மஸ்டாங் காரின் சிறப்பான கட்டுமான தரம் காரணமாக, அதன் டிரைவருக்கு எதுவுமே நடக்கவில்லை.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

உதவிக்கு ஓடி வந்தவர்கள் கூட இதை பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கலாம். அனேகமாக விபத்து நடந்த சமயத்தில் அவர் மட்டுமே தனியாக காரில் வந்திருக்க கூடும். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. இந்த விபத்திற்கும் கூட அதுதான் காரணம். அதிவேகத்தில் பயணம் செய்தால், காரை நிறுத்துவதற்கு உங்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும்? என்பதை யாராலும் சொல்ல முடியாது.

விபத்தில் சிக்கிய காஸ்ட்லி கார்... உதவிக்கு ஓடி வந்தவர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்... என்னனு தெரியுமா?

திடீரென வேறு வாகனங்கள் குறுக்கே வரும். பாதசாரிகள் குறுக்கே வருவார்கள். ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளும் குறுக்கே வரும். அப்போது அதிவேகத்தில் பயணம் செய்தால், உங்களால் வாகனங்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது. எனவே விபத்து தவிர்க்க முடியாததாகி விடும். இதனை மனதில் வைத்து இனி மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள்.

Image Courtesy: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, March 9, 2020, 12:50 [IST]
English summary
Ford Mustang Collides With Mini Truck - Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+