18 வயது மகனுக்காக துபாய் வரை சென்ற இந்திய தந்தை! கார் மோசடியில் சிக்காமல் தப்பித்தது எப்படி?

இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டில் வாழும் மக்களின் பொருளாதார நிலையும் மெல்ல மெல்ல மேம்பட்டு வருவதை இவ்வாறான நிகழ்வுகள் தான் நமக்கு வெளிக்காட்டுகின்றன. ஏனெனில், இங்கு ஒரு 18 வயது மட்டுமே ஆன அவரது மகனுக்கு விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதில், பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றை வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளனர். அப்படி என்ன மாதிரியான ஸ்போர்ட்ஸ் காரை இந்த 18 வயது இளைஞர் பெற்றுள்ளார் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஏழை குடும்பமாக இருந்தாலும் சரி, பணக்கார குடும்பமாக இருந்தாலும் சரி பெரும்பாலான குழந்தைகள் 18 வயதை நெருங்கிவிட்டாலே அவர்கள் தனி உலகத்தில் இருப்பார்கள். குறிப்பாக, தந்தை- மகனுக்கு இடையேயான பிணைப்பு குறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும். இந்த தொகுப்பில் நாம் பார்க்கவுள்ள தந்தை மகனும் கிட்டத்தட்ட அவ்வாறான பிணைப்பில் உள்ளவர்கள் தான்.

ford mustang sports car gifted

18 வயது நிரம்பிய மகனுக்கு பயன்படுத்த இந்த தந்தை விரும்பியுள்ளார். அதற்காக, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) அல்லது டிஃபெண்டர் (Defender) காரை வாங்கி கொடுக்க நினைத்துள்ளார். என்னது... 18 வயது மகனுக்கு ரேஞ்ச் ரோவர் அல்லது டிஃபெண்டர் காரா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த கார்கள் ஒன்றும் விலை குறைவானவை கிடையாது; சில கோடி ரூபாய்களில் விலையை கொண்டவை. இதில் இருந்து, இந்த தந்தை- மகன் குடும்பம் எந்த அளவிற்கு செல்வ, செழிப்பில் உள்ளனர் என்பதை அறியலாம். ஆனால், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் அந்த 18 வயதான இளைஞர் தனக்கு ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர் கார்கள் எல்லாம் வேண்டாம்... ஸ்போர்ட்ஸ் கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ford mustang sports car gifted

ஆனால், அதற்கு அவரது தந்தை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், மகன் மிகவும் பிடிவாதம் பிடித்த காரணத்தினால் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கி கொடுக்கும் மனநிலைக்கு வந்துள்ளார். ஏனெனில், அவரும் அவரது இளம் வயதில் ஹூண்டாய் சொனாட்டா வி6 காரை மாடிஃபை செய்து பயன்படுத்தியதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவில் விற்பனையில் இல்லாத டோட்ஜ் சேலஞ்சர் (Dodge Challenger) காரை வாங்க இந்த தந்தை- மகன் துபாய் சென்றனர். இத்தனைக்கும் டோட்ஜ் சேலஞ்சர் காரை வாங்குவதற்கான பணத்தை கூட விற்பவரிடம் வழங்கிவிட்டனர். ஆனால், அதன்பின் இதில் இருக்கும் மோசடிகளை துபாயில் வசிக்கும் தனது நண்பரின் மூலமாக இந்த தந்தை அறிந்துள்ளார்.

ford mustang sports car gifted

அதன்பின்னர்தான், ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) காரின் மீது இவர்களது கவனம் சென்றுள்ளது. இந்தியாவிலேயே மஸ்டங் கார்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றுள் ஒன்றை வாங்குவதற்கு இந்த தந்தை- மகனுக்கு பெரியதாக சிரமமாக இல்லை. இவர்கள் வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ ஃபோர்டு மஸ்டங் கார் கிடையாது; ஏற்கனவே வேறொருவரால் பயன்படுத்தப்பட்ட ப்ரீ-ஒவ்ண்டு கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கும்போது, இந்த தந்தை- மகன் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவார். 18 வயது மகனுக்கு கார் வாங்கிக் கொடுக்க நினைத்ததில் தவறில்லை. ஆனால், அதற்காக அதிவேகத்தில் செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி கொடுத்திருப்பதுதான் சற்று முகம் சுளிக்க வைக்கிறது. ஏனெனில், 18 வயது இளைஞருக்கு போக்குவரத்து விதிமுறைகளை பற்றிய எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என சொல்ல முடியாது அல்லவா.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 12:25 [IST]
English summary
Ford mustang sports car gifted by father to his 18 year old son
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X