மஸ்டாங் பொன்விழாவுக்கு ஸ்பெஷல் வாட்ச்: ஃபோர்டு அறிமுகம்
ஃபெராரி, போர்ஷே, பென்ட்லீ என விலையுயர்ந்த கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது கார்களின் முக்கிய தருணங்களில் ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரங்களை வெளியிடுவது வழக்கம். காரை போன்றே அந்த கைக்கடிகாரங்களும் பிரத்யேக டிசைன், வசதிகளுடன் வரும். அதற்கு தகுந்தாற்போல் அந்த கைக்கடிகாரங்களின் விலையையும் கார் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
இந்த வரிசையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபோர்டு மஸ்டாங் கார் மார்க்கெட்டுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் விதமாக ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரங்களை ஃபோர்டு விற்பனை செய்ய உள்ளது. டெட்ராய்டை சேர்ந்த ஷினோலா என்ற நிறுவனம் இந்த கைக் கடிகாரத்தை வடிவமைத்துள்ளது.

காஸ்ட்லி தயாரிப்பாளர்
ஷினோலா கைக்கடிகார தயாரிப்பில் மட்டும் அல்ல. விலையுயர்ந்த பொருட்களை தயாரிப்பதில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் சைக்கிள்கள் பிரபல்யமானவை.

கிறிஸ்டல் கிளாஸ்
இந்த கைக்கடிகாரத்தில் கிறிஸ்டல் கண்ணாடியும், உயர் தர தோல் பட்டையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஸ்டாங் சின்னம்
முன்புற கண்ணாடியிலும், பின்புறத்திலும், திருகிலும் மஸ்டாங்கின் 50ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வாசகங்கள் மற்றும் சின்னம் இடம்பெற்றிருக்கிறது.

லிமிடேட் எடிசன்
மொத்தம் 1,000 கைக்கடிகாரங்கள் மட்டும் விற்பனை செய்யப்படும்.

விலை
700 டாலர் விலையில் ஒரு கைக்கடிகாரம் விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








