இந்த வெளிநாட்டு காரங்க நம் இந்தியாவை பற்றி என்ன நினைச்சுனு இருக்காங்க!! வைரலாகிய வீடியோ
இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளமாக கோவா விளங்குகிறது. இந்த நிலையில் சமீபத்தில், கோவாவில் பேருந்து ஒன்றில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் இலவசமாகவும், ஜாலியாகவும் பயணம் செய்யும் நோக்கில் ஒரு காரியத்தை செய்துள்ளனர். அது என்ன என்பதை பற்றியும், இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும் இனி பார்க்கலாம்.
கோவா, பெயரை சொன்னவுடனே நமக்கு தெரியாமலேயே ஓர் குதூகலம் வந்துவிடுகிறது. பார்ப்போரை கவரக்கூடிய கடற்கரைகளும், கடல் உணவுகளை வழங்கக்கூடிய ஓட்டல்களும் தான் கோவா என்றவுடனே நமது நினைவிற்கு வருபவை. கோவா நம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் விரும்பக்கூடிய சுற்றுலா தளம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனாலேயே எப்போது கோவாவிற்கு சென்று பார்த்தாலும் கணிசமான எண்ணிக்கையில் வெளிநாட்டினரை பார்த்துவிடலாம். இவ்வளவு ஏன், கோவாவில் வெளிநாட்டினர் கூட பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பார்க்க முடியும். அதாவது, அரசு பேருந்துகளில், இரயில்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களை பரவலாக பார்க்கலாம். ஆனால் சமீபத்தில், வெளிநாட்டை சேர்ந்த இருவர் தங்களது கோவா பயணத்தை வித்தியாசமாக அனுபவிக்க முயற்சித்துள்ளனர்.
கோவாவில் பேருந்து ஒன்றில் அவர்கள் பயணிக்க விரும்பியுள்ளனர். ஆனால் எல்லாரும் போல் வாசல் வழியாக பேருந்துக்குள் நுழையாமல், பேருந்தின் பின்பக்கத்தில் இருந்த ஏணியில் தொங்கியபடி அவர்கள் இருவரும் பயணம் செய்துள்ளனர். கோவாவில், மபுசா என்ற பகுதியில் அந்த வெளிநாட்டினர் இருவரும் இவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை கீழே காணலாம்.
பேருந்தின் மீது ஏற பயன்படுத்தப்படும் இரு ஏணிகளில் ஆளுக்கு ஒன்றாக ஆண், பெண் என வெளிநாட்டை சேர்ந்த இருவர் இருப்பதை வீடியோவில் காணலாம். இதில் ஆண் நபர் அடிக்கடி பேருந்துக்கு முன்னால் எட்டிப்பார்ப்பதை பார்க்க முடிகிறது. அதாவது, பேருந்தின் ஓட்டுனர் அல்லது நடத்துனர் தங்களை பார்த்துவிட்டனரா என்பதை அவர் கவனிப்பதுபோல் இருக்கிறது.
ஆக, இவர்கள் இருவரும் பேருந்தில் பயணச்சீட்டை பெறாமல் திருட்டுத்தனமாக பயணம் செய்துள்ளனர். முறையாக பயணச்சீட்டை பெற்று இருந்தாலும், எந்தவொரு பேருந்து நடத்துனரும், ஓட்டுனரும் எவரொருவரையும் இவ்வாறு பயணிக்க அனுமதிக்கமாட்டர். ஏனெனில், பேருந்து மட்டுமின்றி, எந்தவொரு வாகனத்திலும் இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

வெறும் 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவை, பேருந்து வளைவில் திரும்பும்போது, பின்னால் வேறொரு வாகனத்தில் இருந்தவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். வீடியோவின் இறுதியில், பேருந்து வேறொரு திசையில் திரும்புவதை அறிந்த அந்த வெளிநாட்டினர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழிறங்கியுள்ளனர். பேருந்தில் இவ்வாறு யாரும் பயணம் செய்ததை பார்த்தத்தில்லை என பச்சையாக பொய் சொல்ல மாட்டோம்.
ஏனெனில், பழைய சினிமா திரைப்படங்களில் இவ்வாறு பேருந்தில் பயணிக்கும் காட்சிகளை பார்க்க முடியும். சிலர் நேரில் கூட பார்த்திருப்பீர்கள். சில கிராம புறங்களில் இப்போதும்கூட சிலர் (குறிப்பாக சிறுவர், சிறுமியர்) இவ்வாறு பேருந்தில் பயணம் செய்வதை பார்க்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் பேருந்துகளில் இவ்வாறு பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கோவா ரொம்ப காலமாகவே பிரபலமான சுற்றுலா தளமாக விளங்குவதால், கடந்த காலங்களில் இருந்து செலவு மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. குறிப்பாக, தலைநகர் பனாஜியில் தெரியாத்தனமாக ஆட்டோ, டாக்ஸியில் ஏறிவிட்டால், பணத்தை தண்ணீர் போல் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனாலேயே, இப்போதெல்லாம் கோவாவிற்கு செல்வோர் வாடகைக்கு பைக், கார் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சுற்றுலா கொண்டாட்டத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாறு பேருந்தில் பயணிக்க வேண்டும் என தோன்றுவது இயல்புதான். ஆனால், இவ்வாறு தோன்றிய அடுத்த வினாடியே இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதும் நினைவிற்குவர வேண்டும். அதிலிலும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications
