புல்லட்டுகளை கையோடு ஜெர்மனி கொண்டு சென்ற பென்ஸ் முன்னாள் தலைவர்!

சொந்தமாக தான் வைத்திருந்த 2 புல்லட் மோட்டார்சைக்கிள்களை ஜெர்மனிக்கு கையோடு எடுத்துச் சென்றுள்ளார் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் ஹோனேக்.

பென்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்து வந்த பீட்டர் ஹோனேக் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பென்ஸின் இந்திய வர்த்தக விவகாரங்களை அவர் இரண்டு ஆண்டுகள் கவனித்து வந்தார்.

அப்போது இரண்டு ராயல் என்பீல்டு டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிளை சொந்தமாக வாங்கி வைத்திருந்தார். மேலும், ஓய்வு நேரங்களில் இந்த மோட்டார்சைக்கிளில் செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

இந்த நிலையில், அவர் ஜெர்மனியிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு நவம்பரில் நாடு திரும்பினார். அப்போது, தான் வைத்திருந்த 2 ராயல் என்பீல்டு டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிள்களையும் கையோடு ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றுள்ளார். தோற்றம், வண்ணம், கையாளுமை, பவர் என அனைத்திலும் தன்னை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் கவர்ந்து விட்டதாக அவர் தனது சக அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.

வீர வரலாற்றை நினைவூட்டும் வண்ணம்

வீர வரலாற்றை நினைவூட்டும் வண்ணம்

போர்க்காலத்தில் பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் வீரர்களின் போராட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் ஈடுஈணையற்ற பணிகளை நினைவுகூறும் வகையில், கிளாசிக் டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிள் பிரத்யேக மணல் வண்ணத்தில், வடிவமைப்பில் சில பழைமை நினைவூட்டும் சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

27.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 499சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் எரிபொருள் உள்செலுத்தும் தொழில்நுட்பத்துடன் ட்வின் ஸ்பார்க் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ஸ்பீடோமீட்டர், எரிபொருள் குறைவு குறித்த எச்சரிக்கை மானி ஆகியவை உண்டு. கிளாசிக் ஆங்கில எழுத்துருக்கள் பளிச்சென தெரிகின்றன.

இருக்கை

இருக்கை

சொகுசாகவும், சாவகாசமாகவும்அமர்ந்து ஓட்டுவதற்கு வகை செய்யும் வகையில் ஒற்றை சேடில் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

 சைலென்சர்

சைலென்சர்

ஆஃப்ரோடுகளில் பயன்படுத்துவதற்கு 1950களின் வடிவமைப்பை நினைவுப்படுத்தும் டிசைன் கொண்ட குட்டை சைலென்சர் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

பழமையை நினைவூட்டும் வகையில் கிராஃப்ட் வேலைப்பாடு கொண்டிருக்கிறது. மேலும், பிளாஸ்டிக் பேடுகள் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் கவர்ச்சியை தரும். 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறம் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இது 187 கிலோ எடை கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லும். அதிவேகத்தில் சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்ட மோட்டார்சைக்கிள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

ரூ.1.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 30, 2013, 12:10 [IST]
English summary
Former Mercedes-Benz India boss Peter Honegg had bought two Royal Enfield Desert Storm Motorcycles. He has taken both the bikes to Germany after he moved out of India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+