விபத்தில் சிக்கிய முன்னாள் முதலமைச்சரின் கார்... தெய்வமாக இருந்து காப்பாற்றிய கார்? அவங்களோட தயாரிப்பா இது?
முன்னாள் முதலமைச்சரின் வாகனம் மிக மோசமான விபத்தில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், அவர் அதிர்ஷ்டவசமாக ஆபத்தின்றி தப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பெரிய அளவில் ஆபத்தின்றி தப்பிப்பதற்கு அவர் பயன்படுத்திய காரே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. அப்படி என்ன கார் அது? இந்த நிகழ்வுகுறித்து இன்னும் பல முக்கிய விபரங்களையே இந்த பதவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி. இவருடைய காரே கடந்த வியாழன் அன்று விபத்திற்குள்ளாகி இருக்கின்றது. அனந்த்நாக் செல்லும் வழியிலேயே இந்த மோசமான விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த தகவலை இதிஜா முஃப்தி, மெஹபூபா முஃப்தியின் மகளும் உறுதி செய்திருக்கின்றார். அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், "முஃப்தியின் கார் மிக மோசமான விபத்தச் சந்தித்தது. நல்லவேளையாக அவரும், அவருடைய பாதுகாவலர்களும் பெரிய அளவில் காயங்கள் இன்றி தப்பினர்" என குறிப்பட்டுள்ளார்.
சமீத்தில் காணாபால் பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் காயமடைந்த பொதுமக்களைச் சென்றபோதே மிக மோசமான விபத்தை மெஹபூபா முஃப்தியின் கார் சந்தித்து இருக்கின்றது. அதிக வேகமாக வந்த உள்ளூர் வாசி ஒருவருடைய காரிலேயே முஃப்தியின் கார் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.

இந்த மோசமான விபத்தில் முஃப்தியின் கார் மிக கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. சொல்லப் போனால் காரின் முன் பக்கத்தின் ஒரு பகுதி மிக மோசமாக விபத்தால் உருக்குலைந்து போயிருக்கின்றது. இத்தகைய மோசமான விபத்தில் இருந்து முஃப்தியும், அவருடைய பாதுகாவலர்களும் தப்பி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த மாபெரும் விபத்தில் இருந்து காப்பாற்றி இருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் விபத்தில் இருந்து அனைவரையும் காத்திருப்பது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். ஆஃப்-ரோடு டிராவலுக்காக அறியப்படும் கார் மாடல்களில் ஸ்கார்பியோவும் ஒன்றாகும். இந்த கார் ஆஃப்-ரோடு டிராவலுக்கு மட்டுமல்ல அதிக பாதுகாப்பான டிராவலுக்கு உகந்ததாகும்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாகவும் ஸ்கார்பியோ காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவே மஹிந்திரா உலக சந்தைக்காக தயாரித்த முதல் கார் மாடலாகும்.
இப்போது விற்பனையில் இருக்கும் புதிய வெர்ஷன் ஸ்கார்பியோவும் அதிக பாதுகாப்பு மற்றும் சிறந்த செயல்திறனுக்காக அறியப்படும் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இப்போது ஸ்கார்பியோ இரண்டு விதமான பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரிலும், மற்றொன்று ஸ்கார்பியோ என் எனும் பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது.
ஆனால், ஸ்கார்பியோ கிளாசிக்-ஐக் காட்டிலும் ஸ்கார்பியோ என் மாடலுக்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் அதிக கவர்ச்சியான மற்றும் பெரிய உருவத்தை ஸ்கார்பியோ என் கொண்டிருப்பதே ஆகும். இதுதவிர, இதில் கூடுதல் சிறப்பு அம்சங்களையும் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
ஸ்கார்பியோ கிளாசிக் ரூ. 13.58 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் இருந்தும், ஸ்கார்பியோ என் ரூ. 14.49 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த புதிய வெர்ஷன்களும் பாதுகாப்பிற்கு பெயர்போன கார் மாடல்களாகக் காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னாள் முதல்வரின் கார் விபத்தில் சிக்கி இருப்பது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விபத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கும் அவர், தற்போது ஆளும் அரசிடம், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








