பழமையான யமஹா பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறிய கிரிக்கெட் பிரபலம்!! அச்சச்சோ... இவருக்கே இந்த நிலைமையா!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எந்தவொரு அறிமுகமும் தேவையே இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு நாடு முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கக்கூடியவர். தோனிக்கு எந்த அளவிற்கு கிரிக்கெட்டின் மீது ஆவல் உள்ளதோ அதே அளவிற்கு மோட்டார்சைக்கிள்களின் மீதும் பைத்தியமாக இருக்கக்கூடியவர் என்பது ஊரறிந்த விஷயம்.

அதிக தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த மாடர்ன் பைக்குகளில் மட்டுமின்றி, கிளாசிக் தோற்றம் கொண்ட பழமையான பைக்குகளிலும் இந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் காட்சி தந்துள்ளதையும் வீடியோக்களிலும், படங்களிலும் பார்த்துள்ளோம். இந்த வகையில் எம்.எஸ் தோனியிடம் உள்ள பழமையான பைக்குகளுள் ஒன்று யமஹா ஆர்டி350. தோனிக்கு மட்டுமல்ல, இந்த பழமையான யமஹா பைக் எவரொவரது பேவரட் பைக்குகள் லிஸ்ட்டிலும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் பழைய பைக்குகளில் பிரச்சனை எப்போது வேண்டுமென்றாலும் நிகழலாம் என்ற சூழலே இருக்கும்.

இதில் தோனியின் எம்டி350 பைக் மட்டும் என்ன விதிவிலக்கா... தோனி தனது எம்டி350 பைக்கை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பொது மக்கள் செல்வதற்கு அனுமதி மறுப்பட்ட ஓர் மூடிய பகுதிகளுக்கு எம்டி350 பைக்கை தனது கால்களால் நகர்த்தியப்படி செல்லும் அவர் பின்னர் சற்று தூரத்திற்கு சென்று கிக்கர் மூலமாக ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னர் டேங்க் சோக்கை செக் செய்துவிட்டு, மீண்டும் கிக்கரை மிதிக்கிறார், இம்முறை பைக் ஸ்டார்ட் ஆகிவிடுவதுபோல் வீடியோவில் பார்க்க முடிகிறது.

ஆனால் உண்மையில், இந்த வீடியோவில் தோனியின் முகத்தை பார்க்க முடியவில்லை. இதில் இருந்து இது தோனி தானா என நமக்கு சந்தேகம் எழாமல் இல்லை. ஆனால் வீடியோ துவங்கும்போது வீடியோவை பதிவிட்டவர் ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் தோனியின் வீட்டிற்கு அருகேயே பல மணிநேரமாக அவரை பார்க்க காத்திருந்துள்ளார், அதுமட்டுமின்றி தோனியாக இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் நபர் பைக்கை ஸ்டார்ட் செய்வதை, கேட்டிற்கு வெளியே இருந்து வீடியோவாக காட்சிப்படுத்துவதை அங்கிருக்கும் வாட்ச்மேன் தடுத்து நிறுத்துகிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இது எம்.எஸ் தோனியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வீடியோ ஆனது வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு தோனி வரும்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புற கேட்டை அடையும் வரையில் இயங்கி கொண்டிருந்த தோனியின் யமஹா ஆர்டி350 பைக் வளாகத்திற்குள் நுழைந்த பின் ஆஃப் ஆகியுள்ளது. ஆர்டி350 பைக்கை பொறுத்தவரையில், இது இந்தியாவில் 1973இல் இருந்து 1975 வரையில் என வெறும் 2 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்த 2-ஸ்ட்ரோக் யமஹா பைக் ஆகும்.

பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறிய கிரிக்கெட் பிரபலம்!!

வெறும் 2 வருடங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும், அந்த குறுகிய காலத்திலேயே பலத்தரப்பட்ட ரசிகர்களை பெற்ற யமஹா தயாரிப்பு வாகனம் இதுவாகும். ஆர்டி350 பைக்கில் 348சிசி, ட்வின்-சிலிண்டர் என்ஜினை யமஹா நிறுவனம் பொருத்தி வந்தது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎஸ் மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த கிளாசிக் பைக் மட்டுமின்றி, யமஹாவின் மற்றொரு கிளாசிக் தோற்றம் கொண்ட மோட்டார்சைக்கிளான ஆர்.எக்ஸ்100 -உம் எம்.எஸ் தோனியிடம் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கூறியதுபோல் இந்த கிளாசிக் பைக்குகள் மட்டுமில்லாமல் ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய், கவாஸாகி நிஞ்சா எச்2 மற்றும் மிகவும் பிரத்யேகமான மோட்டார்சைக்கிளான கான்ஃபெடேரேட் எக்ஸ்132 ஹெல்கட் வாகனங்களும் மகேந்திர சிங் தோனியிடம் உள்ளன. மோட்டார்சைக்கிள்கள் போன்று எஸ்யூவி கார்கள் மற்றும் கிளாசிக் கார்களை வாங்கி பயன்படுத்துவதையும் விரும்பக்கூடியவரான தோனியிடம் ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோவ், போண்டியாக் ட்ரான்ஸ்-அம், ஹம்மர் எச்2, நிஸான் 1 டன் என ஓர் ஆட்டோமொபைல் பிரியர் எத்தகைய வாகனங்களை வாங்குவோரா அத்தகைய வாகனங்கள் உள்ளன.

இவை எல்லாவற்றையும் விட 1969இல் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு மஸ்டங் கார் ஒன்றையும் இந்த முன்னாள் கேப்டன் தனது கேரேஜில் கொண்டுள்ளார். தோனியின் கேரேஜில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கார் கியா இவி6 எலக்ட்ரிக் கார் ஆகும். இந்தியாவில் கியாவின் முதல் எலக்ட்ரிக் காரான இவி6 கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில், தோனியிடம் மட்டுமின்றி, ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கேதார் ஜாதவ் உள்ளிட்டோரிடம் உள்ளது. கியா இவி6 ஆனது இந்தியாவில் வெறும் 200 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, January 3, 2023, 14:43 [IST]
English summary
Former cricket captain ms dhoni struggling to start his yamaha rd350 bike viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+