சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ்.. அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வச்சுருக்கிறாரு!

சச்சின், விராட் கோஹ்லியைப் போன்றே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் பல விலையுயர்ந்த சொகுசு கார்களை தன் வசம் வைத்துள்ளார். அவர் வைத்துள்ள சொகுசு கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெருவாரியானோர் கிரிக்கெட் மீது எந்த அளவிற்கு பற்று வைத்திருக்கின்றனரே, அதற்கு ஈடான வகையில் கார்கள் மீதும் அளவு கடந்த மோகம் வைத்திருக்கின்றனர்.

அந்தவகையில், இதற்கு முன்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தல தோனி மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்ட பலர் வைத்திருக்கும் கார்கள் பற்றிய தகவலை நாம் பார்த்திருக்கின்றோம்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

இந்நிலையில், இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் யுவராஜ் சிங் வைத்திருக்கும் விலையுயர்ந்த மற்றும் லக்சூரியஸ் கார்களைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங்கிடம் லம்போர்கினி முர்சிலாகோ முதல் பென்ட்லீ கான்டினென்டல் வரையிலான ஏராளமான சொகுசு கார்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து, அவரது வாகன நிறுத்தத்தில் எந்தெந்தவிதத்திலான கார்கள் இருக்கின்றன என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம்

யுவராஜ் சிங் பயன்படுத்தும் மிகவும் கவர்ச்சிகரமான கார்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் கார் முன்னிலை வகிக்கின்றது. இந்த காரை செகண்ட் ஹேண்டாகதான் அவர் வாங்கியுள்ளார். முன்னதாக இந்த கூப்-எஸ்யூவி ரக எக்ஸ்6எம் காரை டிசி நிறுவனத்தின் தலைவர் திலிப் சப்பாரியா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கும் இந்த கார் ஹரியானா மாநிலத்தின் பதிவெண்ணுடன் காணப்படுகின்றது. மேலும், அவர் பெரும்பாலும் வலம் வருவதற்கு இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்ட இந்த கார் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.2 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ எம்3 கன்வெர்டிபிள்

யுவராஜ் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இ46 எம்3 என்ற மாடலையும் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் இந்த வரிசையில் வந்த மிகவும் ஸ்பெஷலான ஓர் மாடலாகும். இதன் ஸ்பெஷல் அம்சங்களின் காரணமாக பல கார் பிரியர்களின் மிகவும் பிடித்தமான மாடல்களில் ஒன்றாக காட்சியளிக்கின்றது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

யுவராஜ் வைத்திருக்கும் எம்டபிள்யூ இ46 எம்3 கார் ஃபீனிக்ஸ் மெட்டாலிக் ஷேட் நிறத்திலானது. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. யுவராஜ் இதனை ஸ்பெஷலாக இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். அத்துடன், இதன் நிறம் மற்றும் ஒரு சில தோற்றங்களை மாடிஃபை செய்துள்ளார்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ எம்5 இ60

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மற்றுமொரு ஸ்பெஷல் மாடலாக காட்சியளிக்கும் இ60 எம்5 மாடலையும் யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார். இது அதன் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைப் பெற்ற மாடலாக காட்யளிக்கின்றது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வடிவமைப்பாளரான கிறிஸ் பேங்கிள் இ60 எம்5 மாடலுக்கு கிடைத்த பிரத்யேக தோற்றத்திற்கு காரணமானவராக காட்சியளிக்கின்றார்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

அந்தவகையில், ஹெட்லேம்புகளுக்கு மேல் எல்இடி மின் விளக்கால் உறுவாக்கப்பட்ட புருவம் போன்ற தோற்றம் இந்த மாடலில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இது வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இந்த காரில் மற்றுமொரு சிறப்பு வசதியாக ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங் இணைக்கப்பட்டுள்ளது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ இ60 எம்5 காரில் 5.0 லிட்டர் வி10 நேட்சுரல்லி அஸ்பயர்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இந்த காரில் லாஞ்ச் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் காணப்படுகின்றன.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பிஎம்டபிள்யூ எம்5:

யுவராஜ் சிங் சமீபகாலத்திற்கு முன்புதான் பிஎம்டபிள்யூ எஃப்10 எம்5 காரை பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். இந்த கார் முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்ட சொகுசு வசதியைக் கொண்ட கார் என சமூக வலதள பதிவுகள் கூறுகின்றன.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

யுவாரஜ் வைத்திருக்கும் பெரும்பாலான கார்களுக்கு கடல் நீல நிறம் வழங்கப்பட்டிருப்பதைப் போன்ற இந்த காருக்கும் இதே வண்ணம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 5.0 லிட்டர் வி10 எஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இது 500 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர்

யுவராஜ் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்களில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரும் ஒன்று. இது அதிக சொகுசு வசதிகள் கொண்ட ஓர் மாடலாகும். இதனால், பெரும்பாலான நேரங்களில் யுவராஜ் இந்த காரை பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

இந்த காரின் உட்பகுதிக்கு மரண மாஸாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் இருக்கை முதல் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்க வழி வகுக்கின்றது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

பென்ட்லீ நிறுவனத்தின் ஃப்ளையிங் ஸ்பர் கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், மிகப்பெரிய எஞ்ஜின் திறனான 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்ஜினைக் கொண்ட மாடலைதான் யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார். இது அதிகபட்சமாக 616 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

ஆடி க்யூ 5

ஆடி க்யூ 5

யுவராஜ் சிங்கிற்கு இந்த ஆடி க்யூ 5 மாடல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளரான ஆடியே வழங்கியுள்ளது. இவர், கடந்த 2011ம் ஆண்டு வேர்ல்டு கப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வழங்கியதற்காக அந்நிறுவனம் இத்தகைய பரிசை வழங்கி கவுரவித்தது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

ஆடி க்யூ5 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகசு கார்களில் ஒன்றாகும். இந்த காரின் வடிவமைப்பு மற்றும் லக்சூரி வசதிகள் அனைவரும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதன்காரணமாகவே, இந்தியாவில் அதிகப்படியானோரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

மேலும், கூடுதல் சிறப்பாக இந்த கார் இந்தியாவிலேயே வைத்து அசெம்பிள் செய்யப்படுகின்றது. தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் இந்த கார் கிடைக்கின்றது.

பிஎம்டபிள்யூ 3 செரீஸ்

பிஎம்டபிள்யூ 3 செரீஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் 3 செரீஸ் கார் முதன்மை இடத்தில் இருக்கின்றது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் இதன் இ90 3 செரீஸ் மாடலைதான் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் டீசல் எஞ்ஜின் பவர்டிரெயினைக் கொண்டது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

இந்த காரின் பின் இருக்கை மிக அதிகமான சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த மாடலின் புத்தம் புதிய தலைமுறை அறிமுகம் செய்ததன் காரணமாக முந்தைய மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிவிட்டது.

லம்போர்கினி முர்சிலகோ

லம்போர்கினி முர்சிலகோ

யுவராஜிடம் இருக்கும் கார்களிலேயே அதிவேகம் செல்லக்கூடிய காராக லம்போர்கினி முர்சிலகோ இருக்கின்றது. எனவே, இந்த காரை அவ்வப்போது சாலையில் கெத்துக் காட்டுவதற்காக யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார்.

அந்தவகையில், புத்தா இன்டர்நேஷனல் சர்க்கிளில் இவரை இந்த காருடனம் அவ்வப்போது காண முடியும் என கூறப்படுகின்றது.

சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..!

ஆரஞ்சு நிறத்திலான இந்த காரில் 6.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 631 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த காரின் உற்பத்தியை லம்போர்கினி நிறுவனம் தற்போது நிறுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

இதேபோன்று, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியிடம், எத்தனை விதமான லக்சூரி கார்கள் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோக்களை இந்த பதிவில் காணலாம்.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனான விராட் கோஹ்லி, மைதானத்தில் எதிரணியினர் வீசும் பந்தினை விலாசி அடிக்கும் காட்சியினைப் பார்த்திருப்போம். இதுபோன்று, அவர் கிரிக்கெட் போட்டியில் செய்த சில சாதனைகள் காரணமாகவே, அவருக்கு ரசிகர்கள் ஏரளமாக இருக்கின்றனர்.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

அதேசமயம், கோஹ்லிக்கு கிரிக்கெட்டைப்போன்றே, வேறொன்றின்மீதும் ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விராட்டுக்கு லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

அதற்கேற்ப, அவரின் கேரேஜில் பல விதமான லக்சூரி கார்கள் இருப்பதை சில புகைப்படங்கள் நிரூபிக்கின்றன. இதனை மேலும் நிரூபிக்கும் விதமாக சமீபகாலமாக சில வீடியோக்கள் யுடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோஹ்லியின் கேரேஜில் அதிநவீன சொகுசு கார்கள் இருப்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

இதேபோன்று, விராட் கோஹ்லி, ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இதன்காரணமாக, அவரது கேரேஜில் அதிகமாக ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, விராட்டின் கேரேஜில் எந்தமாதிரியான சொகுசு கார்கள் இருக்கிறது என்பதை வீடியோவுடன் இந்த பதிவில் காணலாம்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

விராட் கோஹ்லி பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி காரை கடந்த வருடம் செகண்ட்-ஹேண்டாக வாங்கியுள்ளார். இந்த காரை அவர் அதிகம் வீட்டை விட்டு வெளியேச் செல்லும்போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவரை இந்த காருடன் சாலையில் வைத்து பார்த்திருப்பதாக, விராட் கோஹ்லி குடியிருக்கும் பகுதியில் வாழும் மக்கள் சிலர் கூறுகின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ.3.84 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

இந்த காரில், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 660என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வோக் காரையும் விராட் கோஹ்லி பயன்படுத்தி வருகிறார். இந்த வோக் கார் வெண்மை நிறத்தில் வோக் காரை அவர் நகர்புற பகுதியில் சுற்றித் திரியும் பயன்படுத்தவார் எனக் கூறப்படுகிறது. இந்த வோக் காரானது, இந்தியாவில் டாப் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகும்.

இந்த காரில் 4.4 லிட்டர் எஸ்டிவி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 335 பிஎச்பி பவர் மற்றும் அதிகபட்சமாக 740 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த காருக்கு விராட் கோஹ்லி அவருக்கு பிடித்தமான 1818 என்ற பதிவெண்ணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ!

ஆடி எஸ்5

ஆடி நிறுவனம், அதன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காரான ஆடி எஸ்5 மாடலை கோஹ்லிக்கு வழங்கியுள்ளது. அவரை ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து இந்த சிறப்பு பரிசினை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கார் இந்தியாவில், ரூ.70.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. ஆடி எஸ்5 காரில் 349 பிஎச்பி பவரையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் சிறப்பம்சமாக அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடி ஆர்எஸ்5

ஆடி ஆர்எஸ் 5 காரை விராட் கோஹ்லி அவரது குடம்பத்தினர் பயணம் செய்வதற்காக வாங்கியுள்ளார். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அடங்கிய மாடலாக இருக்கின்றது. இதனை ஆடி நிறுவனம் ரூ.1.1 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த காரில் 2.9 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இந்த கார் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.9 விநாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபராகவும் விராட் கோஹ்லி உள்ளார்.

ஆடி ஆர்8: விராட் கோஹ்லியிடம் இருக்கும் ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல் கார் என்றால் அது இந்த ஆடி ஆர்8 மாடல் தான். இந்த ஆர்8 லேட்டஸ்ட் வெர்ஷனை அவரது வெண்மை நிற ஆர்10 ஆடி காரை ரிபிளேஸ் செய்து வாங்கியுள்ளார். விராட்டுக்கு மிகவும் பிடித்தமான இந்த காரை அவர் எப்போதாவது தான் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட சிலவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்

Source: Cartoq

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former Cricketer Yuvraj Singh Car Collection. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more