பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டியது இவரா? எவ்வளவு பெரிய இடத்துல இருந்து இந்த வேலைக்கு ஏன் வந்தாரு?

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தற்போது பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் பெருநகரங்களில் நகர்ப்புறத்திற்குள்ளான போக்குவரத்துக்கு மக்கள் பல்வேறு விதமான வசதிகளை எதிர்பார்க்கின்றார்கள். கூட்ட நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு கேப் உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறைவான விலையில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு சிறந்த சேவையாக இருக்கிறது.

google ex employee bike taxi

சென்னை,பெங்களூர், மும்பை டெல்லி போன்ற பெரு நகரங்களில் எல்லாம் இந்த பைக் டாக்ஸி சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இதன் படி பைக் ரைடர் ஒருவர் தனது பைக்கில் ஒரு பயணியை ஏற்றுக்கொண்டு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு பைக்கில் கொண்டு சென்று விடுவதன் மூலம் அதற்கான பணத்தை பெற்றுக் கொள்கிறார்.

இந்த சேவை பெருநகரங்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணித்த பயணி ஒருவர் தனது பைக் டேக்ஸி டிரைவர் குறித்த ஒரு ஆச்சரியமான பதிவு ஒன்றை தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இவர் பதிவு செய்துள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

google ex employee bike taxi

இந்த பதிவின்படி பதிவு டாக்ஸியில் பயணம் செய்யும்போது அவர் தனது பைக் டாக்ஸி டிரைவருடன் பேசியுள்ளார். அப்பொழுது அவர் இதற்கு முன்னர் ஹைதராபாத்தில் கூகுள் நிறுவனத்திடம் பணியாற்றியதாகவும், தற்போது அங்கிருந்து நீங்கி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெங்களூர் வந்ததாகவும், பெங்களூரு சிட்டியை சுற்றி பார்ப்பதற்காக இப்படியாக பைக் டாக்ஸியில் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பலரிடம் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர் ஏன் பைக் டாக்ஸி டிரைவராக ஓட்டி வருகிறார்? என கேள்வி எழுந்துள்ளது. இந்த பதிவில் பதிவை பதிவிடும் போது அவரது பைக் டாக்ஸி டிரைவர் குறித்தது எந்த தகவலையும் வெளியிடவில்லை. அவரது புகைப்படம், பெயர் அடையாளம் என எதையுமே அவர் குறிப்பிடாமல் பொதுவாக வெளியிட்டு இருந்தார்.

google ex employee bike taxi

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பலர் இப்படியாக தங்கள் வேலைகளை விட்டுவிட்டு சில காலம் ஓய்வு எடுக்கலாம் அல்லது தனக்கு பிடித்த விஷயத்தை செய்யலாம் என ஏதாவது வித்தியாசமாக செய்து வருகின்றனர். அப்படியாக குறிப்பிட்ட இந்த பைக் டாக்ஸி டிரைவரும் சில நாள் இந்த பைக் டாக்ஸி டிரைவர் வேலையும் எப்படி தான் இருக்கிறது என பார்ப்போம் என்பதற்காக இதை செய்யலாம் என சில கருத்துக்கள் போட்டிருந்தனர்.

இந்தியாவில் பைக் டாக்ஸி சேவை என்பது இன்று வரை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படாத சேவையாக தான் இருக்கிறது. இந்தியாவில் பைக்குகள் எல்லாம் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு அதன் மூலம் டாக்ஸி சேவை நடத்துவது என்பது சட்டவிரோதமானது என பைக் டாக்ஸி சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

மேலும் இந்த பைக் டாக்ஸி சேவைகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிறது என்றும் பலர் குறிப்பிடுகின்றனர். இதனால் அவ்வப்போது பைக் டாக்ஸி அரசு தடை விதித்தும் அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடந்தும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு தேவையான இருக்கும் நிலையில் இதை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலைதளங்களில் அவ்வப்போது இப்படியாக சில விஷயங்கள் வைரலாகும் அப்படியாக தான் இந்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பைக் டேக்ஸி ஓட்டும் வீடியோவும் வைரலாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை தன்மை கொண்ட தகவல் என்பது தெரியவில்லை. எக்ஸ் பயனர் தனது பதிவில் போட்ட தகவலின் அடிப்படையிலேயே இது வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 16:05 [IST]
English summary
Former google employee takes up role as a bike taxi rider in bengaluru
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X