பல லட்சங்களில் விலை கொண்ட எலக்ட்ரிக் காரை வாங்கி மாஸ் காட்டியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்! இன்ஸ்டாவில் பதிவு
புதியதாக லக்சரி கார்களை வாங்குவது விஐபி-களுக்கு பெரிய விஷயமே கிடையாது. வீட்டில் ஏற்கனவே 2,3 சொகுசு கார்கள் இருப்பினும், புதியதாக ஒரு காரை வாங்கி போடுவர். அதேநேரம் சில முக்கிய பிரபலங்களும் மிடில்-கிளாஸினரை போன்று குறிப்பிட்ட ஒரு காரின் மீது நீண்ட காலமாக தீராத ஆவல் கொண்டு பின்னர் ஒருவழியாக அந்த காரை வாங்குவர்.
அப்படிதான், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்சமயம் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான முரளி கார்த்திக் புதியதாக எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுத்துள்ளார். இவர் டெலிவிரி எடுத்திருப்பது கடந்த 2022 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை ஆகும். மேலும், ஷோரூமில் காருடன் எடுக்கப்பட்ட படத்தையும் முரளி கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது #உங்களால்முடிந்ததைமாற்றுங்கள் பயணத்தை எம்ஜி இசட்.எஸ் இவி உடன் துவங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சில எலக்ட்ரிஃபையிங் டிரைவிங்குகளையும், மறக்க முடியாத பயண அனுபவங்களையும் எதிர்நோக்கி உள்ளேன்" என கூறியுள்ள முரளி கார்த்திக் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மென்சன் செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான முரளி கார்த்திக் வெளியிட்டுள்ள படத்தில் கார் ஹரியானா மாநிலத்தின் நம்பர் பிளேட்டை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இசட்.எஸ் இவி-ஐ பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி மோட்டார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள முதல் மற்றும் தற்போதைக்கு ஒரே எலக்ட்ரிக் கார் இதுவாகும். ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகும் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.22.98 லட்சத்தில் இருந்து ரூ.27 லட்சம் வரையில் உள்ளன. இந்த விலைகளில் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி இசட்.எஸ் இவி சந்தையில் கிடைக்கிறது.
கடந்த 2022 மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட அப்டேட்களின்படி, குறிப்பாக இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கம் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அப்கிரேட்களின் ஒரு பகுதியாக, சார்ஜ் செய்யும் பகுதி ஆனது 'MG' லோகோவிற்கு இடதுபக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் முன்பக்க பம்பர் சில பல க்ரோம் ஹைலைட்களுடன் காரின் முழு அகலத்திற்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் புதியவைகளாக 17 இன்ச்சில் மெஷின் கட்டில் வடிவமைக்கப்பட்டவைகளாக வழங்கப்படுகின்றன.

இந்த சக்கரங்களுக்கு அப்டேட்டான 5-ஸ்போக் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்கள் கடந்த சில வருடங்களாகவே அப்படியே தான் உள்ளது என்றாலும், எல்இடி டிஆர்எல்-கள் முன்பை காட்டிலும் கூர்மையானதாக கடந்த 2022 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை தவிர்த்து காரின் சைடிலும், பின்பக்கத்திலும் பெரியதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், காரின் உட்பக்கம் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்று இருந்தது.
காரின் உட்பக்க கேபின் சில்வர் நிற இன்ளேகள் உடன் முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அத்துடன் சில தொழிற்நுட்ப அம்சங்களும் புதியதாக சேர்க்கப்பட்டன. இதன்படி, வயர்லெஸ் சார்ஜர், 360-கோண பார்க்கிங் கேமிரா, ஹீட்டட் அவுட்சைடு ரியர்வியூ மிரர்ஸ், 7-இன்ச் முழு-டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை புதிய இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பெரிய 50.3 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தேர்வும் புதியதாக இந்த எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 461 கிமீ தொலைவிற்கு இயக்கி செல்ல முடியும். புதிய பேட்டரி தேர்வு மட்டுமின்றி, எலக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச ஆற்றலின் அளவும் அப்கிரேட்டட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்சமயம் விற்பனையில் உள்ள எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 173 எச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம்.


Click it and Unblock the Notifications