Just In
- 1 hr ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- 1 hr ago
தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!
- 2 hrs ago
மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 ஆயிரம் கொடுத்தாலே போதும்!
- 2 hrs ago
விமானங்களில் உணவு டேஸ்ட்டா இருக்காது... ஏன் தெரியுமா? மத்தவங்க மாதிரி நீங்களும் விமான நிறுவனங்களை திட்டாதீங்க!
Don't Miss!
- News
திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை.... விழுப்புரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்!
- Sports
"ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு".. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
யுவராஜ் சிங் இவ்ளோ கோடி குடுத்து புது கார் வாங்கியிருக்காரா? இதுல போறதுக்கு எல்லாம் குடுப்பினை வேணும்!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மிகவும் விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்தவர் யுவராஜ் சிங் (Yuvraj Singh). பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என கிரிக்கெட்டின் 3 முக்கியமான பிரிவுகளிலும் ஒரு கலக்கு கலக்கிய யுவராஜ் சிங்கிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் யுவராஜ் சிங் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரசிகர்!

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பல்வேறு கார்கள் மற்றும் பைக்குகள் யுவராஜ் சிங்கிடம் இருக்கின்றன. இதுபோதாதென்று பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மேலும் ஒரு காரை யுவராஜ் சிங் தற்போது வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) சொகுசு கார் ஆகும். இது புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங்கிற்கு புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை டெலிவரி செய்யும் புகைப்படங்களை, பிஎம்டபிள்யூ சண்டிகர் சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரின் டாப் பெட்ரோல் வேரியண்ட்டை யுவராஜ் சிங் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ட்வின்-டர்போசார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் உருவாக்க கூடிய சக்தியானது, காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த காரில் ஏராளமான சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 'கெஸ்டர் கண்ட்ரோல்ஸ்' (Gesture Controls) மிகவும் முக்கியமானது. இந்த வசதி இருப்பதால், வால்யூமை கூட்டுவது மற்றும் குறைப்பது போன்றவற்றை சைகை மூலமாகவே நீங்கள் செய்து கொள்ள முடியும். இன்னும் பல்வேறு வசதிகளுக்கும் நீங்கள் சைகையை பயன்படுத்தலாம். இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதியும் இந்த காரில் உள்ளது.

மேலும் ஆம்பியண்ட் லைட்டிங், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் லேன் மானிட்டரிங் போன்ற வசதிகளும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரின் ஆரம்ப விலையே 1.18 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.78 கோடி ரூபாயாக இருக்கிறது.

இது புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் பல லட்சங்கள் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை சொந்தமாக்கியுள்ள யுவராஜ் சிங்கிற்கு அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலை தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவர் காரை டெலிவரி பெறும் புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், யுவராஜ் சிங்கிடம் ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ எம்3 இ46 (BMW M3 E46) ஒன்றாகும். இந்த காரை யுவராஜ் சிங் ஓட்டும் புகைப்படங்கள் கடந்த காலங்களில் பலமுறை வெளியாகியுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுடன் கூட இந்த காரில் யுவராஜ் சிங் பயணம் செய்துள்ளார்.

இதுதவிர பிஎம்டபிள்யூ எம்5 இ60 (BMW M5 E60) காரும் யுவராஜ் சிங்கிடம் இருக்கிறது. மேலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் எஃப்86 (BMW X6M F86) காரையும் யுவராஜ் சிங் வாங்கியுள்ளார். இந்த காரில், 4.4 லிட்டர், வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 567 பிஹெச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டி விட கூடிய திறன் வாய்ந்தது. இந்த கார்கள், யுவராஜ் சிங் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

யுவராஜ் சிங் மட்டுமல்லாது, அவரது குருவான சச்சின் டெண்டுல்கரும் கூட பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கு மிகப்பெரிய ரசிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கை போலவே, சச்சின் டெண்டுல்கரிடமும் நிறைய பிஎம்டபிள்யூ கார்கள் இருக்கின்றன. கிரிக்கெட் வீரர்களுடன், திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிஎம்டபிள்யூ கார்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!
-
என்ன சொல்றீங்க... விமானங்களுக்குச் சாவியே கிடையாதா? அப்ப எப்படி விமானத்தை ஸ்டார்ட் பண்ணுறாங்க?