செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் மட்டுமல்லாது, கார் ஓட்டுவதையும் யுவராஜ் சிங் அதிகமாக விரும்ப கூடியவர். கார் ஆர்வலரான யுவராஜ் சிங் ஏராளமான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். இந்த வரிசையில் யுவராஜ் சிங் தற்போது மற்றொரு விலையுயர்ந்த காருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

இம்முறை யுவராஜ் சிங் வாங்கியிருப்பது மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ கார் (Mini Countryman Cooper S JCW) ஆகும். யுவராஜ் சிங்கும், அவரது மனைவி ஹசல் கீச்சும் காரை டெலிவரி எடுத்துள்ளனர். அத்துடன் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் வெளியிட்டுள்ளனர். யுவராஜ் சிங்கின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

யுவராஜ் சிங் காரை சிகப்பு நிறத்தில் தேர்வு செய்துள்ளார். அதன் பானெட் மீது கருப்பு நிற கோடுகளையும் பார்க்க முடிகிறது. இது சிபியூ (CBU - Completely Built Unit) மாடல் ஆகும். அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

யுவராஜ் சிங் தற்போது வாங்கியுள்ள மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ காரின் விலை 42.40 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டீசல் இன்ஜின் தேர்வு இல்லை.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ காரின் இன்ஜின் அதிகபட்சமாக 192 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் 7.5 வினாடிகளில் எட்டி விடும்.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

நாம் ஏற்கனவே சொன்னபடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. கார் ஆர்வலர் என்பதை நிரூபிக்கும் வகையிலான மாடல்களை அவர் தனது கராஜில் நிறுத்தியுள்ளார். இதில், பிஎம்டபிள்யூ எம்3 கன்வெர்டபிள் இ46 கார் மிகவும் முக்கியமானது.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

இதுதவிர பிஎம்டபிள்யூ எம்5 இ60, பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம், ஆடி க்யூ5, லம்போர்கினி முர்சிலாகோ மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி உள்ளிட்ட கார்களையும் யுவராஜ் சிங் சொந்தமாக வைத்துள்ளார். இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் காரை யுவராஜ் சிங் அதிகம் விரும்ப கூடியவர். தனது வீட்டை ஒட்டிய பகுதிகளில் அவர் இந்த காரை அடிக்கடி ஓட்டுவார்.

செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்...

கடந்த காலங்களில் இந்த காருடன் யுவராஜ் சிங்கை பலமுறை பார்க்க முடிந்துள்ளது. இதுதவிர லம்போர்கினி முர்சிலாகோ காருடன் யுவராஜ் சிங் இருக்கும் புகைப்படங்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் தவிர விராட் கோஹ்லி, மஹேந்திர சிங் டோனி போன்றவர்களும் ஏராளமான விலை உயர்ந்த கார், பைக்குகளை வைத்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former Indian Cricketer Yuvraj Singh Buys Mini Countryman Cooper S JCW - Details. Read in Tamil
Story first published: Thursday, December 31, 2020, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X