சாதாரண மனிதர் போல் ஷோரூமுக்கு வந்துட்டு போனது இந்த விவிஐபி -ஆ? அடையாளம் தெரிந்ததும் ஒருத்தருக்கும் கை ஓடல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, சமீபத்தில் இந்த எலக்ட்ரிக் கார்களை கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கிய பிறகே இந்த புதிய மஹிந்திரா கார்களை எவ்வளவு பெரிய பெரிய விவிஐபி-கள் எல்லாம் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இதை ஏன் இப்போது கூறுகிறோம் என்றால், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ (CEO) ஆன பவன் குமார் கோயங்கா (Pawan Kumar Goenka) பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி பெறும் படங்களை பவன் குமார் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

former mahindra ceo buys car

அவர் வெளியிட்டுள்ள படங்களில் முன்னாள் சிஇஓ என்கிற மரியாதை உடன் சம்பந்தப்பட்ட ஷோரூம் அதிகாரிகளும், பணியாளர்களும் பவன் குமார் கோயங்கா உடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், "நாங்கள் இப்போது எக்ஸ்இவி 9இ காரின் பெருமைக்குரிய உரிமையாளர்கள்.

இன்னும் பலவற்றுடன், இந்த கார் வாக்குறுதி அளித்த அனைத்தையும் வழங்குகிறது. இந்த அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் நிறைந்த தலைசிறந்த படைப்பை உருவாக்கியதற்காக மஹிந்திராவுக்கு நன்றி" என பவன் குமார் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும் இந்த எக்ஸ் பதிவில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் மற்றும் விவசாய உபகரணங்கள் வணிகத்திற்கான தற்போதைய சிஇஓ ராஜேஷ் ஜேஜுரிகரின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

former mahindra ceo buys car

முன்பு, பவன் குமார் கோயங்கா பார்த்த அதே வேலையை தான் தற்போது ராஜேஷ் ஜேஜூரிகர் கவனித்து வருகிறார். பவன் குமார் கோயங்கா தனது எக்ஸ் பதிவில், மஹிந்திரா க்ரூப் (Mahindra Group)-இன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தையும் டேக் செய்துள்ளார். மஹிந்திரா & மஹிந்திராவில் ஆட்டோமொபைல் & விவசாய உபகரணங்கள் வணிகத்திற்கான நிர்வாக இயக்குனராக இருந்த சமயத்தில், கூடுதல் பொறுப்பாக சாங்யாங் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக தலைவராகவும் பவன் குமார் கோயங்கா பணியாற்றினார்.

தென்கொரிய கார் நிறுவனமான சாங்யாங் மோட்டாரை 2010ஆம் ஆண்டில் இந்தியாவின் மஹிந்திரா வாங்கிய பிறகு அதன் தலைவர் பொறுப்பையும் பவன் குமார் கோயங்கா சேர்த்து பார்த்தார். ஆனால், தற்போது மஹிந்திரா- சாங்யாங் மோட்டார் நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு இல்லை. இவ்வாறு மஹிந்திராவில் பல்வேறு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த பவன் குமார் கோயங்கா வேறொரு வேலைக்காக மஹிந்திரா & மஹிந்திராவின் சிஇஓ பணியை விடவில்லை.

former mahindra ceo buys car

மாறாக, சிஇஓ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 70 வயதான பவன் குமார் கோயங்கா தற்சமயம் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் செயல்படும் இந்தியாவின் விண்வெளி சார்ந்த திட்டமான இன்-ஸ்பேஸ் (INSPACE) மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆளுநர்கள் (Governors of IIT Madras)-இன் தலைவராக உள்ளார்.

இவ்வளவு உயரிய பொறுப்பில் இருக்கும் பவன் குமார் கோயங்கா நினைத்தால், இன்னும் விலையுயர்ந்த சொகுசு கார்களை கூட வாங்கியிருக்க முடியும். இருப்பினும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்காக காத்திருந்து, அதனை புக் செய்து, தற்போது டெலிவிரி பெற்றுள்ளார். இந்த அளவிற்கு விவிஐபி-களை கூட கவர்ந்துள்ள எக்ஸ்இவி 9இ காரின் விலைமிக்க பேக்-3 வேரியண்ட்டின் டெலிவிரிகள் மட்டுமே தற்போது துவங்கப்பட்டுள்ளன.

ஆதலால், இதில் இருந்து பவன் குமார் கோயங்கா விலையுயர்ந்த எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காராக இருப்பினும், பவன் குமார் கோயங்கா லெவலுக்கு இது விலை குறைவான கார் ஆகும். இருந்தும், இந்த காரை முதல் ஆளாக வாங்கியிருப்பதில் இருந்து மார்க்கெட்டில் இந்த எலக்ட்ரிக் கார் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறியலாம். முன்னாள் மஹிந்திரா எம்டி பவன் குமார் கோயங்காவை தொடர்ந்து இன்னும் பல விஐபி-கள் இந்த எலக்ட்ரிக் காரை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம். அவர்களை பற்றி காண, நமது டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 20:59 [IST]
English summary
Former mahindra ceo pawan kumar goenka takes delivery of mahindra xev 9e
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X