வாடகை கொடுத்து கட்டுபடியாகலை... வேனை வீடாக மாற்றிய முன்னாள் ராணுவ வீரர்!

By Saravana

வீட்டுக்கு வாடகை கொடுத்து விழி பிதுங்கி, காயலாங்கடை செல்ல இருந்த மினி வேனை வீடாக மாற்றியிருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.

மிக அட்டகாசமாக மாற்றப்பட்டிருக்கும் அந்த வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார் அவர். இப்போது வீட்டு வாடகை பிரச்னை இல்லாததால், பெரிய தொகையை மாதாமாதம் சேமிப்பதாக அவர் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்

முன்னாள் ராணுவ வீரர்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேமி வாடிங்கடன். 25 வயதாகும் ஜேமி அந்நாட்டின் ராணுவத்தில் வீரராக பணிபுரிந்தவர்.

மாத வாடகை

மாத வாடகை

ராணுவத்திலிருந்து வெளியில் வந்தவுடன் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு மாதம் 800 பவுண்ட்டுகள் வாடகை கொடுக்க வேண்டியிருந்தது.

திணறிய ஜேமி

திணறிய ஜேமி

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதற்கு பின் மாதா மாதம் 800 பவுண்ட்டுகள் வாடகை கொடுப்பதற்கு மிகவும் திணறி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில் ஐடியா ஒன்று உதித்துள்ளது.

ஐடியா

ஐடியா

அதாவது, பழைய வேன் ஒன்றை வாங்கி அதனை வீடாக மாற்ற முடிவு செய்தார

பழைய வேன்

பழைய வேன்

அதாவது, மாதம் 800 பவுண்ட்டுகளை வாடகையாக கொடுத்த நிலையில், காயலாங்கடை செல்லும் நிலையில் இருந்த பழைய வேன் ஒன்றை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கியிருக்கிறார்.

அலங்காரம்

அலங்காரம்

அந்த வேனை வாங்கியவுடன் அதனை புதுப்பித்துள்ளார். மேலும், உட்புறத்தில் தனக்கு வேண்டிய வசதிகளுடன் அதனை தடுப்புகள் மற்றும் வசதிகளுடன் வீடாக மாற்றினார்.

ரெடி

ரெடி

மூன்று மாதத்தில் தனக்கான கனவு வீட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். அதிலும், சகல வசதிகளுடன் அந்த வீட்டை தயார் செய்துவிட்டார்.

செலவு

செலவு

மாதாமாதம் 800 பவுண்ட்டுகள் வாடகை கொடுத்த நிலையில், அந்த நடமாடும் இல்லத்தை வெறும் 750 பவுண்ட் விலையில் தயார் செய்துவிட்டாராம்.

இதுபோதும்

இதுபோதும்

இப்போது மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, மாதாமாதம் வாடகை என்ற தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறுகிறார்.

வசதிகள்

வசதிகள்

குளிர்சாதனப் பெட்டி, சோபா, மடக்கி விரிக்கும் படுக்கை, தீத்தடுப்பு சாதனம், புகையை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, மரவேலைப்பாடு கொண்ட இன்டீரியர், ரெஸ்ட் ரூம், ஸ்கைலைட் செட்டிங் என மிக அசத்தலாக ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

உலகின் சிறந்த கஸ்டமைஸ் வேன்

தனிநபர் ஜெட் விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் லிமோசின் வேன்!

Source: Dailymail

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2016, 16:19 [IST]
English summary
Former soldier fed up of Home Rent and transforms rusty old van into his new home
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+