Subscribe to DriveSpark

'அம்மா' தின ஸ்பெஷல்... அவரது ஆஸ்தான வாகனம் பற்றயத் தகவல்கள்!

Posted By:

தமிழகத்தில் இன்று 'அம்மா' தினமாக அதிமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். சாலைகளில் மட்டுமல்ல, வழக்கம்போல் ஃபேஸ்புக், ட்வீட்டரிலும் வார்த்தை பட்டாசுகளை கொளுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்புக்காக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஜராஜ வந்தபோது, அவரை ஆஜானுபாகுவாக சுமந்து வந்தது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ.

ஆனால், எதிர்பாராதவிதமாக தீர்ப்பு பாதகமாக அமைந்ததால், உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அதனால், அதிமுக தொண்டர்களும், மந்திரிகளும் மட்டுமல்ல... அந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸரும் சோகமே உருவமாக அம்மாவை பிரிந்த குழந்தை போல் சிறை வளாகத்தில் நின்றிருந்தது. அதனை கண்டு அதிமுகவினர் உருகி, மருகி போனது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், இன்று சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக விடுவிக்கப்பபட்டிருப்பதன் மூலம் அதிகமுவினர் மட்டுமல்ல, இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸரும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. ஏனெனில், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவின், ஆஸ்தான வாகனமாக தனது அடுத்தக்கட்டப் பணிகளை இந்த லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி செவ்வனே செய்ய காத்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டொயோட்டா பிரியர்

டொயோட்டா பிரியர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கம்பீரமான செயல்களுக்கு ஏற்றாற்போலவே இந்த காரின் தோற்றமும் இருக்கிறது. எனவே, இந்த டொயோட்டா எஸ்யூவி மாடல் மீது அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. இதன் காரணமாகவே, 2012ல் மீண்டும் புதிய மாடல் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோவை அவர் வாங்கினார்.

அதிகாரப்பூர்வ மாடல்

அதிகாரப்பூர்வ மாடல்

முதல்வராக இருந்தபோது, தனது அதிகாரப்பூர்வ மாடலாகவே இதனை பயன்படுத்தி வந்தார். தலைமை செயலகம் செல்வது முதல் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்வது வரை எல்லாவற்றிற்கும் அந்த காரையே பயன்படுத்தினார். இப்போதும், மீண்டும் அந்த பணிகளை செய்ய இந்த ஆஸ்தான வாகனம் புத்துணர்ச்சியுடன் தயாராகிவிட்டது.

சொகுசான எஸ்யூவி

சொகுசான எஸ்யூவி

சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், சொகுசு வசதிகளுடன் கூடிய உயர்வகை எஸ்யூவி மாடல் இதில், 7 பேர் வரை பயணம் செய்யும் இருக்கை வசதியுடைது. எனவே, அவரது அயராத அலுவல்களுக்கு இந்த எஸ்யூவி அலுப்பில்லாத பயண அனுபவத்தை வழங்கும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவியில் 171 பிஎச்பி பவரையும், 410 என்எம் டார்க்கையும் அதிகபட்சம் வழங்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தியை கடத்தும் ஆல் வீல் டிரைவ் அமைப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

மிகவும் கட்டுறுமிக்க இந்த எஸ்யூவியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தும் வகையில், சிறப்பு பாதுகாப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டது. இது குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் பாடி அமைப்பு கொண்டிருக்கிறது. பாதுகாவலர்கள் நின்று வருவதற்கான ஃபுட் ஸ்டெப்பும் உள்ளது. உயிர்காக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த எஸ்யூவி 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால், எந்தவொரு சாலை நிலையிலும் பயணிப்பவருக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. ரியர் வியூ கேமரா கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை கூடுதல் வசதிகளாக இருக்கின்றன.

விலை மதிப்பு

விலை மதிப்பு

அப்போது ரூ.1.20 கோடி விலை மதிப்பில் இந்த எஸ்யூவி வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதில் இருக்கும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Former Tamilnadu CM Jayalalitha's Toyota Landcruiser Prado - Special Review.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark