Just In
- 1 hr ago
விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...
- 1 hr ago
எகிப்து போட்ட தடாலடி நிபந்தனை... சிக்கலில் தத்தளிக்கும் எவர்கிவன் கப்பல்... தவிக்கும் இந்தியர்கள்!
- 1 hr ago
நம்பவே முடியல!! ரூ.1,100 இருந்தால் ஹோண்டா டூ-வீலரை ஓட்டி செல்லலாம்... வட்டியும் ரொம்ப ரொம்ப கம்மி...
- 2 hrs ago
டெஸ்லா கார் ஆலையை கொண்டு வர கங்கணம் கட்டிய அமைச்சர் நிதின் கட்காரி
Don't Miss!
- Sports
அஸ்வினுக்கு பௌலிங் கொடுத்திருக்கணும்... பெரிய மிஸ்டேக்தான்... ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!
- News
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...நாள் குறித்த சசிகலா...ஜூன் 13-ல் திருவண்ணாமலையில் அதிரடி அறிவிப்பு?
- Finance
சொந்த வீடு கனவு நனவாக .. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..!
- Movies
திடீர் மாரடைப்பு.. நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி.. ரகிர்கள் அதிர்ச்சி.. நலம்பெற வேண்டுதல்!
- Lifestyle
கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால்
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேலையை விட்டு தூக்கிய ஆத்திரத்தில் முன்னாள் ஊழியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க...
வேலையை விட்டு தூக்கியதால் முன்னாள் ஊழியர் ஒருவர் செய்துள்ள காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சாலை விபத்துக்களுக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் வாகனம் இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணம்.

ஆனால் அமெரிக்காவில் ஒருவர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வேலையை விட்டு நீக்கியதால், அந்த கோபத்தில் வேண்டுமென்றே அவர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். வேலையை விட்டு நீக்கினால், பலருக்கு கோபமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது.

வேலையை விட்டு நீக்கும் சம்பவங்களை அனைவரும் ஒரே மாதிரியாக எடுத்து கொள்வதில்லை. சிலர் அதனை அமைதியாக கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ கோபத்தையும், விரக்தியையும் எந்த வழிகளில் எல்லாம் காட்ட முடியுமோ, அப்படி காட்டு விடுகின்றனர். 32 வயதான லாசி கோர்டல் ஜென்ட்ரி என்பவரும் இப்படிதான் தனது கோபத்தை காட்டியுள்ளார்.

இவர் வால்மார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். ஆனால் வேலையை விட்டு தன்னை நீக்கியதால், அவர் விரக்தியடைந்தார். இந்த விரக்தியை, வால்மார்ட் ஸ்டோர் ஒன்றின் முன்பக்க கதவின் மீது மோதி அவர் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள வால்மார்ட் ஸ்டோர் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

முன்பகுதியில் குறிப்பிடத்தகுந்த சேதத்தை ஏற்படுத்திய பின்னரும் கூட, லாசி கோர்டல் ஜென்ட்ரியின் கோபம் அடங்கவில்லை. எனவே ஸ்டோருக்கு உள்ளேயும் அவர் காரை ஓட்டி சென்று சேதத்தை ஏற்படுத்தினார். அங்கிருந்த பெரிய டிஸ்ப்ளே ஒன்றின் மீது மோதிய பின்னர்தான் லாசி கோர்டல் ஜென்ட்ரி காரை நிறுத்தினார்.

இந்த விபத்தை ஏற்படுத்துவதற்கு 2015 ஃபோக்ஸ்வேகன் பசாட் காரை லாசி கோர்டல் ஜென்ட்ரி பயன்படுத்தியுள்ளார். இறுதியில் காவல் துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலையை விட்டு நீக்கிய காரணத்தால்தான் லாசி கோர்டல் ஜென்ட்ரி இந்த விபரீத செயலில் ஈடுபட்டு தற்போது கைதாகியுள்ளார்.

வேலையை விட்டு நீக்கப்பட்ட மறுநாள் காலை 6 மணியளவில் அவர் வால்மார்ட் ஸ்டோருக்கு தனது காரில் வந்துள்ளார். அதன்பின் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையை விட்டு நீக்கிய கோபத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள் பலர் இதுபோல் பல்வேறு விபரீத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இதுபோல் காரை தாறுமாறாக ஓட்டுவது நல்லதல்ல. இது ஓட்டுபவருக்கு மட்டுமல்லாது, அங்கிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
Image Courtesy: City of Concord, NC - Police Department