இவரு விப்ரோவின் முன்னாள் சாஃப்ட்வேர் எஞ்சினியர்.. வேலையை விட்டுட்டு எடுத்த முடிவால இப்ப பல கோடிக்கு அதிபதி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்-தைச் சேர்ந்தவர் முஸ்தபா அலி. இவர் முன்னாள் விப்ரோ மென்பொருள் பொறியாளர் ஆவார். வேலையை விட்டுவிட்டு அவர் 'கார் டிப்போ' எனும் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை ஷோரூமை திறந்தார். அவரின் இந்த முடிவே இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவரை மாற்றி இருக்கின்றது. ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைத்து வந்தநிலையிலேயே அதை ராஜினாமாக செய்துவிட்டு இந்த தொழிலில் இறங்கியிருக்கின்றார். இந்த துணிச்சலான முடிவே அவரை செல்வந்தராக மாற்றி இருக்கின்றது. 2019லேயே இந்த பயணத்தை முஸ்தபா தொடங்கி இருக்கின்றார்.

மேலும், ஆரம்பத்தில் அவர் வெறும் ஐந்து கார்களை மட்டுமே வைத்து இந்த பிசினஸைத் தொடங்கி இருக்கின்றார். மேலும், முதலில் அவர் ஜூப்ளி ஹில்ஸில் ஓர் வாடகை இடத்திலேயே தன்னுடைய ஷோரூமை அவர் தொடங்கியிருக்கின்றார். ஆனால், இன்றோ அவர் கார் டிப்போ எனும் மிகப் பெரிய சம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றார்.

Techie turns tycoon in car business

image தொடர்ந்து, பஞ்சாரா ஹில்ஸில் ஒரு பெரிய இடத்தையை வாடகைக்கு எடுத்து அவர் செயல்படுத்தி வருகின்றார். இன்றைய நிலவரப்படி அவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா போன்ற முன்னணி பிராண்டுகளின் கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, இப்போது 35 கோடி ரூபாய் லாபத்துடன் இந்த கார் டிப்போ நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், முன்னணி கார் பிராண்டுகளைப் போலவே கை தேர்ந்த யூஸ்டு கார் விற்பனையாளராக கார் டிப்போ காட்சியளிக்கின்றது. தன்னுடைய வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் தன்னிடத்தில் விற்பனைக்கு வரும் கார்களை மிகப் பெரிய ஆய்விற்கு உட்படுத்துகின்றனர்.

அந்த மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே விலையும் நிர்ணயிக்கப்பட்டு வாகனங்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால்தான் கார் டிப்போவை நம்பி இப்போதும் வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கான செகண்ட் ஹேண்டு கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என தெரிகின்றது. மேலும், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை கார் டிப்போ வாயிலாக முஸ்தபா அலி விற்றுள்ளார்.

முஸ்தபா, பலருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகின்றார். குறிப்பாக, வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்பனை விலைகளை தானே நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு சுமார் எட்டு பேரை அவர் பணியமர்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் தெலங்கானா பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமல்ல ஆந்திரா பதிவெண் கொண்ட வாகனங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மேலும், விற்கப்படும் ஒவ்வொரு வாகனத்திலும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே அவர்கள் லாபம் எடுக்கின்றனர். அதாவது, குறைந்த லாபம் அதிகம் விற்பனை எண்ணிக்கை கான்செப்டிலேயே தங்கள் நிறுவனம் இயங்கி வருவதாக முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். அதேவேளையில், எடுத்த உடன் முஸ்தபா இந்த இடத்தை அடையவில்லை என கூறப்படுகின்றது.

ஆரம்ப கட்டத்தில் மிகப் பெரிய சவால்களை எல்லாம் எவர் எதிர்கொண்டிருக்கின்றார். இருப்பினும், பிசினஸை கை விடாமல் அவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார். இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு மிகப் பெரிய டிமாண்ட் உள்ளது. இதனால்தான் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட இந்த பிசினஸில் ஈடுபட்டு வருகின்றன.

மாருதி சுஸுகி தொடங்கி ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஆடி போன்ற முன்னணி பிராண்டுகளும் இந்தியாவில் யூஸ்டு வாகனங்களுக்கு என தனி பிரிவை உருவாக்கி இயங்கி வருகின்றன. அந்த அளவிற்கே இந்தியாவில் மிகப் பெரிய சந்தையை யூஸ்டு கார் மார்க்கெட் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிய வாகனங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முஸ்தபாவின் வெற்றி பலருக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது. இளைஞர்கள் ஒரே இடத்தில் தேங்கிவிடாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதையே இவரின் வெற்றி எடுத்துரைக்கின்றது. முஸ்துபா அலியின் தொழில் முனைவோர் பயணம், ஒருவர் அபாயங்களை எடுக்கவும் சவால்களுக்கு ஏற்பவும் தயாராக இருக்கும் போது வெற்றிக்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. வணிக உலகில் ஈடுபட விரும்புவோருக்கு அவரது கதை ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 22:00 [IST]
English summary
Former wipro engineer success pre owned car business
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+