ரூ.8 லட்சத்துக்கு ஹெல்மெட் வாங்கும் அளவுக்கு யாருங்க இருக்கா? யாரு யூஸ் பண்ணா ஹெல்மெட் தெரியுமா இது?
அயர்டன் சென்னா (Ayrton Senna), பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஃபார்முலா 1 ரேஸர். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அயர்டன் சென்னா பயன்படுத்திய ஹெல்மெட் போன்றதான அச்சு அசல் தோற்றத்தில் புதியதாக ஒரு ஹெல்மெட் உருவாக்கப்பட்டு, துபாயில் நடைபெற்றுவரும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை பற்றியும், கண்காட்சியை பற்றியும் நம் 'ஒன் அரேபியா' செய்தித்தளத்தில் இன்னும் விரிவாக பதிவிட்டுள்ளனர்.
உலகளவில் பிரபலமான ஃபார்முலா 1 பந்தய வரலாற்றின் பெரும் வெற்றியாளர்களில் முக்கியமானவராக அயர்டன் சென்னாவை சொல்லலாம். அந்த அளவிற்கு, 1988, 1990 மற்றும் 1991 என தொடர்ச்சியாக ஃபார்முலா 1 பந்தய தொடரை வென்றுள்ளார். ஃபார்முலா 1 பந்தயங்களில், மஞ்சள் நிறத்தில் இவர் பயன்படுத்திய ஹெல்மெட் அந்த சமயத்தில் மிக பிரபலமானதாக இருந்தது.
இதன் காரணமாகவே, கிட்டத்தட்ட 30 - 35 வருடங்களுக்கு பிறகு ஃபார்முலா 1 பந்தயங்களில் அயர்டன் சென்னா பயன்படுத்திய ஹெல்மெட் போன்றதான புதியதொரு ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சு அசல் அயர்டன் சென்னா பயன்படுத்திய ஹெல்மெட் போன்று இருந்தாலும், இது இந்த காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஹெல்மெட் ஆகும். துபாயில் நடைபெற்றுவரும் ஆர்.எம் சோதேபி ஏலத்தில் இந்த புதிய ஹெல்மெட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
7 ஆயிரம் டாலர்களில் இருந்து 10 ஆயிரம் டாலர்களுக்குள், அதாவது ரூ.5.80 லட்சத்தில் இருந்து ரூ.8.28 லட்சத்திற்குள் ஏலத்தில் இந்த ஹெல்மெட் விற்கப்படலாம் என இதனை உருவாக்கியவர்கள் கணித்துள்ளனர். அயர்டன் சென்னாவுக்கு துபாயிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பதால், அவர்களையும் இந்த ஹெல்மெட் கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்டன் சென்னா பயன்படுத்திய ஹெல்மெட் போன்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஹெல்மெட்டை ஏலம் விடும் பணிகள் வருகிற மார்ச் 9ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளன. ஃபார்முலா 1 பந்தயங்களில் அயர்டன் சென்னா பயன்படுத்திய ஹெல்மெட் இப்போது பார்ப்பதற்கு வேண்டுமாயின் எளிமையான தோற்றத்தில் இருக்கலாம். ஆனால், 1980 - 90 காலக்கட்டங்களில் மிக ஸ்டைலிஷானதாக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
எளிமையான அலங்கரிப்புகளுடன் இருந்தாலும், அயர்டன் சென்னாவின் ஹெல்மெட் பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நிறைய ரசிகர்களை அயர்டன் சென்னா கவர்ந்து இழுத்ததற்கு அவரது ஹெல்மெட்டும் ஒரு காரணமாக சொல்லலாம். அவரது ஹெல்மெட்டின் பெரும்பான்மையான பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்க, சில இடங்களில் பச்சை மற்றும் நீல நிற ஸ்ட்ரிப்புகள் ஒட்டப்பட்டு இருந்தன.
மஞ்சள் - பச்சை - நீலம் ஆனது பிரேசில் நாட்டின் தேசிய நிறங்களாக பார்க்கப்படுகிறது. ரேஸ் டிராக்கில் மற்ற டிரைவர்களிடம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறான பளிச்சிடும் நிறங்களில் தனது ஹெல்மெட்டை அயர்டன் சென்னா உருவாக்கினார். இவரது ஹெல்மெட்டிற்கு பெயிண்ட் வேலைகளை செய்தது 'சிட் ஸ்பெஷல் பெயிண்ட்' என்கிற பிரேசில் நாட்டை சேர்ந்த பெயிண்ட் நிறுவனம் ஆகும்.
அயர்டன் சென்னாவின் 15 வருட ரேசிங் பயணத்தில் அவரது ஹெல்மெட் மிகவும் சில மாற்றங்களை மட்டுமே பெற்றது. அதாவது, 15 வருடங்களாக ஒரே மாதிரியான ஹெல்மெட்டை தான் அயர்டன் சென்னா பயன்படுத்தினார். அதே போன்றதான தோற்றத்தில்தான், தற்போது ஆர்.எம் சோதேபி ஏல கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஹெல்மெட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக தொகையில் இந்த ஹெல்மெட் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலர் பழமையான கிளாசிக் பொருட்களை வாங்கி சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். அத்தகையவர்களுக்காகவும், ஃபார்முலா 1 ரேசர் அயர்டன் சென்னாவின் ரசிகர்களுக்காகவும் இந்த புதிய ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரேயொரு ஹெல்மெட் மட்டுமே மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஏலத்தில் இந்த ஹெல்மெட்டை வாங்க போட்டி அதிகமாக இருக்கும்.
Source: OneArabia


Click it and Unblock the Notifications









