ஃபார்முலா கார் பந்தயத்திற்கு ஏன் ஃபார்முலான்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவின் முதல் இரவு நேர ஸ்டிரீட் ரேஸ் போட்டி நடக்கிறது. ஃபார்முலா 4 கார் பந்தயமாக இந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட்கள் தற்போது விற்பனையில் இருக்கிறது. இந்த போட்டிக்காக வெளிநாட்டிலிருந்து கார்கள் எல்லாம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்த முக்கியமான சில தகவல்களை தான் காண போகிறோம்.
பலருக்கும் உலகம் முழுவதும் ஃபார்முலா 1 ஃபார்முலா 2 என பல்வேறு விதமான கார் பந்தயங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த பார்முலா என்ற பெயர் ஏன்? எப்படி வந்தது? என்ற காரணம் பலருக்கும் தெரியாமல் இருக்கும். இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் வரலாற்றை சற்று புரட்டி பார்க்க வேண்டும். இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் இருக்கின்றன.

வாகனங்கள் தயாரிக்கப்படும் போதே அதில் ரேஸ் கார் ஓட்டுவது என்பது மனிதர்களிடம் உள்ள நீண்ட நாள் பழக்கமாக இருக்கிறது. மோட்டார் வாகனங்கள் தயாரிக்கப்படும் முன்பே, மாட்டு வண்டியில் ரேஸ் ஓட்டுவது, குதிரை வண்டியில் ரேஸ் ஓட்டுவது, என பல்வேறு விதமான ரேஸ்கள் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடந்துள்ளன. இந்நிலையில் மோட்டார் வாகனங்கள் தயாரிக்கப்பட்ட பிறகும் இந்த ரேஸ் கலாச்சாரம் வந்துள்ளது.
இப்படியாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 19ம் நூற்றாண்டிலேயே மோட்டார் வாகன கார் பந்தயம் என்பது அங்கங்கே துவங்கி விட்டது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இது போன்ற கார் பந்தயங்கள் அவ்வப்போது நடந்து வந்தன. இந்த பந்தயங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் இந்த பந்தயத்தை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 1931-39 வரை ஏஏசிஆர் என்ற அமைப்பின் மூலம் கார் பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன. இது மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் 1931ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்ததால் இந்த கார் பந்தயம் அப்பொழுது நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு இந்த கார் பந்தயத்தை மீண்டும் துவங்க ஏற்பாடுகள் நடந்தன. அப்பொழுது கார் பந்தயத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி அதை முறைப்படி நடத்த திட்டமிடப்பட்டது.
இப்படியாக கார்பந்தயங்களில் பங்கேற்கும் கார்கள் எவ்வளவு எடை இருக்க வேண்டும் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என்ன வடிவமைப்பில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இப்படியான விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் வாகனம் தான் கார் பந்தயத்தில் பங்கேற்க முடியும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. இப்படியான விதிகள் அடங்கிய பட்டியல் தான் ஃபார்முலா என அழைக்கப்பட்டது.

இந்த ஃபார்முலாவின் படி தயாரிக்கப்படும் கார்களை வைத்து நடக்கும் பந்தயம் தான் ஃபார்முலா கார்பந்தயம் என அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு விதமான மாறுபாடுகளுடன் கூடிய விதிமுறைகளை கொண்டது தான் ஃபார்முலா 1, ஃபார்முலா2, ஃபார்முலா 4 என பல்வேறு விதமான கார் பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஃபார்முலா 1 விதிமுறையின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மற்ற ஃபார்முலா கார் போட்டிகளில் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு ஃபார்முலா கார் போட்டிக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறையின் கீழ் தான் வாகனங்கள் தயாரிக்கப்படும். எந்த ரக ஃபார்முலாவை பின்பற்றி குறிப்பிட்ட போட்டி நடக்கிறது என்பதை பொறுத்துதான் அதில் பயன்படுத்தப்படும் கார்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த ஃபார்முலா பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் பல்வேறு விதமான அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களை பொருத்தியதாக இருக்கிறது. இது சாதாரண காரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இதில் பல்வேறு விதமான ஆச்சரியமான தகவல் கூட நமக்கு கிடைக்கும் வகையில் இருக்கும். இந்த ஃபார்முலா கார்கள் வாகன தயாரிப்பில் மிகப்பெரிய உச்சம் என எடுத்துக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடக்கப்போகும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பல இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இந்தியாவில் கார் பந்தயம் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. கிரிக்கெட் மீது எப்படி ஆர்வம் இருக்கிறதோ அது போல கார் பந்தயத்தின் மீதும் ஆர்வம் ஏற்படுத்துவதற்காக இப்படியான நிகழ்ச்சிகளை பொது இடத்தில் நடத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது இது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









