டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையை நாறடித்த ஃபார்ச்சூனர்: 3 பேரை பலிவாங்கிய பரிதாபம்!

Written By:

பஞ்சாப் மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றின் டயர் வெடித்ததில் எதிரே வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி உடன் பலத்த சத்ததுடன் அது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

பஞ்சாபின் ஜலந்திரில் இருந்து அம்ரிஸ்டர் நகரில் உள்ள ஜாண்டியலா பகுதிக்கு டொயோட்டா ஃபார்ச்சுனர் எஸ்.யூ. வி கார் ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்தது.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

ஜாண்டியலாவின் நம்பர் 1 தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த ஃபார்ச்சூனர் காரின் டயர் திடீரென பெருத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் கார் கட்டுபாட்டை இழந்து சாலையில் நிலைதடுமாறியது.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

அதே சாலையில் எதிரே வந்த மஹிந்திரா எகஸ்.யூ.வி கார் மீது, நிலைதடுமாறிய ஃபார்ச்சுனர் கார் மோதி, அதன் மீது ஏறி சிறுது தூரம் இழுத்துக்கொண்டு சென்று நின்றது.

இந்த சம்பவத்தில் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் வந்த எட்டு பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்கள்.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர். பலியானவர்களின் உடல்களை பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, விபத்து குறித்து ஆராய அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றினர்.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

அதிவேகத்தில் சென்ற ஃபார்ச்சூனர் கார் எதிரே வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காருடன் பலத்த சத்துடன் மோதும் காட்சிகளை பார்த்தனர்.

இதன்மூலம் இந்த கோர விபத்திற்கு காரணம் ஃபார்ச்சூனர் ஓட்டுநரான ராஜேந்திர் சிங் தன் என்பதை அப்பகுதி போலீசார் முடிவு செய்தனர்.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

மேலும் மஹிந்திரா காரில் பயணித்த ஷீத்தல் அரோரா என்ற பெண், எதிரே வந்த ஃபார்ச்சூனர் ஓட்டுநர் ராஜேந்திர சிங் மயக்க நிலையில் இருந்ததாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

ஷீத்தல் கொடுத்த புகாரை போலீசார் உறுதியாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதிவேகமாக வந்து இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியதாக ஃபார்ச்சூனர் ஓட்டுநர் ராஜேந்திர சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா எஸ்.யூ.வி மீது அதிவேகத்தில் ஃபார்ச்சூனர் கார் மோதியதால் இரண்டு கார்களும் அப்பளம் போல நொறுங்கியது.

எக்ஸ்.யூ.வி-யில் மோதி சுக்குநூறான டொயோட்டா ஃபார்ச்சூனர்..!!

மஹிந்திரா எக்ஸ்.யூ.வி மற்றும் ஃபார்ச்சூனர் கார் நேருக்கு நேர் மொதிக்கொண்ட விபத்தை குறித்து போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி வீடியோ...

எதிர்பாராத இந்த கொடூரமான விபத்தால் ஜாண்டியலா நெடுஞ்சாலை பகுதி முழுக்க பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Forthuner Bang Head on Into Mahindra XUV Car After Tyre Bursting. Leaving 3 Dead. Click for Details...
Story first published: Thursday, June 15, 2017, 15:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark