இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்ட Toyota Fortuner கார் ஒன்று எதிர்பாராத விதமாக அலையில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இந்தியர்களால் அதிகளவில் வாங்கப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக Toyota Fortuner உள்ளது. ஏனெனில் இந்த Toyota வாகனத்தில் ஆஃப்-ரோடு திறனும் கிடைக்கிறது. விற்பனையில் இந்த ஆஃப்-ரோட்டிற்கு இணக்கமான எஸ்யூவி வாகனத்திற்கு Ford Endeavour, Mahindra Alturas மற்றும் G4 MG Gloster உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இருப்பினும் Toyota தயாரிப்பு என்ற ஒற்றை அடையாளத்துடன் விற்பனை செய்யப்படுவதால் மற்றவைகளை காட்டிலும் அதிகளவில் விற்பனையாகும் மாடலாக இது உள்ளது. சரி செய்திக்குள் போவோம். கீழுள்ள வீடியோவில் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்ட Toyota Fortuner கார் அலையில் கவிழ்ந்துள்ளதை பார்க்கலாம்.

Image Courtesy: offroad club pakistan.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தில் ஓட்டுனருக்கு பெரிய அளவில் எந்த விபத்தும் ஏற்படவில்லை என செய்திகள் கூறுகின்றன. Toyota Fortuner காரில், கடற்கரையில் வீடியோ காட்சிப்படுத்துவதற்காக இவர்கள் சென்றுள்ளனர். அதாவது, கடல் அலைக்கு அருகில் கார் செல்லும் அதனை வீடியோவாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இதற்காக Fortuner காரை இயக்கியவர் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டவாறு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அலை ஒன்று வாகனத்தின் இடதுப்பக்கத்தில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய வாகனம் ஒரு பக்கமாக கவிழ்ந்துள்ளது.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இருப்பினும் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை வலது பக்கமாக திருப்ப முயற்சித்தால் கார் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவ்வாறான எஸ்யூவி வாகனங்கள் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் அதிக ஈர்ப்பு விசை மையத்துடன் உருவாக்கப்படுவதால், கார் ‘பல்டி' அடிப்பதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

மேலும், எஸ்யூவி வாகனங்கள் எடை மிக்கவைகளாக உள்ளன. இதுவும் கார் கவிழ்ந்தவுடன், தலைக்கீழாக குப்புற கவிழாததற்கு காரணமாகும். Toyota Fortuner எஸ்யூவியில் இக்கட்டான வளைவில் திரும்புவதும் எளிதானது. இந்த சம்பவத்தில் நீராக இருப்பினும், கடல் அலை ஆனது ஓர் சுவர் போன்று செயல்பட்டுள்ளது.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இது வாகனத்தின் இயக்கத்தை பாதிக்க, இந்த Toyota Fortuner கார் கவிழ்ந்துள்ளது. Fortuner என்பதால் சற்று பரவாயில்லை, இதுவே குறைந்த க்ரவுண்ட் க்ளியரென்ஸ் கொண்ட ஹேட்ச்பேக்-ஆக இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். எனவே எந்த காரில் கடற்கரைக்கு சென்றாலும் சரி, வளைவுகளில் மிக வேகமாக திரும்பாதீர்கள்.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இல்லையென்றால் இவ்வாறு தான் மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிடும். ப்ரேக் அடித்தாலும் எந்த பிரோஜனும் இல்லை. ஏனெனில் அலைகள் அந்த அளவிற்கு வலிமையானவை, நீங்கள் ப்ரேக் அடிப்பதற்கு முன்பே அவை வாகனத்தின் ஒரு பக்கத்தை மேல் நோக்கி தூக்கி இருக்கும்.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

மேலும், இவ்வாறான சாகசங்களுக்கு செல்லும்போது தங்களது காரில் Anti-lock ப்ரேக்கிங் அமைப்பு, எலக்ட்ரானிக் ப்ரேக் வழங்கீடு மற்றும் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை வாகனம் சறுக்குவதையும், ப்ரேக்கினால் வாகனம் அலைவுறுவதையும் கண்டறிந்து விபத்துகளை குறைக்க உதவுகின்றன.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

இதையெல்லாம் விட எந்த வாகனமாக இருந்தாலும், உள்ளே பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும். Fortuner-ஐ பொறுத்தவரையில், இந்த எஸ்யூவி மாடலை சில காஸ்மெட்டிக் அப்கிரேட்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட என்ஜின் உடன் Toyota இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்திருந்தது.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

அதேநேரம் புதிய லெஜண்டர் வேரியண்ட்டும் Fortuner-இன் வேரியண்ட்கள் வரிசையில் இணைக்கப்பட்டது. மற்றப்படி 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே இயக்க ஆற்றல் விஷயத்தில் Fortuner-இன் கை தான் ஓங்கியுள்ளது.

இதெல்லாம் தேவை தானா? கடற்கரையில் ‘பல்டி’ அடித்த Toyota Fortuner கார்!! வைரல் வீடியோ

6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படும் இந்த Toyota எஸ்யூவி வாகனத்தை பின்சக்கர-ட்ரைவ் அல்லது அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் தேர்வு செய்யலாம். அப்டேட் செய்யப்பட்ட Toyota Fortuner-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30.34 லட்சத்தில் இருந்து ரூ.38.30 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Fortuner goes drifting on a beach Rolls over spectacularly.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X