மேக்-அப் ஆர்டிஸ்ட் வாங்கிய காரை பாத்தீங்களா! விலை 2 கோடியாம்! பலர் அழகா தெரியுறதுக்கு காரணமானவங்க!
கேரளாவின் முன்னணி பியூட்டி பார்லர் நிறுவனங்களில் 'லக்ஸ் பிரவுன் சலூன்' ஒன்றாகும். இந்த நிறுவனத்தை கட்டியாண்டு வரக் கூடியது ஓர் பெண் ஆவார். சரிதா கபில், இவரே அந்த பியூட்டி பார்லரின் உரிமையாளர். மலையாள திரை உலகின் முன்னணி நடிகைகள் பலரின் தனிப்பட்ட அழகு நிபுணராக இவரே இருக்கின்றார். சொல்லப் போனால் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலர் அழகாக தெரிவதற்கு இவரின் மேக்-அப்பே காரணமாம். இந்த நபரே கேரளாவின் விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740டி (BMW 7 Series 740d) சொகுசு காரே சரிதா கபில்-இன் பயன்பாட்டில் புதிதாக இணைந்து உள்ளது. திருமண நாளை முன்னிட்டு அவருடைய கணவரே இந்த காரை சரிதாவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். கபில் மோகன், இவரே சரிதாவின் கணவர் ஆவார்.

இவரும் (கபில் மோகன்) கேரளாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இந்த தம்பதியர்களிடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், போர்ஷே (Porsche), மினி (Mini), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே புதிதாக பிஎடம்பிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் மாடலையும் அவர்கள் இணைத்திருக்கின்றனர். இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 1 கோடியே 81 லட்சம் ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் அதன் விலை ரூ. 2.30 கோடியை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே கல்யாண நாள் பரிசாக கபில் மோகன், மனைவி சரிதாவிற்கு வழங்கி இருக்கின்றார். இந்த கார் சொகுசான அம்சங்களைத் தாங்கியது மட்டுமல்ல. சிறந்த மைலேஜை வழங்கக் கூடியதும் கூட.
லிட்டர் ஒன்றிற்கே 16.55 கிமீ வரையில் இது மைலேஜை வழங்கும். சரிதா கபில் வாங்கியிருக்கும் 740டி வேரியண்டின் மைலேஜ் திறனே இதுவாகும். இதேபோல், 7 சீரிஸில் 740ஐ எனும் வெரியண்டும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இது லிட்டர் ஒன்றிற்கு 12.61 கிமீ வரை மட்டுமே மைலேஜை தரும்.
சொகுசு அம்சத்தில் இரண்டும் பெஸ்ட்டானதாக இருக்கும். இதேபோல், நவீன கால ஆடம்பர அம்சங்களை தாங்கியிருப்பதிலும் இந்த இரண்டு வேரியண்டுகளும் தலை சிறந்ததாக இருக்கும். மிக முக்கியமாக இந்த 7 சீரிஸ் சொகுசு காரில் மினி தியேட்டரின் அனுபவத்தை வழங்கக் கூடிய 31.3 இன்ச் திரை ஒன்றைகூட வழங்கி இருக்கின்றது.
அது ஓர் 8கே வசதிக் கொண்ட திரை என்பது கூடுதல் சிறப்பாகும். அமேசான் ஃபையர் டிவி வசதியும் இதில் இன்-பில்ட்டாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, 14.9 அங்குல வளைவான திரை, இன்டரேக்சன் பார் ஆகியவையும் 7 சீரிஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, 36 ஸ்பீக்கர் போவர்கள் மற்றும் வில்கின்ஸ் டைமைண்ட் சவுண்ட் சிஸ்டம், 4டி ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் உடன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சொகுசான டிராவல் அனுபவத்திற்காக அடாப்டீவ் 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன், டிஜிட்டல் சாவி போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களை தாங்கி இருப்பதாலே இந்த காரின் விலை ரூ. 2 கோடியை நெருங்குகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்கள் மீதான மோகம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மேக்-அப் கலைஞர் இந்த காரை வாங்கிய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதேபோல், இந்தியாவில் இதுபோன்று விலை உயர்ந்த காரை பரிசளிக்கும் நிகழ்வு அரங்கேறுவது முதல் முறையல்ல என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








