விமானம், சூப்பர்காரை தொடர்ந்து இப்போது கபாலி பஸ்... ரவுண்டு கட்டும் விளம்பரங்கள்!

Written By:

கபாலி ரிலீசாவதற்குள் அவரது ரசிகர்களும், அதை வைத்து விளம்பரம் தேடும் நிறுவனங்களும் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள் போல தெரிகிறது. எட்டுத் திக்கும் கபாலி பற்றிய பேச்சாகவே இருக்கின்றன. கபாலி போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விமானம், லம்போர்கினி சூப்பர்கார், ஸ்விஃப்ட் கார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. ரஜினி மீதான பிரியத்தை ரசிகர்களும், நிறுவனங்களும் வெளிக்காட்டி வருகின்றன.

சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளன. இந்தநிலையில், கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில் மும்பையில் டபுள்டெக்கர் பஸ் ஒன்று களமிறக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் கபாலி போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இந்த பஸ் கபாலி ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க இருக்கிறது.

 படத் தயாரிப்பு நிறுவனம்

படத் தயாரிப்பு நிறுவனம்

ஃபாக்ஸ்ஸ்டார் ஸ்டூடியோஸ் படத் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த பஸ்சை அறிமுகம் செய்திருக்கிறது. தென்னிந்தியா தவிர்த்து, நாட்டின் ஏனைய பகுதிகளில் கபாலி திரைப்படத்தை வினியோகிக்கும் உரிமையை இந்த நிறுவனம்தான் பெற்றிருக்கிறது.

கபாலிடா...

கபாலிடா...

மும்பையில் கபாலி படம் திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில், கபாலி பஸ் என்ற பெயரில் இந்த பஸ் மும்பை சாலைகளை கலக்க இருக்கிறது.

வழித்தடம்

வழித்தடம்

மும்பையிலுள்ள வதலா பஸ் டெப்போவிலிருந்து புறப்பட்டு, மதுங்கா வழியாக இன்ஆர்பிட் மலாட் வரை இந்த பஸ் இயக்கப்பட உள்ளது. வழிநெடுகிலும் கபாலி புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளுடன் இந்த பஸ் வருகிறது.

கபாலி ஸ்பெஷல்

கபாலி ஸ்பெஷல்

மதுங்காவில் உள்ள அரோரா தியேட்டர் வழியாக இந்த பஸ் இயக்கப்படும். இங்குதான் ரஜினி படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றன. எனவே, இந்த தியேட்டர் வழியாக பஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கால அட்டவணை

கால அட்டவணை

மதியம் 1 மணிக்கு வலாட் பஸ் டெப்போவிலிருந்து புறப்பட்டு 2 மணிக்கு மதுங்காவிலுள்ள அரோரா தியேட்டரை அடையும். அங்கிருந்து 3 மணிக்கு தாதரிலுள்ள சேனா பன், 4 மணிக்கு பந்த்ராவிலுள்ள லிங்க் ரோடு, 5 மணிக்கு அந்தேரியிலுள்ள சிட்டி மால் ஆகியவற்றை தொட்டு இறுதியாக 6 மணிக்கு இன்ஆர்பிட் மலாடில் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறது.

ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

ரஜினி ரசிகர்களை கவரும் விதத்திலும், கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்திலும் இந்த பஸ் இயக்கப்பட இருக்கிறது. இது ரசிகர்களை வெகுவாக கவரும்.

வட இந்திய பத்திரிக்கைகள் ஆர்வம்

வட இந்திய பத்திரிக்கைகள் ஆர்வம்

கபாலி படத்தின் மூலம் வட இந்தியாவிலும் ரஜினியின் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக கூடும் என்று வட இந்திய பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஆச்சரியம்

ஆச்சரியம்

கபாலிக்காக வெளியிடப்பட்டு வரும் வித்தியமாசமான விளம்பரங்களும், இதுபோன்ற பிரச்சாரங்களும் வியப்பளிப்பதாகவும் அவை கூறியிருக்கின்றன. மொத்தத்தில் கபாலி சினிமா இந்த வார இறுதியின் கொண்டாட்டத்தை மிகவும் ஸ்பெஷலாக மாற்றும் என கருதப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Foxstar Studio Launches Kabali Edition Bus.
Story first published: Tuesday, July 19, 2016, 17:23 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos