அவ்வளவு காசு இருந்தும் இன்னொருவர் பயன்படுத்திய காரை வாங்கும் நடிகை! யாரென்று கண்டுப்பிடிங்க பார்ப்போம்!!
இந்தியாவில் இருந்து சிலர் ஹாலிவுட்டில் கதாநாயகி ஆனது போல், வெளிநாட்டில் இருந்தும் சிலர் இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளனர். எமி ஜாக்சன், சன்னி லியோன் உள்ளிட்டோர் அத்தகையவர்களுள் சிலராவர். இந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரீஸ் லஷ்மியை சேர்த்துக் கொள்ளலாம். இந்தியாவை சேர்ந்த பள்ளிபுரம் சுனில் என்பவரை திருமணம் செய்த கொண்ட பிறகு பாரீஸ் லஷ்மி முழு இந்திய பெண்ணாக மாறிவிட்டார். இந்த நிலையில், பாரீஸ் லஷ்மி செகண்ட்-ஹேண்டில் விலையுயர்ந்த ஹூண்டாய் (Hyundai) கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது என்ன மாதிரியான ஹூண்டாய் கார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். ஆனால் என்ன... ஹூண்டாய் கார்களில் பிரீமியம் தரத்திலான அம்சங்கள் வழங்கப்படுவதால் அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், கூடுதல் பணம் செலவாகினாலும் பரவாயில்லை, அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை கொண்ட கார் வேண்டுமென நினைப்பவர்களது சாய்ஸ் ஹூண்டாய் கார்களாக உள்ளது.

அந்த வகையில், பிரான்ஸில் பிறந்து இந்தியாவின் கேரளாவில் கணவர் மற்றும் மகனுடன் நடிகை மற்றும் நடன பயிற்றுவிப்பாளராக பணியாற்றிவரும் பாரீஸ் லஷ்மி விலையுயர்ந்த ஹூண்டாய் கார் ஒன்றை செகண்ட்-ஹேண்டில் வாங்கியுள்ளார். அதாவது, இந்த ஹூண்டாய் காரை ஏற்கனவே ஒருவர் வாங்கி அதனை பாரீஸ் லஷ்மியிடம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக விற்றுள்ளார்.
இந்த வகையில், பாரீஸ் லஷ்மி வாங்கியிருப்பது ஹூண்டாய் வெர்னா (Verna) என்கிற விலைமிக்க செடான் ரக கார் ஆகும். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஷோரூமில் இதுகுறித்த ஆவணங்களில் பாரீஸ் லஷ்மி கையெழுத்திடுவதும், அதன்பின் ஷோரூம் வளாகத்திற்கு சென்று அங்கு தனக்கான வெள்ளை நிற ஹூண்டாய் வெர்னா காரை ஓட்டி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பாரீஸ் லஷ்மியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இவரது உண்மையான பெயர் கிடையாது. பிரான்ஸ் நாட்டின் ஏய்ஸ்-என் என்கிற பகுதியில் 1991ஆம் ஆண்டில் பிறந்தவரான இவரது நிஜ பெயர் மைரியம் சோபியா குயினோ. சிறுவயது முதலே நடன கலையில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய மைரியம் சோபியாவின் கவனம் இந்தியாவின் பரதநாட்டியத்தின் மீது விழுந்தது. அதன்படி, பிரான்ஸில் பரதநாட்டியத்தை இந்தியாவை சேர்ந்தவர் மூலம் கற்றுக் கொண்டு பல மேடைகளில் ஏறியுள்ளார்.
அதன்பின்னரே பாரீஸ் லஷ்மி என்கிற பெயரை பெற்றார் மைரியம் சோபியா. இவ்வாறு பிரான்ஸில் பிறந்திருந்தாலும் இந்தியா உடனும், இந்தியர்களுடனும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த பாரீஸ் லஷ்மி 2012ஆம் ஆண்டில் கேரளாவின் பள்ளிபுரத்தை சேர்ந்த கதகளி நடனர் சுனிலை திருமணம் செய்துக் கொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். பெங்களூர் நாட்கள் திரைப்படத்தில் நடித்தது, பாரீஸ் லஷ்மிக்கு சில திரைப்பட வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இவ்வாறு நடனம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பாரீஸ் லஷ்மி வாங்கியிருக்கும் ஹூண்டாய் வெர்னா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான செடான் ரக காராக விளங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் வெர்னாவின் எக்ஸ்-ஷோரும் விலைகள் ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.17.42 லட்சம் வரையில் உள்ளன.
டைட்டன் கிரே, அபிஸ் பிளாக், அட்லாஸ் வெள்ளை, டைகூன் சில்வர், ஸ்டார்ரி நைட், ஃபியரி சிவப்பு, டெல்லுரியன் பிரவுன் என 7 விதமான கலர் ஆப்ஷன்களில் வெர்னா கிடைக்கிறது. இவை இல்லாமல், சில ட்யூயல்-டோன் கலர் ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது. இதில் பாரீஸ் லஷ்மி வாங்கியிருப்பது அட்லாஸ் வெள்ளை நிறத்திலான வெர்னா கார் ஆகும். பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடனம் ஒருவரது வாழ்க்கையை எந்த அலவிற்கு மாற்றும் என்பதற்கு பாரீஸ் லஷ்மி சிறந்த உதாரணம் ஆகும். இந்தியாவிலேயே செட்டிலாகி விட்ட இவர் தற்போது மேலும் சில லட்சங்களை கார் வாங்குவதற்காக நம் நாட்டில் செலவு செய்துள்ளார். இவ்வாறான பிரபலங்களும் செகண்ட்-ஹேண்டில் கார் வாங்குகின்றனர் என்பது சற்று ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









