ஃபுல்லா போட்டு மட்டையான "குடிமகன்"களை அரசே இலவச கேப்ல ஏத்தி வீட்டுக்கு கூட்டிவிட்டுப் போகும் சூப்பர் திட்டம்!
பாரில் மூக்கு முட்ட குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்குச் செல்ல முடியாமல் திண்டாடும் நபர்களுக்கு இலவச கேப் சேவையை அரசு அறிவித்துள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க இப்படியான ஒரு சேவையை அரசே வழங்க முன் வந்துள்ளது. இது குறித்து முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இப்படியாக அவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டும்போது விபத்து நடக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் மது போதையின் காரணமாக வாகனம் ஓட்டியதாலேயே நடந்து வருகிறது.

இதனால் உலகில் பல்வேறு நாடுகள் மது போதையில் வாகனம் ஓட்டுவதைச் சட்டவிரோதமாகக் கருதுகின்றனர். இப்படியாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறது. வாகன விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இத்தாலி நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அதிக போதையில் இருப்பவர்களுக்கு இலவச கேப் சேவையை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை எண்ணிக்கை குறைந்து விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.

ஒரு மனிதன் குடிபோதையிலிருந்தால் அவன் நிதானமாக இருக்க முடியாது, நிதானமாக இல்லாத மனிதனால் சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்ட முடியாது. இதனால் அவன் வாகன விபத்திற்கு உள்ளாகும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் சாலையில் செல்லும் மற்ற வாகனம் ஓட்டிகளுக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் நிலைமையும் ஏற்படுத்தும்.
இதனால் இப்படியாக பார்ட்டிகளில் மதுபோதையில் இருக்கும் நபர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்ல இலவச கேப் சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதை நேரடியாக பார்ட்டி நடக்கும் இடங்களிலிருந்து அவர்கள் வீடு வரை செல்ல இந்த திட்டம் உதவும் எனச் சொல்லப்படுகிறது.
இதை முதற்கட்டமாக ஒரு முயற்சி திட்டமாக அந்நாட்டில் உள்ள ஆறு நைட் கிளப்களில் மட்டும் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் கிடைக்கும் பலனை வைத்து அடுத்தடுத்து இந்த திட்டங்களை விரிவு படுத்தி அந்நாடு முழுவதும் இந்த சேவையைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இத்தாலி நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள மேட்டியோ சல்வானி என்பவர் இந்த குடி போதையில் உள்ளவர்களுக்கான இலவச டாக்ஸி சேவை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இது குறித்து சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது. இந்து சேவையைப் பலர் பாராட்டி வருகின்றனர். பலர் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த வரையிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது மோட்டார் வாகன சட்டத்திற்குப் புறம்பான விஷயமாகும். இப்படியாகக் குடிபோதையில் ஒருவர் வாகனம் ஓட்டினால் முதல் முறை அவருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இரண்டாவது முறையும் அவர் இதே தவற்றைச் செய்தால் அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். முன்னதாக இந்த அபராதம் ரூபாய் 2000 முதல் 3000 என இருந்தது தற்போது ரூபாய் 10 ஆயிரம் 15 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இது சர்வதேச அளவிலான மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இலவச டாக்ஸி சேவையை இத்தாலி நாடு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அந்நாட்டின் மக்கள் தொகைக்கு அந்த திட்டம் சாத்தியம்தான். இந்தியா போன்ற நாடுகளில் இந்த திட்டத்திற்கான சாத்தியம் ரொம்ப குறைவுதான்.


Click it and Unblock the Notifications