Free Food in Train நீங்க கேட்டாதான் கிடைக்கும்! இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது!
இந்திய ரயில்வே நிர்வாகம் எப்பொழுதும் ரயில்கள்களை சரியான நேரத்தில் இயக்க வைக்கும் ரயில்களைச் செய்து வருகிறது. தவிர்க்க முடியாத வகையில் தற்போது ரயில்கள் தாதாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
அதன்படி பிரிமியம் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ரயில்களில் மக்கள் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களை விட அதிகமாகப் பணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த ரயில்களில் பயணம் செய்யும் ரயில்களில் ஒரு முக்கியமான அம்சத்தை வழங்குகிறது.

அதன் படி இந்த ரயில்கள் வழக்கமான நேரத்திலிருந்து தாமதமாக வந்தால் பயணிகளுக்கான உணவை ஐஆர்சிடிசி தான் வழங்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. பலருக்கு இப்படி ஒரு விதிமுறை இருக்கிறது என்பதே தெரியாது.
ரயில்கள் பயணிக்கும் நேரத்தை பொருத்து காலை உணவு, மதிய உரவு,மாலை ஸ்னாக்ஸ், இரவு உணவு ஆகியவை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்படியாக ரயில் தாமதமாவது தெரிந்தால் முன்னேர குறிப்பிட்ட ஸ்டேஷனில் உணவு தயாராக உத்தரவு வந்துவிடும். அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும். பயணிகளுக்குச் செய்தி தெரிவிக்கப்படும்.

குறிப்பிட்ட ஸ்டேஷனிற்கு ரயில் வந்ததும் அந்த உணவு ரயில்களில் ஏற்றப்பட்டு பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இதற்காக ரயில்வே நிர்வாகம் அதன் உணவு கூடங்களை அதிகரித்து வருகிறது. தற்போது முக்கியமான ரயில் நிலையங்களில் இந்த உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இது ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குறிப்பிட்ட ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு மட்டும் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது ஐஆர்சிடிசியில் உள்ள 16 உணவகங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல தற்போது இந்த ரயில்களில் பணம் கொடுத்து உணவை வாங்கும் முறைக்காகப் பல முக்கியமான அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான டிராலிகள் தயாரிக்கப்பட்டு அதில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டு ரயில்களில் ஏற்றி ஒவ்வொரு பயணியின் இருக்கைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலருக்கு ரயில் பயணத்தின் போது ஐஆர்சிடிசி உத்தரவில் உள்ள இந்த இலவச உணவு குறித்த விபரங்கள் தெரியாது. அதிக விலை கொடுத்து பயணிப்பதற்கு இந்த சேவையையும் கிடைக்கும் என்ற தகவல் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









