அம்பானி பொறந்த ஊரில் இதெல்லாம் சாதாரணம்! லம்போர்கினி காரை பார்த்து துபாய்னு நெனைச்சு எத்தனை பேர் ஏமாந்தீங்க?
லம்போர்கினி (Lamborghini), உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான இதன் ஒரு காரை ஆவது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பணக்காரர்கள் விரும்புவர். அதேநேரம், ஏழை, எளிய மக்களுக்கு லம்போர்கினி கார் ஒன்றை சாலையில் காண்பதே பெரிய ஆச்சிரியமாக இருக்கும். ஆனால், இங்கு ஒரு தொழிலதிபர் தனது கஸ்டமர்களுக்கு லம்போர்கினி கார் பரிசை அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்த தொழிலதிபர், இத்தனைக்கும் அகமதாபாத்தில் உள்ள கஞ்சாரி என்கிற ஓர் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இத்தகையவர் இலவசமாக லம்போர்கினி கார் பரிசை அறிவித்து இருப்பது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த தொழிலதிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் கிடைக்க பெறவில்லை. ரியல் எஸ்டேட் (Real Estate) தொழிலதிபரான இவரது தொழில் ஆனது சாதாரணமாக நிலங்களை விற்பனை செய்வது மட்டுமில்லாமல், நிலத்தில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி விற்பனை செய்வதும் ஆகும்.

இவரது கஞ்சாரி கிராமம் ஆனது நகர்புறத்தில் இருந்து ஒதுங்கி மிகவும் அமைதியான சூழல் உடன் உள்ளதால், பண்ணை வீடுகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து சொகுசு வசதிகள் மிகுந்த பண்ணை வீடுகளை கட்டி விற்பனை செய்வதை இந்த ரியல் எஸ்டேட் அதிபர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனாலேயே இவரை அணுகும் கஸ்டமர்களை எல்லாம் பார்த்தால் பெரும் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.
இதன் காரணமாகவே அத்தகைய கஸ்டமர்களை கவரும் முயற்சியாக, தன்னிடம் உள்ள பண்ணை வீடு ஒன்றை வாங்குபவருக்கு லம்போர்கினி கார் பரிசை இந்த ரியல் எஸ்டேட் அதிபர் அறிவித்துள்ளார். லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகென் (Huracan) கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி சலுகை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், லம்போர்கினி ஹூராகென் கார் ஒன்றை காட்டுகின்றனர்.
ஆரஞ்ச் நிறத்திலான அந்த ஹூராகென் காரை தான் பரிசாக வழங்க உள்ளனரா அல்லது புதியதாக ஒரு லம்போர்கினி ஹூராகென் கார் இந்த பண்ணை வீட்டை வாங்குபவருக்கு பரிசாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. இந்த ஆரஞ்ச் நிறத்திலான ஹூராகென் காரும் நம்பர் பிளேட் (Number Plate) எதுவும் இல்லாமல், புத்தம் புதியதானதாக காட்சியளிக்கிறது.
லம்போர்கினி ஹூராகென் காரை பற்றி பார்ப்பதற்கு முன், இந்த பண்ணை வீட்டை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். மொத்தம் 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பண்ணை வீடு கிழக்கு திசை பார்த்து கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுத்து-கட்டு வீடு ஆகும். அதாவது, சுற்றிலும் அறைகள் இருக்க, வீட்டிற்கு மத்தியில் காலியான இடவசதி உள்ளது.

வீட்டின் ஒரு ஓரத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்கான இடவசதி உள்ளது. இதில், தாராளமாக 100 பேர் வரையில் அமரலாம். இரு ஹால்கள், 5 படுக்கை அறைகள், 6 கழிப்பறைகள் உடன் பிரேசிலியன் நாட்டின் மார்பிள் கற்கள் மற்றும் உயர் தரத்திலான கிரானைட்கள் மூலம் இந்த பண்ணை வீட்டை கட்டி உள்ளனர். வீட்டிற்கான மர சாமான்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய பண்ணை வீட்டை வாங்குபவருக்கு இலவசமாக கிடைக்கவுள்ள ஹூராகென் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் இந்தியாவில் ரூ.4 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையில் உள்ளன. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரலாம். யூஸ்டு ஹூராகென் காரின் மதிப்பு கூட ரூ.2.5 கோடிக்கும் அதிகமாக வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலையுயர்ந்த காரை ஒருவர் இலவச பரிசாக வழங்குகிறார் என்றால், இந்த பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எங்களுக்கு தெரிந்தவரையில், வீடியோவில் காட்டப்படும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லம்போர்கினி ஹூராகென் காரை தான் பரிசாக வழங்குவர் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், லம்போர்கினி கார் இலவசமாக கிடைக்கும்போது யார் வேண்டாம் என்பார்கள்...!!


Click it and Unblock the Notifications








