துபாயில் டாக்ஸியான சூப்பர் கார்கள்... இலவசமாக ரவுண்டு போகலாம்!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப்புரியாக விளங்கும் துபாயில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்டி, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் உலகின் விலையுயர்ந்த கார்களை வாங்கி நிறுத்தி வைத்து பிரம்மிக்க வைத்துள்ளனர் துபாய் போலீசார்.

தள்ளுபடி விலையில் மெட்ஸிலர் டயர்கள்!

இந்த பட்டியலில் ஆம்புலன்ஸ், ரோந்து படகுகளும் உண்டு. இந்த நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியையொட்டி, பார்வையாளர்களை கவர்வதற்காக, சூப்பர் கார் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்ய உள்ளனர். வரும் 19ந் தேதி முதலல் டிசம்பர் 6ந் தேதி வரை வார இறுதி நாட்களில் விலையுயர்ந்த சூப்பர் கார் டாக்ஸிகளில் இலவசமாக பயணிக்கும் அரிய வாய்ப்பை சுற்றுலாப் பயணிகள் பெற உள்ளனர்.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல்முறையாக...

முதல்முறையாக...

உலகிலேயே இதுபோன்று விலையுயர்ந்த கார்களை டாக்ஸியாக அறிமுகம் செய்வது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளனர்.

கார்களின் மதிப்பு

கார்களின் மதிப்பு

சூப்பர் கார் டாக்ஸியில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கார் மாடலும் ஒரு மில்லியன் திராம்களுக்கும் அதிகமான விலை கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

விலையுயர்ந்த கார் மாடல்கள்

விலையுயர்ந்த கார் மாடல்கள்

லம்போர்கினி, ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லி, ஏஎம்ஜி ஜி கிளாஸ் லிமோசின் உள்ளிட்ட கார்கள் டாக்ஸி சேவையை வழங்க உள்ளன. இதற்காக, காரின் மேற்புறத்தில் டாக்ஸி போர்டு பொருத்தப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் ஏறலாம்?

எந்த இடத்தில் ஏறலாம்?

வணிக வளாகங்கள், சுற்றுலாப் பகுதிகளில் இந்த சூப்பர் கார் டாக்ஸி நிறுத்தப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இந்த கார்களில் இலவசமாக ஒரு ரவுண்டு போய் வரலாம்.

நீடிக்கவும் திட்டம்

நீடிக்கவும் திட்டம்

இந்த சூப்பர் கார் டாக்ஸி சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்தால், நீட்டிக்கவும் திட்டமிட்டிருப்பதாக துபாய் மோட்டார் ஷோ அமைப்பின் இயக்குனர் ஜின் சென் ஆங் தெரிவித்தார்.

சேவை அட்டவணை

சேவை அட்டவணை

இந்த மாதம் 21-22 மற்றும் 28-29 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளிலும் சூப்பர் கார் டாக்ஸி சேவை வழங்கப்பட உள்ளது.

Photos Credit: 7days Dubai

More from DriveSpark

Article Published On: Wednesday, November 5, 2014, 13:58 [IST]
English summary
The Supercar Taxi is the latest in car luxury that will shift gear for Dubai roads, offering residents and tourists a ride of their lives for free.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+