டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பணிபுரிய ஃப்ரீலேன்சர்களுக்கு அரிய வாய்ப்பு!

Written By:

எழுத்தாற்றல் மிக்கவர்களும், ஊடகத்தில் பகுதி நேரமாக பணிபுரிய விருப்பமுடையவர்கள் ஃப்ரீலேன்சராக பணியாற்றும் அரிய வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பணிபுரிய ஃப்ரீலேன்சர் வாய்ப்பு

ஆர்வம்:

கார், பைக் மற்றும் வாகனத் துறை அதீத ஆர்வமுடையவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகச் சரியானதாக இருக்கும். இது பகுதி நேர பணியாக செய்யும் வாய்ப்புள்ளது. கார், பைக் உள்ளிட்ட வாகனத் துறை பற்றிய செய்திகளை வீட்டிலிருந்தே நீங்கள் எழுதி அனுப்பலாம்.

எளிய நடை:

நீங்கள் தேர்வு செய்யும் செய்திகளை துல்லியமாகவும், எளிய வாக்கிய நடையிலும் இலக்கண பிழை இல்லாமல் எழுதுதல் அவசியம். தலைப்புகள் அர்த்தம் நிறைந்ததாகவும், கவரும் வகையிலும் இருக்க வேண்டும்.

மேலும், வேறு ஊடகத்தில் இருந்து அல்லது பிறருடைய செய்திகளை காப்பியடித்து தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பிற ஊடகத்தின் செய்திகள் காப்பியடித்து தருவது ஏற்கப்படாது.

செய்திக்கான நிபந்தனை:

ஒவ்வொரு செய்தியும் குறைந்தது 500 வார்த்தைகளுடன், பல புதிய தகவல்களுடன் இருப்பதும் அவசியம். வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களையும், தரம் தாழ்ந்த சொற்கள் பிரயோகத்தையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

ஏற்கனவே எங்களது தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் விஷயங்களை மீண்டும் தேர்வு செய்ய வேண்டாம். வாசகர்களை நிச்சயம் அந்த செய்தி கவரும் வகையில் அமையாது.

திறமையை காட்டும் வாய்ப்பு:

உங்களது எழுத்து திறமைக்கு மிகச் சிறந்த தளமாக இது அமையும். பகுதி நேர பணி என்பதுடன் உங்களது திறமையை வெளிக்காட்டுவதுடன், கூடுதல் ஊதியத்தை பெறும் வாய்ப்பை ஒன்இந்தியா குழுமம் வழங்குகிறது.

விருப்ப தேர்வு:

ஆட்டோமொபைல் மட்டுமின்றி, எங்களது ஒன்இந்தியா தமிழ் தளத்திலும் பணியாற்றலாம். தவிரவும், லைஃப்ஸ்டைல் செய்திகளை தரும் போல்ட்ஸ்கை தளம், மொபைல் கணிணி பற்றிய தகவல்களை தரும் கிஸ்பாட் தளத்திலும் பணிபுரியும் வாய்ப்புள்ளது.

வர்த்தக செய்திகளை வழங்கும் குட்ரிட்டர்ன்ஸ் தமிழ் தளம் மற்றும் பயணக் கட்டுரைகளை வழங்கும் நேட்டிவ்பிளானட் தளம், கிரிக்கெட் செய்திகளை வழங்கும் மைக்கேல் தமிழ் மற்றும் கேரியர்இந்தியா தளத்திலும் உங்களுக்கு விருப்பமுடைய எந்த தளத்திலும் பதிவு செய்து கொண்டு செய்திகளை அனுப்ப இயலும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்...

இப்போதே கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பணிச் சிறக்க எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Great Chance to work with DriveSpark Tamil Website.
Story first published: Monday, January 29, 2018, 22:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark