கார் நிறுவனங்களின் பெயர்களின் சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்வோமா?
கார் நிறுவனங்களின் பெயர்களை எழுதுவதிலும், உச்சரிப்பதிலும் பல்வேறு வேறுபாடுகளும், குளறுபடிகளும் இருக்கின்றன. மேலும், இந்த பெயர்களின் உச்சரிப்பு விதம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது.
கார் நிறுவனங்கள் தங்களது தாயக மொழியில் வைக்கும் பெயர்கள் ஆங்கிலத்தில் மருவி பின்னர் அந்தந்த நாட்டு பிராந்திய மொழிகளில் உச்சரிக்கும்போதும், எழுதும்போதும் அதிக விச்சியாசப்படுகிறது. இந்த நிலையில், கார் நிறுவனங்களின் பெயர்களின் சரியான உச்சரிப்புகள் பற்றிய சுவாரஸ்ய செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

ஆல்ஃபா ரோமியோ
இத்தாலியை சேர்ந்த ஆல்ஃபா ரோமியோ கார் நிறுவனதை ஆல்ஃபா ரோ'மீ'யோ என்று அழைக்க வேண்டுமாம்.

ஆடி
ஆடி கார் நிறுவனத்தை ஓடி என்று பல நாட்டினர் அழைக்கின்றனராம். ஆனால், அவ்டி என்று உச்சரிக்க வேண்டுமாம்.

பிஎம்டபிள்யூ
பெஎம்வே (பேரிஷே மோட்டோரென் வெர்கே) என்பதுதான் ஜெர்மன் உச்சரிப்பாம். நாம் பவேரியன் மோட்டார் ஒர்க்ஸ்(பிஎம்டபிள்யூ) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம்.

செவர்லே
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான செவரோலெட் என்பதை ஷெவ்ரோலெ என்று அழைப்பதுதான் சரியாம்.

சிட்ரோயன்
சிட்ரோயன் என அமெரிக்கர்கள் உள்பட பல நாடுகளில் அழைக்கப்படும் பிரான்ஸ் கார் நிறுவனத்தின் உண்மையான உச்சரிப்பு சீட்ரோயன் என்பதுதானாம்.

ஹூண்டாய்
அமெரிக்கர்களால் ஹோண்டெய் என்று அழைக்கப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் உண்மையான கொரிய மொழி உச்சரிப்பு ஹையோண்டே என்பதாகும்.

கோயனிக்செக்
ஸ்வீடனை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான கோயனிக்செக் நிறுவனத்தின் சரியான உச்சரிப்பு கோனிக்செக் என்பதாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ்
அமெரிக்கர்கள் மெர்சேடீஸ் என்று அழைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெயரின் சரியான உச்சரிப்பு மர்சிடஸ் பென்ஸ் என்பதே.

பீஜோ
பீஜோ பிராண்டின் சரியான உச்சரிப்பாக பூஜோ என்று அழைப்பதேயாகும்.

போர்ஷே
போர்ஷே பிராண்டின் சரியான உச்சரிப்பாக போர்ஷா என்பதேயாகும். மேலும், அந்த நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட்ஸ் கூபே 911 காரை போர்ஷா நைன் லெவன் என்று அழைப்பதே சரியானதாம். போர்ஷா நைன் ஒன் ஒன் என்று அழைப்பது தவறாக குறிப்பிடப்படுகிறது.

ரினால்ட்
ஃப்ரெஞ்ச் கார் தயாரிப்பாளரான ரினால்ட் நிறுவனத்தின் பெயரை ரெனோ என்று அழைப்பதே சரியானதாக குறிப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications








