மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பரிசை உலகத்துல யாருமே குடுத்திருக்க மாட்டாங்க... கல்யாண பொண்ணு மெரண்டு போயிருச்சு!

திருமணங்களின்போது மணமக்களுக்கு பரிசுகள் வழங்கும் பழக்கம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கிறது. திருமண வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை மணமக்களுக்கு பரிசாக வழங்குவதை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை கூட பரிசாக வழங்குவார்கள்.

சில சமயங்களில் வேடிக்கையாக ஒரு சில பரிசுகளை மணமக்களின் நண்பர்கள் வழங்குவதுண்டு. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பரிசுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சமயங்களில், அவற்றை மணமக்களுக்கு பரிசாக வழங்கிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமே வாசகர்களுக்கு பல முறை வழங்கியுள்ளது.

Friends Gift Groom Multi-spoke Alloy Wheels

இன்னும் சில சமயங்களில் மணமக்களின் நண்பர்கள் பெரிய பெட்டியை மணமேடைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் அவற்றை பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. மணமக்களை ஏமாற்றுவதற்காக இது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை பலர் செய்வதுண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விட வித்தியாசமான ஒரு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் ஒரு சிலர் மணமேடைக்கு பெரிய பெட்டி ஒன்று தூக்கி கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. அவர்கள் மணமகனின் நண்பர்கள் ஆவர். எனவே உள்ளே ஒன்றும் இருக்காது என்றுதான் பலரும் ஆரம்பத்தில் நினைத்திருப்பார்கள்.

Friends Gift Groom New Multi-spoke Alloy Wheels

ஆனால் பெட்டியை பிரிக்கும்போது, மணமக்களுக்கு மட்டுமல்லாது, நமக்கும் பெரிய ஆச்சரியம் ஒன்று காத்து கிடக்கிறது. ஆம், உள்ளே இருந்தது மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகும். மணமக்களுக்கு இப்படி ஒரு பரிசு வழங்கியதை இதற்கு முன் நாம் எங்கேயும் கேள்விபட்டிருக்க மாட்டோம் என்பது உறுதி.

இதன் காரணமாக மணமகனுடன் சேர்த்து, மணமகளும் ஆச்சரியமடைந்து விட்டார். அதை அவரது முகத்தில் நன்றாக பார்க்க முடிகிறது. அனேகமாக மணமகன் கார் ஆர்வலராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இதன் காரணமாகவே அவரது நண்பர்கள் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது எந்த நிறுவனத்தின் அலாய் வீல்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இவை 16 இன்ச் அலாய் வீல்களாக இருக்கும் என தெரிகிறது. எப்படியாயினும் இந்த பரிசை மணமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

ஏனெனில் இப்படி ஒரு பரிசை இதற்கு முன் திருமண நிகழ்ச்சிகளில் யாரும் யாருக்கும் வழங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவுதான். மிகவும் விசித்திரமான இந்த நிகழ்வு கேரள மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கார் ஆர்வலர்கள் நிரம்பிய மாநிலம் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 18:06 [IST]
English summary
Friends gift groom new multi spoke alloy wheels viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+