தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆச்சரியம் ஒன்றை கொடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு கார்கள் தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டொயோட்டா எட்டியோஸ் லிவா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களை அதற்கு உதாரணமாக கூறலாம்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இதில், 'மேட் இன் இந்தியா' டொயோட்டா எட்டியோஸ் லிவா தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்திய மார்க்கெட்டிற்கான மாடலுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்ரிக்க மார்க்கெட்டிற்கான மாடல் பல்வேறு அம்சங்களில் வேறுபடுகிறது.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் டொயோட்டா எட்டியோஸ் லிவா காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவர் மற்றும் 132 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

தென் ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா எட்டியோஸ் லிவா காரின் பேஸ் வேரியண்ட்டின் விலையே 1,79,500 ராண்ட். ராண்ட் என்பது தென் ஆப்ரிக்க கரன்ஸி. இந்திய மதிப்பில் அதன் விலை தோராயமாக 8.6 லட்ச ரூபாய்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா எட்டியோஸ் லிவா காரின் விலையை காட்டிலும் மிகவும் அதிகம் ஆகும். இந்தியாவில் விற்பனையாகும் டொயோட்டா எட்டியோஸ் லிவா காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை வெறும் 5.58 லட்ச ரூபாய் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) மட்டுமே.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் அதிகமான விலையில் டொயோட்டா எட்டியோஸ் லிவா கார் விற்பனை செய்யப்படுகிறது. இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இந்த சூழலில் அதிகப்படியான விலை என்பதை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தங்கள் நண்பருக்கு டொயோட்டா எட்டியோஸ் லிவா காரை பரிசாக வழங்கியுள்ளனர். தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கான காரணம்தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

நம்மில் எத்தனை பேர் தினசரி பிக் அப் மற்றும் டிராப்பிற்கு நண்பர்களின் வாகனங்களை சார்ந்து இருக்கிறோம்? நிச்சயமாக நம்மில் பலரும் அந்த நிலையில்தான் இருக்கிறோம். அல்லது அந்த நிலையில் இருந்துதான் வந்திருப்போம்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

இப்படி கார் இல்லாத ஒரு நண்பரை பிக் அப் மற்றும் டிராப் செய்து செய்து சோர்ந்து போய் விட்டதால், அவரது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, டொயோட்டா எட்டியோஸ் லிவா காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

கார் இல்லாத நண்பரை ஷோரூமிற்கு அழைத்து சென்று, அவருக்கு தங்களின் பரிசு குறித்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை கார் டீலர்ஷிப் ஊழியர் ஒருவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.

இனி அந்த நபர் தங்கள் நண்பர்கள் பரிசாக வழங்கிய காரில் ஹாயாக சென்று வரலாம். இப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப்பை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகதான் உள்ளது. ஏனெனில் காரை பரிசாக அளிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

போதாக்குறைக்கு வீடியோவில் உள்ள நபர்கள் அனைவரும் மிக இளம் வயதினர் போல் வேறு தெரிகின்றனர். அவர்கள் ஒன்றாக பணம் திரட்டி, நண்பருக்கு கார் பரிசளித்திருப்பது உண்மையில் மிகவும் அபூர்வமான ஒரு விஷயம்தான்.

தினமும் பிக் அப், டிராப் செய்ய சொன்னவருக்கு நண்பர்கள் சேர்ந்து கொடுத்த ஆச்சரியம் இதுதான்.. நண்பேன்டா

8.6 லட்ச ரூபாய் என்பது பெரிய தொகை. தங்களின் நண்பருக்கு கார் வாங்க அவர்கள் அனைவரும் பெரிய தொகையை தங்கள் பங்களிப்பாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் பெயர் விபரம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நண்பேன்டா!!!

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2019, 15:21 [IST]
English summary
Friends Surprises Non-Car Guy With Toyota Etios Liva. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+