2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்!

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மிக மிக கடுமையான சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

By Arun

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மிக மிக கடுமையான சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. 2019ம் ஆண்டு முதல் அந்த சட்டம் அமலுக்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. அந்த சட்டம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2017-18ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில், 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவில், பயணிகள் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இது ஒரு புதிய சாதனையாகும். 2016-17ம் நிதியாண்டில், 30,47,582 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை 2017-18ம் நிதியாண்டு முறியடித்து விட்டது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவிற்கு உயர பல்வேறு காரணங்கள் உள்ளன. மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதும், வாகனங்களை வாங்குவதற்கான லோன் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதும் மிக முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

பெரும்பாலானோர் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதன் காரணமாக சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏனெனில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் சாலை வசதி விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

குறிப்பாக பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் வாகன நெரிசல் என்பது மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பெருநகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சொந்தமாக இருப்பதே இதற்கு காரணம்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு புது வழியை கண்டறிந்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இடவசதி உங்களிடம் இருந்தால் மட்டுமே, இனி உங்களால் வாகனங்களை வாங்க முடியும்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

புதிய கார் அல்லது எந்த ஒரு வாகனமாக இருந்தாலும், அதனை பார்க்கிங் செய்வதற்கான போதிய இடவசதி உள்ளது என்பதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே, உங்களால் அந்த வாகனத்தை சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்ய முடியும்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்தான், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போர், போதிய இட வசதி இல்லாததால், வாகனங்களை சாலையிலேயே பார்க்கிங் செய்கின்றனர்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

அப்படி பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் சாலையை அடைத்து விடுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அரசு கருதுகிறது. இதனால்தான் போதிய இடவசதி இருந்தால் மட்டுமே, வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்ற சட்டத்தை கொண்டு வர அரசு விரும்புகிறது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இந்த சட்டத்தின் மூலமாக இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் அரசு நினைக்கிறது. அதாவது வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தால், பஸ் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வழிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இதன்மூலமாக மக்கள் சொந்தமாக வைத்திருக்கும் கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் சரிந்து, போக்குவரத்து நெரிசல் குறையும் என அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் கார்களால் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால், அந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டுபிடித்து விடலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். எனவே இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில், கர்நாடக அரசு முந்தி கொண்டுள்ளது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

ஆம், பெங்களூரு பெருநகர எல்லையில், இனி போதுமான பார்க்கிங் வசதி இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காத வரை, வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய முடியாது. முதற்கட்டமாக பெங்களூருவில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய சட்டம், 2019ம் ஆண்டு முதல் அமலுக்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இதுகுறித்த திட்டத்தை கர்நாடக மாநில போக்குவரத்து துறை முன்பாகவே வைத்திருந்தது. தற்போது அதனை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது கடுமையான சட்டம்தான் என்றாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தம்மன்னா கூறியுள்ளார்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

ஒரு நபர் மட்டும் தனியாக காரில் வருகிறார் என வைத்து கொள்வோம். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக கார்களை எடுத்து கொண்டு பயணித்தால், நிச்சயமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் என எரிபொருள் செலவும் வீணாகும்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

எனவேதான் பஸ், ரயில், 'கார் பூலிங்' போன்ற பொது போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. 'கார் பூலிங்' என்பது கேப் போன்றவற்றில், பயணங்களை 'ஷேர்' செய்து கொள்வதை குறிக்கிறது. எனவே புதிய சட்டம் அமலானால், பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

புதிய சட்டம் அமலானதும், மக்கள் பஸ் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்குவார்கள். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்ய தொடங்கி விட்டது. பெங்களூரு நகரில் வெகு விரைவில் 80 எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இதுகுறித்து அமைச்சர் தம்மன்னா கூறுகையில், ''மத்திய அரசு எங்களுக்கு ஏற்கனவே 80 பஸ்களை ஒதுக்கியுள்ளது. நாங்கள் இன்னும் 70 பஸ்களை எதிர்பார்க்கிறோம். அதிகமான எலக்ட்ரிக் பஸ்களை வாங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

இதுபோன்ற சட்டங்கள் உலகின் பல்வேறு நகரங்களில் அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் கூட இப்படியான ஒரு உத்தரவை அம்மாநில அரசுக்கு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

பார்க்கிங் செய்வதற்கான இடம் சொந்தமாக உள்ளது என்ற ஆதாரங்களை காட்டினால் மட்டுமே, சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லையில் வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என ஹிமாச்சல பிரதேச அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இனி யாரும் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டம் அமலாவதின் பரபரப்பு பின்னணி இதுதான்!

போக்குவரத்து நெரிசல் என்பது பெரு நகரங்களில் மட்டுமல்ல. மேற்கண்ட வழிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது என்பது சிறு நகரங்களுக்கும் பொருந்துகிறது. எனவே இந்த சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்!

மக்கள் வாகனங்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாக உள்ளது. சாலையின் பரப்பை அதிகரிக்காமல் இதுபோன்ற கடுமையான சட்டங்களை கொண்டு வருவதால், மக்கள் மத்தியில் தற்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
From 2019, buy vehicle only if you have parking space. Read in tamil.
Story first published: Thursday, June 21, 2018, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X