பாலிவுட் முதல் கோலிவுட் வரை; கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்: சிறப்புத் தகவல்கள்

Written By: Staff

இந்திய திரை நட்சத்திரங்களில் கதாநாயகர்களை பற்றியும், அவரது கார் கலெக்‌ஷனை குறித்தும் அதிகப்படியான செய்திகளை பார்த்துவிட்டோம்.

ஆனால் கதாநாயகர்களுக்கு இணையாக பல முன்னணி நாயகிகள் பலர், பிரபலமான பல ஆடம்பர கார்களுடன் வலம் வருகின்றனர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண்கள் பலரும் தங்களுக்கான அடுத்த அடையாளத்தை திரைத்துறையில் தான் பதிப்பார்கள்.

அப்படி அவர்கள் நடிக்க முடிவு செய்துவிட்டால் முதலில் காலடி வைப்பது தமிழ் சினிமா துறையில் தான்.

ஆடம்பர நாயகி ப்ரியங்கா சோப்ரா

ஆடம்பர நாயகி ப்ரியங்கா சோப்ரா

ஐஸ்வர்யா ராய் தொடங்கி சுஷ்மிதா சென், யுக்தாமுகி என உலக அழகிகளாக முடி சூடியவர்கள் முதலில் கால் பதித்தது தமிழ் திரைத்துறையில் தான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்த வரிசையில் 2000ம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கெண்டை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா, 2002ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பாலிவுட்டில் கோலோச்சிய பிறகு தற்போது அமெரிக்காவில் தயாராகி வரும் 'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சி தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

திரைப்படம், தொலைக்காட்சி தொடர், ஃபேஷன் என அந்தஸ்தை சரியாக பராமரித்து வரும் ப்ரியங்கா, கார்கள் மூலம் கிடைக்கும் ஸ்டார்டம்மையும் சரியாக தக்கவைத்துக்கொண்டு வருகிறார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்திப்படங்களில் முன்னணி நடிகையாக மாறிய பின்னர், ப்ரியங்கா சோப்ரா போர்சே கேயன், மெர்சிடில் பென்ஸ் உட்பட பல கார்களை தனது கராஜில் வைத்துள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்த வரிசையில் குவாண்டிகோ தொடரில் நடிக்க தொடங்கிய பிறகு கடந்தாண்டில் ப்ரிய்ங்கா சோப்ரா ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை புதுசாக வாங்கியுள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

கருப்பு நிறத்துடன், கிரோ நிறுமும் கலந்த ப்ரியங்காவின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் 2.5 கோடி ரூபாய் மதிப்புடையது. மேலும் பல ஆடம்பர வசதிகளை உள்ளடக்கியது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ப்ரியங்கா சோப்ராவின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.6 லிட்டர் வி12 டர்போ எஞ்சின் உள்ளது. இது 563 பி.எச்.பி பவரை தர வல்லது. மேலும் இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் உள்ளது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பிரியங்காவின் பல நாள் கனவாக இருந்த இந்த காரை வாங்கியதன் மூலம், இந்திய நடிகைகளில் ரோல்ஸ்-ராய்ஸ் காரை சொந்தமாக வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ஆடம்பரத்திற்கு ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் என்றால், ப்ரியங்கா தனது அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்தியாவில் இருந்தால் தனது நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள்,சினிமா நிகழ்வுகள் ஆகியவற்றிக்கு இந்த எஸ்-கிளாஸ் பென்ஸ் காரை தான் பிரியங்கா பயன்படுத்துகிறார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பிரியங்காவிடம் உள்ள எஸ்-கிளாஸ் பென்ஸ் ரூ.1.1 கோடி மதிப்புடையது. கிளாஸாகவும், ஆட்மபர உள்கட்டமைப்புகளும் கொண்ட இந்த காரில் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இவை தவிர பிரியங்காவிடம் போர்ஸேவின் கேயன்னே, மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், பி.எம்.டபுள்யூவின் 7-சிரீஸ் கார் என ஆடம்பரத்தின் அனைத்து உருவங்களும் உள்ளன.

எளிமையின் எடுத்துக்காட்டு அனுஷ்கா

எளிமையின் எடுத்துக்காட்டு அனுஷ்கா

இன்று இந்தியாவே உற்றுநோக்கக்கூடிய நடிகையாக மாறியுள்ளார் அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்த இவரை இன்று இந்திய ரசிகர்கள் மகிழ்மதியின் தேவசேனா என கொண்டாடுகின்றனர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்திய திரைத்துறை வரலாறு இனி பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று தான் பார்க்கப்படும். வசூலை வாரி குவித்து வரும் பாகுபலி பட நாயகியான அனுஷ்கா ஆடம்பரமில்லாத அமைதியான நடிகை.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

சாதரண குடும்பத்தில் பிறந்தவர்களும் திரைத்துறையில் சாதிக்கலாம் என்ற மனநிலையை எல்லோரிடமும் உருவாக்கியவர் அனுஷ்கா. அதை பல நேர்காணலில் குறிப்பிடவும் செய்வார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்திய நடிகைகளுக்கான வரிசையில் முத்திரை பதித்த இவரது வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதனால் இவர் பயன்படுத்தும் கார்களும் ஆர்பார்ட்டமில்லாத எளிமையானவை தான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் அனுஷ்கா புரொடக்‌ஷன் யூனிட் தரும் கார்களையே பயன்படுத்தியுள்ளார். பிறகு அவர் வாங்கிய கார் தான் ஜாகுவார் எகஸ்.ஜெ.எல் மாடல்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்த காரை அனுஷ்காவின் சகோதரர் தான் தேர்ந்தெடுத்து அவருக்கு வாங்கி தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்காவின் ஜாகுவார் எகஸ்.ஜெ.எல் கார் ரூ.98.03 லட்சம் மதிப்புடையது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

எல்.இ.டி விளக்குகள் அலங்காரம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட், பார்க்கிங் கண்ட்ரோல், திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் என தொழில்நுட்ப வடிவத்திலும் சிறப்புகளை பெற்றது ஜாகுவார் எகஸ்.ஜெ.எல் கார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பெங்களூரில் வளர்ந்த பெண் என்பதால், அனுஷ்கா சிறப்பாகவே கார் ஓட்டக் கூடியவர். மேலும், யோகா ஆசிரியராக இருந்தபோது பல்வேறு நகரங்களுக்கு பயிற்சிகளுக்காக காரிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ஜாகுவார் எக்ஸ்.ஜெ.எல் மாடலை தொடர்ந்து அனுஷ்காவிடம் இருக்கும் மற்றொரு கார் பி.எம்.டபுள்யூ எக்ஸ்.5. விழாக்கள், தொலைதூர பயணம் ஆகியவற்றுக்காக இந்த காரை வாங்கினார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தற்போது பெரும்பாலும் அனுஷ்கா புரொட்க்‌ஷன் யூனிட் தரும் கார் எதையும் பயன்படுத்துவதில்லை. மாறாக ஹைதாராபாத்தில் படப்பிடிப்பு என்றால் தனது கார்களை தான் பயன்படுத்தி வருகிறார்.

பாக்ஸ் ஆஃபிஸ் குயின் நயன்தாரா

பாக்ஸ் ஆஃபிஸ் குயின் நயன்தாரா

ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் கோலோச்சலாம், அனுஷ்கா திரைத்துறையில் ராணியாக முடிசூடலாம். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தென்னிந்தியாவில் தொடர்ந்து கிட்டத்தட்ட நயன்தாரா நடித்த ஆறு படங்கள் வசூலை வாரி குவித்துள்ளது. அதனாலேயே இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்றனர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பாக்ஸ் ஆஃபிஸ் ராணியாக உள்ள நயன்தாராவிற்கு கார் பயணங்கள் என்றால் அதீத ஆர்வமுண்டு. சென்னையிலிருந்து கேரளாவில் உள்ள தனது குடும்பத்தாரை பார்க்க பெரும்பாலும் தனது காரிலேயே சென்றுவிடுவார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

வல்லவன் படத்திற்கு பிறகு நயன்தாரவிற்கு திரைத்துறையில் ஏறிய கிராஃப் இன்னும் இறங்கவில்லை. அந்த சமயத்தில் அவர் வாங்கிய கார் தான் பி.எம்.டபுள்யூ எக்ஸ் 3

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

கேரள மக்கள் பெரும்பாலும் விரும்பும் கருப்பு நிறத்தில் தான் இந்த காரை நயன்தாரா வாங்கினார்.

மேலும் அந்த சமயத்தில் தென்னிந்தியாவில் பி.எம்.டபுள்யூ ரக காரை வாங்கிய முதல் நடிகையாகவும் நயன்தாரா தான் இருந்தார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தொடர்ந்து மலையாளம், கன்னடம் என பல படங்கள் நடித்தாலும், தமிழை விட ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிக படங்களில் நயன்தாரா நடித்து வந்தார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இதனால் தனது பி.எம்.டபுள்யூ எக்ஸ் 3 காரை ஹைதாராபாத்திற்கே எடுத்து சென்றுவிட்டார் நயன்தாரா. அந்தளவிற்கு தனது கார் மேல் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு உண்டு.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

2004ம் ஆண்டில் வெளியான இந்த மாடலின் தற்போதைய விலை ரூ.48 லட்சம். 1995 சிசி திறனை கொண்ட இந்த கார் 190 பி.எச்.பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் ஆற்றலை தர வல்லது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தற்போதைய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்ட பின்னரும் தனது முதல் பி.எம்.டபுள்யூ எக்ஸ்3 காரை இன்னும் பயன்படுத்தி வருகிறார் நயன்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

நகரப் பகுதியை விட்டு வெளியே தாண்டிய பின்னர், திறந்த தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரை பக்கத்தில் உட்கார சொல்லி தானே கார் ஓட்டுவது நயன்தாராவின் ஸ்டைல்.

பாலிவுட் குயின் தீபிகா படுகோன்

பாலிவுட் குயின் தீபிகா படுகோன்

2011ம் ஆண்டில் தொடங்கிய ஹிட் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டுயிருக்கிறது தீபிகாவிற்கு. பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட இவர் மிகவும் சிறிய வயதிலேயே கார் ஓட்ட பழக்கிக்கொண்டார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தீபிகா கார் ஓட்டுவது போன்ற புகைப்படங்கள் எப்போது வெளியானாலும், அவர் சீட் பெல்டை கட்டியிருப்பது போன்று தான் போஸ் தருவார்.

தீபிகாவிற்கு சினிமா பிரபலங்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனாலேயே கார் இயக்குவதில் கூட பொறுப்புணர்வுடன் இருப்பார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தீபிகா படுகோனிற்கு ஜெர்மென் கார் பிராண்டுகள் மீது தீராத காதல். பிரியங்காவை போல இவரும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்றுவிட்டதால், காரில் தனது அந்தஸ்த்தை சரியாக பிரதிபலிக்க தயாராகி வருகிறார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

சினிமாவிற்குள் நுழைந்தபோது, அவர் பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் கார் முதன்முதலாக வாங்கினார். பி.எம்.டபுள்யூவின் பாரம்பரியமான கார்களில் இதுவும் ஒன்று.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

1972ம் ஆண்டு முதல் பி.எம்.டபுள்யூவின் அடையாளமாக மாறிவிட்ட இந்த கார் 5வது தலைமுறையில் 4.4 லிட்டர் வி8 எஞ்சினுடன் தயாரிக்கப்படுகிறது. இது 325 பி.எச்.பி பவர் தர வல்லது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பி.எம்.டபிள்யூ 5 சிரீஸிற்கு பிறகு தீபிகா சமீபத்தில் வாங்கிய கார் ஆடி கியூ7. இந்தியாவில் ரூ.73 லட்சம் மதிப்புடைய இந்த கார் 245 பி.எச்.பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தொலைதூர பயணங்கள் மற்றும் நண்பர்களுடன் இன்ப சுற்றுலா ஆகியவற்றிக்கு பெரும்பாலும் தீபிகா இதையே பயன்படுத்துவார். குறிப்பாக தீபிகாவே எப்போதும் டிரைவிங்கும் செய்வார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பல பாலிவுட் நடிகைகளை ஒப்பிடும் போது தீபிகா படுகோனின் கார் கலெக்‌ஷன் மிகவும் குறைவு தான். இதற்கு ஒருமுறை பதிலளித்த அவர்,

பெரும்பாலும் வெளிநாடுகளில் படப்பிடிப்புல் இருப்பதால், ஹையரெண்டு மாடல் கார்களை வாங்கி குவிக்க தனக்கு நேரமில்லை என்று தீபிகா படுகோன் தெரிவித்தார்.

பன்முகத்தன்மை கொண்ட ஷ்ருதி ஹாசன்

பன்முகத்தன்மை கொண்ட ஷ்ருதி ஹாசன்

கமல் ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன், இதுதான் அவருக்கு இப்போதும் இருந்து வரும் அடையாளம். ஆனால் ஷ்ருதிக்கு இருக்கும் திறமைகள் போல இந்திய சினிமா நடிகைகளில் யாருக்கும் கிடையாது என நிச்சயமாக சொல்லலாம்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

சிறந்த பாடகி, பாடலாசிரியர், இசை அமைப்பாளர், நடிகை, ஃபேஷன் ஐகான் என பன்முகத்தன்மையோடு வெளிவரும் ஷ்ருதி, சரியான கார் ஆர்வலர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தந்தை கமல்ஹாசனுக்கு புதிய கார் குறித்த சந்தேகங்கள் வந்தால், ஷ்ருதி ஹாசனை அனுகக்கூடிய அளவிற்கு, கார் குறித்த பல அப்டேட்டுகளை விரல் நுனியில் வைத்திருப்பார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

திரைத்துறைக்கு வருவதிற்கு முன்பாக ஷ்ருதி ஹாசன், மெண்டல்ஸ் என்ற இசை குழுவை நடத்தி வந்தார். சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் என்று நடக்கும் இதற்கான கச்சேரிகளுக்கு அவர் காரிலேயே சென்றுவிடுவார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அந்தளவிற்கு காரை இயக்குவதிலும், அதில் பயணிப்பதிலும் ஷ்ருதி ஹாசனிற்கு அலாதியான ஆனந்தம் உண்டு.

ஷ்ருதி எஸ்.யூ.வி கார்களுக்கான ரசிகர். பல செலிபிரிட்டிகளிடம் இருப்பது போன்று ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை தான் தற்போது ஷ்ருதி பயன்படுத்தி வருகிறார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்தியாவில் ரூ.1.19 கோடி மதிப்புடைய இந்த கார் கிட்டத்தட்ட 11 நிறங்களில் வெளிவருகிறது. தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதால் ஷ்ருதி ஹாசனின் ரேஞ்ச் ரோவர் கார் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பரமில்லாத அனுஷ்கா சர்மா

ஆடம்பரமில்லாத அனுஷ்கா சர்மா

தீபிகா படுகோனுக்கு பிறகு ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் அனுஷ்கா சர்மா. எந்தவித சினிமா பின்புலமில்லாமல், மாடலிங்கை வைத்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ஷாருக்கானுடன் நடித்த 'ரப் நே பநாதி ஜோடி' திரைப்படம் வெள்வந்திருந்தாலும், கிரிகெட் வீரர் விராட் கோலியுடன் நடித்த ஒரு விளம்பரம் தான் அவருக்கு புகழின் உச்சியை அளித்தது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிசியானார். இத்தனை வருட திரைவாழ்க்கையில் அனுஷ்கா சேர்த்து வைத்திருக்கும் கார்கள் 2. ஒன்று ரேஞ்ச் ரோவர் ரோக் மற்றும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ரேஞ்ச் ரோவர் காரை அனுஷ்கா பெரும்பாலும் தொலை தூர பயணங்கள் மற்றும் இரவு நேர பயணங்களுக்காக பயன்படுத்துவார். அதேபோல மெர்சிடிஸ் பி.எம்.டபுள்யூ காரை படப்பிடிப்பு தளத்திற்கு மற்றும் விழாக்களுக்கும் பயன்படுத்துவார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பெரும்பாலான இரவு நேர பயணங்களின் போது டிரைவரின்றி தானே கார் ஒட்டி செல்லும் பழக்கமும் அனுஷ்காவிற்கு உண்டு. இவரும் பெங்களூரில் வளர்ந்த பெண் என்பதால் காரை சர்வசாதரணமாக ஓட்டுவார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

மேலும் அனுஷ்காவின் தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர். அதானாலேயே அனுஷ்காவிற்கு ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி கார் மீது அதிக ஈடுபாடு உண்டு. அதேபோல பாலிவுட் நடிகைகளில் சிறந்த முறையில் கார் ஓட்டும் திறனும் அவருக்கு உண்டு.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அனுஷ்கா சர்மாவின் காதலராக கிசுகிசுக்கப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ரேஞ்ச் ரோவர் காரை அவருக்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பெரும்பாலான நேரங்களில் தன்னுடன் தனது குடும்பத்தார் அல்லது நண்பர்கள் யாரேனும் வந்தால், அனுஷ்கா தான் ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை ஓட்டுவார். யாரையும் ஓட்டவிட மாட்டார். அந்தளவிற்கு அவருக்கு தான் பயன்படுத்தும் கார்கள் மேல் அலாதியான ப்ரியம் உண்டு.

தமிழ் கதாநாயகி த்ரிஷா

தமிழ் கதாநாயகி த்ரிஷா

ஒரு காலத்தில் த்ரிஷா என்ன செய்தாலும், எங்கே சென்றாலும் செய்தி தான். அந்தளவிற்கு த்ரிஷாவின் நகர்வுகள் தமிழ் சினிமா துறையில் முக்கியமான நிகழ்வுகளாக இருந்தன.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

முன்பெல்லாம் த்ரிஷாவை குறித்து என்ன செய்தி வெளியானாலும், அவர் எந்த காரில் பயணம் செய்தார். அந்த காரிலிருந்து எந்த நிகழ்வில் கலந்துகொண்டார் உட்பட அனைத்தும் வெளிவரும்

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அந்தளவிற்கு த்ரிஷாவின் நகர்வில் காருக்கான பங்கு முக்கியமானது. த்ரிஷாவிடம் 3 கார்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் அவர் விரும்பி பயன்படுத்தும் கார் பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்தியாவில் ரூ.51 லட்சம் முதல் ரூ. 61 லட்சம் விலையில் விற்பனையாகும் இந்த மாடல், த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்த அடர் நீல நிறத்தில் உள்ளது.

இந்த காரை த்ரிஷா எப்போது வாங்கினார் என்பது குறித்த தகவல் இல்லை, ஆனால் பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் காரை நயன்தாரா விற்கு பிறகு தான் வாங்கியுள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

நயன் தாரா பி.எம்.டபுள்யூ காரை வாங்கிய பிறகு தான், தமிழ் சினிமா கதாநாயகிகள் மத்தியில் இந்த மாடல் காருக்கு மிகுந்த மவுசு ஏற்பட்டது. அதனால் நயன்தாராவிற்கு பிறகு த்ரிஷா, ஸ்நேகா ஆகியோர் பி.எம்.டபுள்யூ காரை வாங்க தொடங்கினர்.

அபார திறமை கொண்ட கேத்ரீனா கைஃப்

அபார திறமை கொண்ட கேத்ரீனா கைஃப்

கார்களுக்கான திறன் மற்றும் ஆற்றலுக்கு ஏற்றவாறு எந்த திரை நட்சத்திரங்களால் கார் ஓட்ட முடியும் என்று கேட்டால், அந்த பட்டியலில் பல முன்னணி நட்சத்திரங்களையே தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு வலிமை கொண்டவர் கேத்ரீனா கைஃப்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர், 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார். சல்மான் கானுடன் ஆரம்பித்து அனைத்து கான் நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அக்‌ஷய் குமாருடன் அவர் நடிக்க சலாம் மும்பை படத்தில் கத்ரீனாவின் கார் ஓட்டும் திறமை அறிந்த பாலிவுட் சினிமா இயக்குநர்கள், அதற்கு பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்களில் கார் ஓட்டும் காட்சியை வைத்தனர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அந்தளவிற்கு எந்த காரை கொடுத்தாலும், அதை லாவகாமாக ஓட்டக்கூடிய அளவில் திறன் பெற்றவர் கேத்ரீனா.

இங்கிலாந்தில் இடது கையால் கார் ஓட்டுவது தான் பழக்கம் என்பதால், இந்தியாவிலும் சட்டென காரை ஓட்டுங்கள் என்று சொன்னவுடன் படப்பிடிப்பின் போது பறக்க தொடங்கினார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

கார் ஓட்டுவது மட்டுமின்றி சமீபத்தில் வெளியான ஜிந்தகி நா மிலேகி தோ பாரா படம் மூலம், தனக்கு மோட்டார் சைக்கிளும் ஓட்டத்தெரியும் என்று காட்டி பாராட்டுதலை குவித்தவர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்தியாவில் அலுவல் ரீதியாக நடைபெறும் எந்த நிகழ்விற்கும் கேத்ரீனா கார் ஓட்டி செல்லமாட்டார். டிரைவர் தான் ஓட்டுவார். இதுவே தனிப்பட்ட முறையான நிகழ்வுகள் என்றால்,கேத்ரீனா ஓட்டும் கார் சாலையில் பறக்கும்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

சலாம் நமஸ்தே, பாங்க் பாங்க் என பல்வேறு படங்களில் கேத்ரீனா கார் ஓட்டும் காட்சிகள் வரவேற்பு பெற்றவை. கார்கள் மேல் தீராத காதல் கொண்டுள்ள இவரிடம் ஆடி நிறுவனத்தின் க்யூ 3 மற்றும் க்யூ 7 கார்கள் உள்ளன.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பல நடிகைகள் போல இவரும் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடிமையானவர் தான். ஆனால் ஆடம்பரத்திற்காக எப்போதும் கார் வைத்திருக்காமல் அவற்றை தேவைக்காக மட்டும் பயன்படுத்தக்கூடியவர் இந்த கேத்ரீனா கைஃப்.

சாதனை நாயகி சமந்தா

சாதனை நாயகி சமந்தா

அனுஷ்கா ஷெட்டி போலவே சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், திரைத்துறையில் ஜொலித்து வருபவர் சமந்தா. சென்னையை சேர்ந்த சமந்தா தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகை.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

தெலுங்கு, தமிழ் என பிசியான நடிகையாகிவிட்ட சம்ந்தாவிடம் த்ரிஷாவிடம் உள்ள மாடலான பி.எம்.டபுள்யூ எக்ஸ் 5 கார் உள்ளது. சமந்தா வைத்திருக்கும் காரின் நிறம் கருப்பு.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

இந்திய விலையில் 76 லட்சம் மதிப்புடைய இந்த காரை, சினிமாவிற்கு வந்த புதிலேயே வாங்கி விட்டார் அவர். அதேபோல நடிக்க வந்த சில வருடங்களிலேயே பி.எம்.டபுள்யூ காரை வாங்கி முதல் நடிகையாகவும் சமந்தா உள்ளார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அதேபோல சமந்தா தனக்கு நெருக்கமான பலருக்கு ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்தால் கார்களை வாங்கி பரிசளிப்பது

சமந்தாவின் வழக்கம்.

அந்த வகையில் தனது வருங்கால கணவரான நடிகர் நாக சைத்தன்யாவிற்கு சமந்தா பி.எம்.டபுள்யூவின் 7 சிரீஸ் காரை வாங்கி பரிசளித்துள்ளார்.

அதிரடி காட்டும் சன்னி லியோன்

அதிரடி காட்டும் சன்னி லியோன்

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையை பெற்ற பெண்ணாக இருந்தாலும், சன்னி லியோனுக்கு பூர்வீகம் இந்தியா தான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பாலிவுட் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல போல்ட் ஸ்டேட்மெண்டுகளை விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

பாலிவுட்டில் தனக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை பார்த்த சன்னி லியோன், தற்போது மும்பையிலேயே கணவருடன் வசிக்கத் தொடங்கி விட்டார்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

மும்பையில் வசித்தாலும், சன்னி லியோனிற்கு இந்திய தயாரிப்புகளில் பெரிய ஆர்வமில்லை. அதேபோல பாலிவுட் சினிமாவில் மற்ற நடிகைகள் விரும்பும் ஆடி, பி.எம்.டபுள்யூ போன்ற கார்களை வைத்திருப்பதிலும் அவருக்கு ஆர்வமில்லை.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

அதனால் சன்னி லியோனின் கணவர் அவருக்கு பரிசளித்த கார் தான் மசேரேட்டி குவத்ரோபோர்தே. பல பாலிவுட் நடிகைகளின் கார் கலெக்‌ஷனை விட இந்த காரின் விலை சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

சன்னி லியோன் பயன்படுத்தி வரும் மசேரேட்டி குவத்ரோபோர்தே கார் இந்தியாவில் ரூ. 1.55 கோடி மதிப்புப்பெற்றது. இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த கார் செயல்திறனிலும் மிரட்டலான சிற்பம்மசத்தை கொண்டது.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

டீசல் மற்றும் பெட்ரொல் என இரண்டு மாடல்களிலும் வெளிவரும் இந்த கார் பெட்ரோல் மாடலில் ரூ.2.25 கோடி மதிப்புப்பெற்றது.

3799 சிசி பெட்ரோல் திறன் பெற்ற மாடல் 530 பி.எச்.பி பவரை தர வல்லது. 2987 சிசி கொண்ட மாடல் 275 பி.எச்.பி பவரை வழங்கும்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

5 இருக்கைகள் வசதிக்கொண்ட இந்த காரில் பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பம் உள்ளது. மாடல்களுக்கு ஏற்றவாறு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் தொழில்நுட்பத்தில் கியர் பாக்ஸ் இடம்பெறும்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

ப்ரியங்கா தொடங்கி சன்னி லியொன் வரை இந்திய நடிகைகள் பயன்படுத்தும் கார் கலெக்‌ஷன்களை இங்கே பார்த்தோம். இவற்றில் முதன்மை வகிப்பது ப்ரியங்கா சோப்ரா தான்.

சமந்தா முதல் சன்னி லியோன் வரை: கதாநாயகிகளின் கார் கலெக்‌ஷன்

உலகின் பல முக்கியமான ஆடம்பர மாடல் கார்களை வைத்துள்ள ஒரே நடிகையாகவும் அவர் உள்ளார். ரோல்ஸ்-ராய்ஸ் முதல் ஆடி வரை பிரியங்காவின் ஒவ்வொரு கார் கலெக்‌ஷனும் உலக கவனம் பெறுகின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car collection of India's top actresses. From Samantha to Sunny Leone. Click for detials...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more