முன்னாடி ஸ்கூல் டீச்சர்.. ஆனா இப்ப ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓனர்.. நடிகர் விஜய்-இன் பக்கத்து வீட்டுக்காரரா இவரு!!
திறமையும், ஹார்ட் ஒர்க் செய்யும் மன நிலையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட முடியும். இதற்கு சான்றாக இந்தியாவில் பல நபர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரே சென்னையைச் சேர்ந்த பிஆர் சுந்தர். ஒரு காலகட்டத்தில் பள்ளி ஆசிரியராக இருந்த இவர் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு உரிமையாளர் ஆவார். இந்த அளவிற்கு தன்னுடைய விடா முயற்சி மற்றும் கடின உழைப்பின் வாயிலாக வளர்ச்சி அடைந்திருக்கின்றார், பிஆர் சுந்தர். ஸ்டாக் மார்க்கெட்டில் கை தேர்ந்தவரே இவர் ஆவார்.
இதில் அவருக்கு இருக்கும் தனித்துவமான அனுபவமே அவரை ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உரிமையாளராகும் அளவிற்கு வளர்ச்சியடைச் செய்திருக்கின்றது. இந்த காரை அவர் துபாயிலேயே வாங்கி இருக்கின்றார். இந்த துபாய் பதிவெண் கொண்ட காரையே சென்னைக்கு கார்நெட் வாயிலாக அவர் கொண்டு வந்திருக்கின்றார். அவர் வைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் மாடலாகும்.

இந்த கார் துபாய் பதிவெண்ணில் இருப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது. இந்த கார் மாடலின் ஒற்றை யூனிட்டின் இந்திய மதிப்பு மட்டுமே 8.99 கோடி ரூபாய் ஆகும். இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.
பேந்தம் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் உயர் நிலை தேர்வின் விலையோ ரூ. 10.48 கோடிக்கும் அதிகமாக ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் தனக்கு சொந்தமாக துபாயில் வைத்திருக்கின்றார். அவர் வைத்திருப்பது என்ன தேர்வு என்பது துள்ளியமாக தெரியவில்லை.
இருப்பினும், இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பிஆர் சுந்தர் தற்போது கார்நெட் வாயிலாகவே துபாயில் இருந்து சென்னைக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த காரை கார்நெட் வாயிலாகக் கொண்டு வந்திருப்பதால் சில காலம் வரை மட்டுமே அவரால் இந்த காரை இந்தியாவில் வைத்திருக்க முடியும்.
பின்னர் மீண்டும் அதன் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான ஓர் அனுமதி சீட்டே இந்த கார்நெட் ஆகும். இதை வாகனங்களுக்கான தற்காலிக பாஸ்போர்ட் என்றும் கூறலாம். பல ஆண்டு காலமாக இந்த கார்நெட் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றது. ஆனால், பலருக்கு இப்படி ஒன்று இந்தியாவில் இருப்பதே தெரியாது.
அவர்களில் ஒருவராகவே பிஆர் சுந்தரும் இருந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் கார்நெட் வாயிலாக அவர்களின் வெளிநாட்டு கார்களை இந்தியாக் கொண்டு வரப்பட்டதை செய்திகள் வாயிலாக அவர் அறிந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர்களில் சிலர் அறிவுறுத்தியதன்படி, இதற்காகவே பிரத்யேக செயல்பட்டு வரும் ஏஜெண்டுகளைத் தொடர்புக் கொண்டு தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரை இந்தியா கொண்டு வந்திருக்கின்றார்.
தற்போது பிஆர் சுந்தர் இந்தியாக் கொண்டு வந்திருக்கின்றார். தற்போது இந்த காரில் அவர் ஹாயாக சென்னையில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றார். கார்நெட் வாயிலாக கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு எந்தவொரு வரியும் செலுத்தத் தேவையில்லை. கார்நெட்டிற்கு உண்டான கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே போதும்.
ஆனால், இதற்கு பல லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஆர் சுந்தர் இந்த காரை ரூ. 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவிட்டே இந்த காரை இந்தியாக் கொண்டு வந்திருக்கின்றார். இப்போது அவரால் இந்த காரை சுமார் 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இந்தியாவில் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் ஓர் அதிக கவர்ச்சியான சொகுசு ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு கவர்ச்சி சேர்க்கும் பொருட்டு புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 22 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள், ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்ஜ் வீல் இயக்கத்தின் போதும் நேராகவே நிற்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று பல்வேறு விஷயங்களில் இக்காரை ரோல்ஸ் ராய்ஸ் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கின்றது. இந்த கார் மைலேஜ் தருவதில் மோசமானதாக இருக்கின்றது. அராயின் தகவலின்படி, லிட்டர் ஒன்றிற்கு வெறும் 9.8 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும்.
அதேநேரத்தில் நிஜ வாழ்க்கையில் இக்கார் வெறும் 8 கிமீ அல்லது அதற்கும் குறைவாகவே அது மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. மைலேஜ் தருவதில் வேண்டுமானால் மிக மோசமான காராக இந்த தயாரிப்பு இருக்கலாம். ஆனால், சொகுசான ரைடு அனுபவத்தை வழங்குவதில் இந்த கார் ஓர் வாரி வள்ளல் ஆகும்.
குறிப்பாக, இதன் பின் பக்கத்தில் ஜன்னல்களை மறைக்கும் துணி திரை, குடை, மின்சாரத்தால் திறந்து-மூடும் கதவுகள், வெண்டிலேட் இருக்கை, தனி தனியான க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்த காரில் சூசைட் ரக கதவுகளே வழங்கப்பட்டு உள்ளன. இது பயணிகள் ஈசியாக ஏறி-இறங்க உதவியாக இருக்கும்.
தொடர்ந்து, காரின் உள்பக்க மேற்கூரையில் நட்சத்திர லைட்டுகள் இரவு நேர ஃபீலை வழங்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமின்றி, சிறிய ஃபிரிட்ஜ், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சினைப் பொருத்த வரை இக்காரில் 6.6லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 612எச்பி பவரையும், 840என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்தகைய சூப்பரான கார் மாடலையே பிஆர் சுந்தர் கார்நெட் வாயிலாக இந்தியாக் கொண்டு வந்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஆர் சுந்தர், இவர் நடிகர் விஜயின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஆரம்ப கட்டத்தில் டாடா இன்டிகா போன்ற எளிமையான கார்களை பயன்படுத்தி வந்த இவர் தற்போது விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும், வெளிநாடுகளில் வீடுகளையும் அவர் கொண்டிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








