தீபாவளிக்குள் பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள்... சஸ்பென்ஸ் வைக்கும் அமைச்சர்..!!

Written By:

தீபாவளி கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இனிப்பான செய்தியை நாட்டு மக்களுக்கு உதிர்த்திருக்கிறார்.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

முன்னதாக பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை இருந்து வந்தது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

ஆனால் அந்த அறிவிப்புகள் செய்தி குறிப்புகளாக வெளியாக பொதுமக்களிடம் முக்கியத்துவம் பெறும். போராட்டங்களும் வெடிக்கும்.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

ஆனால் தினசரி விலை மாற்றத்தால் இதுபோன்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியாது என்ற நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.7.51 காசுகள் ஏற்றம் கண்டுள்ளன.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்த பிற்பாடு,

எரிவாயுக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு கண்டனக் குரல்கள் அதிகம் எழவே, ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வந்தால் விலை பாதியாக குறையும் என்று தெரிவித்தார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு பலமுறை பரிசீலித்து வந்தாலும், ஜிஎஸ்டி-க்குள் இவை கொண்டு வரப்படுமா என்பது சந்தேகமே.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது மத்திய அரசுக்கு பொன்முட்டையிடும் வாத்து. அதை இழக்க அவை தயாராக இல்லை என்பதே விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

சமீபத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, கேபினெட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார் தர்மேந்திர பிரதான்.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

இவரிடம் தான் தற்போது பெட்ரோலியம் துறை ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான முதல் அறிவிப்பு தான் இந்த தீபாவளி போனஸ்.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தர்மேந்திர பிரதான், அமெரிக்காவில் புயல் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி 13 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

பெட்ரோல் நிறுவனங்கள் அனைத்தும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கும் போது பெட்ரோல் நிறுவனங்கள் லாபத்தை நோக்கி முறைகேடாக விலையை அறிவிக்க முடியாது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

புயல் பாதிப்பில் இருந்து மீண்டும் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும். விரைவில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை குறையும்.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள இந்த வார்த்தைகள் தற்போது வாகன ஓட்டிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு தீர்வு..!

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவருவதை குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இதற்கான அறிவிப்புகள் டிசம்பர் மாதத்திற்கு பிறகு இருக்காலம் என்று டெல்லி வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Fuel prices May Come Down by Diwali Says Central Minister Dharmendra Pradhan. Click for Details...
Story first published: Thursday, September 21, 2017, 11:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark