அடேங்கப்பா! ஒரு மாசத்துக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் சேல்ஸ் ஆகுதா? முழுமையான ரிப்போர்ட்!
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டிலிருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இந்த எரிபொருட்களை எல்லாம் தயாரித்து வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் இதன் விற்பனையை குறைப்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் இது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் எவ்வளவு எரிபொருள் விற்பனையாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் பெட்ரோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் தேவை என்பது முறையே 4.2% மற்றும் 8.68% அளவிற்கு அதிகரித்துள்ளது. டீசல் தேவை என்பது 0.72% அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த எரிபொருட்கள் எல்லாம் கடந்த மே மாத விற்பனையை ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதம் குறைவாக விற்பனையாகி உள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட இந்த மாதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோலை பொருத்தவரை 3.28 மில்லியன்மெட்ரிக் ன் அளவிலான பெட்ரோல் கடந்த ஜூன் மாதம் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 3.15 மில்லியன்மெட்ரிக்டன் அளவிலான எரிபொருள் விற்பனையாகியுள்ளது. இது 4.22 சதவீத அளவிற்கு பெட்ரோலின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் 3.43 மில்லியன்மெட்ரிக்டன் அளவிலான பெட்ரோல் விற்பனையாகி உள்ளது. இது 4.37 சதவீதம் அளவிற்கு பெட்ரோலின் தேவை குறைந்துள்ளதை காட்டுகிறது.
டீசலை பொருத்தவரை கடந்த ஜூன் மாதம் 7.96 மில்லியன்மெட்ரிக்டன் அளவிலான டீசல் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7.90 மில்லியன்மெட்ரிக்டன் அளவிலான டீலர் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 0.72% அளவிற்கு இதன் விற்பனை அதிகமாகியுள்ளது. இதுவே கடந்த மே மாதம் 8.37 மில்லியன்மெட்ரிக்டன் அளவிலான டீசல் விற்பனையானது. அதை ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதம் 4.89% அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

அடுத்ததாக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்பன் எரிபொருளை பொறுத்தவரை 0.69 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான எரிபொருள் கடந்த ஜூன் மாதம் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த விற்பனையை விட 8.68 சதவீதம் அளவிற்கு அதிகமாகும் ஆனால் கடந்த மே மாதம் 0.74 மில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. அதை ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதம் 6.7 சதவீதம் அளவிற்கு இதன் பயன்பாடு குறைந்துள்ளது.
எல்பிஜி பயன்பாட்டை பொருத்தவரை கடந்த ஜூன் மாதம் 2.39 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான விற்பனை இருந்தது. இது கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட 5.12 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதுவே மே மாத விற்பனையை ஒப்பிடும்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

சில்லறை விநியோகஸ்தர்கள் மத்தியில் உள்ள கணக்கின்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 3.6 சதவீதம் அளவிற்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரம் 1.3 சதவீதம் அளவிற்கு டீசல் விற்பனை குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்கள். விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்பைன் பெட்ரோலை பொறுத்தவரை 4.3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 82.55 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே கடந்த மே மாதம் 83.56 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் 89.46 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையானது. படிப்படியாக இதன் விலை குறைந்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.
கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் மூலம் கடந்த ஜூன் மாதம் மத்திய மாநில அரசுகளுக்கு ரூபாய் 7.51 லட்சம் கோடி வரியாக வருமானம் கிடைத்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 7.48 லட்சம் கோடி மட்டுமே வருமானமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த ஜூன் மாதம் அதிகரித்துள்ளது. ஆனால் மே மாதத்தை விட குறைவாக தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கோடை விடுமுறை காரணமாக பலர் அதிகமாக பயணம் செய்தார்கள். இதனால் பெட்ரோல், டீசல் விமான எரிபொருள் என அனைத்தும் அதிகமாக செலவானது தற்போது அது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









