நிலவில் மனிதர்கள் மட்டுமல்ல காரும் ஓட்டப்பட்டுள்ளது! இது பற்றி பலருக்கும் தெரியாது! உண்மையில் நடந்தது இது தான்

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில் தற்போதைய இந்தியா முழுவதும் அதைப்பற்றி தான் பேசி வருகின்றனர். இந்நிலையில் நிலவில் முதன்முறையாக கார் ஓட்டிய நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா?இது குறித்த முழு விபரங்களை தான் இன்று நாம் விரிவாக காணப்போகிறோம்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் சாதிக்காத வகையில் நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முறையாக ஒரு விண்கலத்தை தரை இறக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை பற்றி தான் தற்போது உலக நாடுகளே பேசி வருகிறது. பலர் விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.

lunar roving vehicle

தென் துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்த பிறகு நிலவில் மனிதர்கள் சென்று வாழத் தகுதியான வாய்ப்புகள் இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் நீர் உள்ளதாக கருதப்படும் இடத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு ஆய்வுகளை செய்து வருகிறது.

நிலவில் நீரை கண்டுபிடித்து அங்கு மனிதனை வாழ வைக்க விஞ்ஞானிகள் பல்வேறு யோசனைகளை செய்து வருகின்றனர். இது எல்லாம் ஒருபுறம் இருக்க நிலவில் முதன்முறையாக ஒரு மனிதனால் ஓட்டப்பட்ட வாகனம் மற்றும் வாகனம் ஓட்டிய மனிதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி என்றாவது யோசித்து இருப்பீர்களா? இப்பொழுது அதைப் பற்றி காணலாம் வாருங்கள்.

lunar roving vehicle

நிலவில் கார் ஓட்டுவது என்பது இனிமே நடக்கப்போகும் சாதனை இல்லை. ஏற்கனவே நடந்து பதிவான ஒரு சாதனை தான். விண்வெளிக்கு சென்ற வீரர் ஒருவர் நிலவில் முதன்முறையாக காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார். நாசா அனுப்பிய விண்கலத்தில் சென்ற ஒரு வீரர் நிலவில் கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் தான் டேவிட் ரென்டோல்ஃப் ஸ்காட்.

இவர் கடந்த 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர். இவர் பின்னர் படித்து நாசாவில் பணிக்கு சேர்ந்தார். அப்பொழுது நாசா அப்பல்லோ 15 என்ற நிலவுக்கு ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருந்த.து இந்தத் திட்டத்திற்கு இவர் தான் கமெண்டராக அறிவிக்கப்பட்டார். இவரது தலைமையில் தான் அப்பல்லோ 15 விண்கலம் நிலவிற்கு சென்றது.

lunar roving vehicle

அப்பல்லோ 15 விண்கலம் கடந்த 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி சரியாக அமெரிக்க நேரப்படி காலை 9:34 மணிக்கு புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சுமார் நான்கு நாள் பயணம் செய்த பிறகு இந்த விண்கலம் நிலவை சென்றடைந்தது. இது விண்வெளியில் ரெயிலீ எனப்படும் பகுதியில் தரை இறங்கியது.

இந்த விண்கலத்தில் எல்ஆர்வி எனப்படும் லூனார் ரோவர்ன் வெஹிகில் என்ற வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது. அதாவது இது நிலவின் பயணிக்கும் காராகும். இந்த கார் முழுமையாக எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீலுக்கும் 200 வாட்ஸ் பவர் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டு அது இயக்குவதற்காக ஒரு டிரைவர் சீட் அமைக்கப்பட்டு எப்படி பூமியில் கார் இயக்கப்படுகிறதோ அதே போல நிலவிலும் இந்த கார் இயங்கும்படி தயாரிக்கப்பட்டது.

நிலவிற்கு சென்று இறங்கியதும் இந்த எல்ஆர்வி எலெக்ட்ரிக் காரை இயக்க அதன் கமெண்டர் டேவிட் ஸ்காட்டுக்கு தான் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கும் இந்த காரை ஓட்டுவதற்கான பயிற்சி இருந்தாலும் முன்னுரிமை அடிப்படையில் இவர் மட்டும்தான் இந்த காரை ஓட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அவர் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மற்றவர்கள் ஓட்ட அனுமதியிருந்தது.

இதையடுத்து நிலவில் தரையிறங்கிய அப்பல்லோ 15 விண்கலம் அதிலிருந்து மனிதர்கள் நிலவில் காலடி தடத்தை எடுத்து வைத்த உடன் இந்த காரையும் விண்கலத்தில் இருந்து நிலவில் இறக்கினார். நிலவில் இறக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் இந்த எல்ஆர்வி தான். இந்த காரை நிலவில் இவர் சுமார் 28 கிலோ மீட்டர் வரை பல்வேறு முறை ஓட்டினார்.

அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற இந்த குழு நிலவில் 546 மணி நேரம் 54 நிமிடங்கள் வரை ஆய்வுகளை செய்தது அதன் பின்னர் இந்தக் குழு நிலவிலிருந்து மீண்டும் கிளம்பி பூமிக்கு கடந்த 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி பூமியில் தரையிறங்கியது. நிலவில் பயணித்த முதல் கார் என்பது இதுதான் அந்த காரை ஓட்டிய முதல் டிரைவர் டேவிட் ஸ்காட் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலவில் ஒரு மனிதன் தரையிறங்குவது என்பதே சவாலாக இருந்த அந்த காலகட்டத்தில் அமெரிக்கா நிலவில் காரையை தரையிறக்கி, அங்கு இயக்கியுள்ளது. இதன் பெறும் ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் விரைவில் இந்தியாவும் இது போன்று நிலவில் வாகனத்தை இயக்க பல்வேறு ஆய்வுகளை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Thursday, August 24, 2023, 14:40 [IST]
English summary
Full details about the lunar rover the first vehicle driven on the moon
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X