இதை பார்த்ததும் எத்தனை பேர் இந்த ஹோண்டா காரை வாங்க போகிறார்களோ... கல்லு போல நின்றதை பார்த்து எல்லாரும் ஷாக்!!
ஹோண்டா (Honda) கார்களுக்கு இந்தியாவில் ஒரு காலத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், இப்போதும் கார்களின் தரத்தில் ஹோண்டா நிறுவனம் எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்வதில்லை. வழக்கம்போல் நன்கு வலிமையான கார்களை தான் ஹோண்டா உற்பத்தி செய்கிறது. குறிப்பாக, மாடர்ன் ஹோண்டா காரான எலிவேட் (Elevate)-இன் வலிமையான உடலமைப்பை வெளிக்காட்டும் வகையில் ஏற்கனவே ஒரு நிகழ்வை பார்த்திருந்தோம். அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
புதியதாக கார் வாங்கும்போது, காரின் மைலேஜ் மற்றும் விலையை தாண்டி காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்த்து வாங்கும் வழக்கம் சமீப காலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ADAS இல்லாமல் புதியதாக காரே வாங்க மாட்டேன் என இருப்பவர்களும் இருக்கின்றனர். இதன் காரணமாகவே, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து ஹோண்டா வரை முடிந்தவரையில் வலிமையான கார்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர முயற்சிக்கின்றன.

அந்த வகையில் ஹோண்டா உருவாக்கியதே ஹோண்டா எலிவேட் கார் ஆகும். எலிவேட் காரின் உடல் வலிமையை வெளிக்காட்டும் வகையில், கடந்த ஆண்டில் பெங்களூரில் காய்ந்துப்போன மரம் ஒன்று கனமழையினால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹோண்டா எலிவேட் கார் ஒன்று மீது விழுந்தது. ஆனால், மரத்தின் முழு எடையையும் காரின் மேற்கூரையே தாங்கி நின்ற சம்பவம் எலிவேட் காரின் தரத்தை பறைச்சாற்றுவதாக இருந்தது.
இன்னும் சொல்லப்போனால், மரம் விழுந்த சமயத்தில் காருக்குள் யாராவது இருந்திருந்தால் கூட பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பலரது கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், மரத்திற்கு பதிலாக பெரிய லாரி ஒன்றும், அதில் இருந்த இரும்பு பொருட்களும் எலிவேட் கார் ஒன்றின் மீது விழுந்துள்ளன.

வட இந்தியாவில் இந்த சம்பவம் சரியாக எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் இல்லை. சேதத்திற்கு உள்ளான ஹோண்டா எலிவேட் கார் குஜராத் மாநில நம்பர் பிளேட் உடன் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சம்பவத்தின்போது ஹோண்டா எலிவேட் கார் மீது விழுந்த லாரி முழு சுமை உடன் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால், அதிகப்படியான சுமையினால் தான் இந்த லாரி சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போதே ஒருபக்கம் கவிழ்ந்துள்ளது. சரியாக அந்த நேரத்தில் லாரிக்கு அருகே இந்த ஹோண்டா எலிவேட் கார் வர, லாரியின் மொத்த எடையையும் எலிவேட் கார் சுமக்க வேண்டியதாகிவிட்டது. விபத்திற்கு பின் எடுக்கப்பட்ட வீடியோவில், விபத்திற்குள்ளான எலிவேட் காரை முழுமையாக காண முடியவில்லை.
இருப்பினும், நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கையில், லாரியின் எடையை சம்பந்தப்பட்ட எலிவேட் கார் நன்றாகவே தாங்கி நிற்குகிறது. லாரியின் மோதலால் ஏற்பட்ட அதிர்வுகளை காரின் ஃபெண்டர் மற்றும் பில்லர் உள்ளிட்டவை சிறப்பாக தாங்கி நிற்பதை வீடியோவில் காண முடிகிறது. லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் அனைத்தும் சரியாக காரின் விண்ட்ஷீல்டு கண்ணாடி மீது விழுந்துள்ளன.
லாரி ஒருபக்கம் சரிந்தது மட்டுமின்றி, இவ்வாறு லாரியில் இருந்த எடைமிக்க கம்பிகள் விழுந்ததும் காருக்குள் இருந்த பயணிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். ஆனால், காருக்குள் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுபோல் எந்த செய்திக்குறிப்பும் இல்லை. வீடியோவில், காரின் விளக்குகள் ஒளிர்வதால், கார் சாலையில் இயங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருப்பது உறுதியாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது உறுதியாகவில்லை. அதிக சுமையினால் பேலன்ஸை இழந்த லாரி கார் மீது கவிழ்ந்தது போன்று தெரிகிறது. நல்லவேளையாக, லாரியின் முழு எடையும் காரின் மீது விழவில்லை. விழுந்திருந்தால் காருக்குள் இருந்தவர்கள் பலத்த காயத்தை அடைந்திருப்பர். ஆதலால், வலிமையான மற்றும் தரமான கார்களை உருவாக்குவது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் சாலைகளில் கவனத்துடன் செயல்படவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








