இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!

ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுமார் 15 மாடி கார் பார்க்கிங் கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் பார்க்கிங் கட்டிடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக தானியங்கியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று பெருநகரங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது கார் பார்க்கிங் விஷயம்தான். சாலைகளில் ஓரமாக கார்களை பார்க்கிங் செய்து விட்டு செல்வதால் மிகப் பெரிய டிராபிக் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் முக்கியமான சாலை அருகே கார் பார்க்கிங் கட்டமைக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. ஆனால் எவ்வளவு கார் பார்க்கிங் அமைத்தாலும் போதுமான இட வசதி இல்லாமல் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

hyderabad multi level parking

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுமார் 15 மாடி கட்டிடத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டமைக்கப்பட்டு விரைவில் இது திறப்புக்கு தயாராகிறது. இந்த கட்டிடத்தில் முதல் ஐந்து மாடிகள் கமர்சியல் கடைகளாகவும், அடுத்து 10 மாடிகள் பார்க்கிங் வசதிக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 1,44,400 சதுர அடியில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்கிங்கில் சுமார் 250 டூவீலர்களையும், 200 கார்களையும் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள கட்டுமான இடத்தில் 68% பார்க்கிங்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாக்கி உள்ள 32 சதவீதம் கமர்சியல் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு சினிமா தியேட்டர்களும் இடம் பெறுகின்றன.

இந்த கட்டுமானத்தை பாரி இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் 50 ஆண்டுகள் இந்த கட்டிடத்தின் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நிறுவனம் ஒப்பந்தம் செய்து உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்ற என்னவென்றால் இந்த கட்டிடத்தில் உள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங் என அனைத்தும் தானியங்கியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

hyderabad multi level parking

இந்த பார்க்கிங்கில் மொத்தம் நான்கு இடத்தில் வாகனங்களை பார்க்கிங்குள் எடுத்துச் செல்லவும் பார்க்கிங்கை விட்டு வெளியே எடுக்கவும் வழிகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் டர்ன் டேபிள் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இங்கு கார்களை கொண்டு வரும்போது டிரைவருக்கு ஆர்எஃப் ஐடி கார்டு வழங்கப்படும். வழக்கமாக கார் நிறுத்துபவர்களுக்கு நிரந்தர ஐடி கார்டும் வழங்கப்படுகிறது.

இந்த கார்டை வாங்கிக் கொண்டு அந்த டைம் டேபிளில் காரை நிறுத்திவிட்டு காரில் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து காரை முற்றிலுமாக லாக் செய்து ஸ்மார்ட் கார்டு மூலம் காரை பார்க்கிங்குள் செல்ல அனுமதி வழங்கி விட்டால் தானியங்கியாக கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று விடும். பின்னர் அவர் எப்பொழுது வருகிறாரோ அப்பொழுது ஸ்மார்ட் கார்டை அந்த கருவியில் காட்ட வேண்டும்.

hyderabad multi level parking

ஆட்டோமேட்டிக்காக அவர் கார் எங்கு நிறுத்தப்பட்டதோ அந்த அங்கிருந்து அவர் கார் மீண்டும் பத்திரமாக எடுத்து கீழே கொண்டுவரப்படும். இது முழுவதும் தானியங்கியாக செயல்படும். இதற்கு பின்னால் எந்த மனிதர்களும் செயல்பட போவதில்லை. கட்டணமும் வசூலிக்கப்படும். இதில் உள்ள இட வசதியை பொருத்தவரை ஒவ்வொரு கார் நிறுத்தவும் அகலமான எஸ்யூவி காராக இருந்தாலும், நீளமான செடான் காராக இருந்தாலும் அனைத்து கார்களும் நிறுத்துவதற்கான இட வசதி இருக்கிறது.

இப்படியான தானியங்கி மல்டி லெவல் கார் பார்க்கிங் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை இதற்கு முன்னர் டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இப்படியான மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி இருந்தாலும் அவை இந்த அளவிற்கு பெரிதாகவோ அல்லது இந்த அளவுக்கு இட வசதி கொண்டதாகவோ இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங் பிரச்சினை மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் இதற்கு இந்த மல்டி லெவல் பார்க்கிங் நிச்சயம் ஒரு தீர்வாக இருக்கும். இதில் வரும் பிரச்சினைகள் காரை சரியாக பார்க்கையில் நிறுத்துவது மற்றும் அதை பத்திரமாக மீண்டும் எடுப்பது தான் அதையும் தானியங்கி முறையாக செய்வது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 7:00 [IST]
English summary
Fully automated multi level car parking complex likely to open soon in hyderabad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X