ஹைதராபாத் வந்த உலகின் மிகப்பெரிய விமானம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

By Saravana

ஹைதராபாத்தில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏஎன்225 மிரியா இந்திய மீடியாக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. இந்த விமானம் பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தையும், வியப்பையும் தருவதாக இருக்கிறது.

ஐரோப்பாவில் இருந்து மின்சார ஜெனரேட்டரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில், இந்த விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியது குறித்து செய்தி வழங்கியிருந்தோம். இந்த நிலைியல், இந்த விமானத்தை பற்றி தெரியாத சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஏர்பஸ் ஏ380 ஜுஜுபி

ஏர்பஸ் ஏ380 ஜுஜுபி

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380ஐ விட இந்த விமானம் பெரியது. ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பயணிகள், சரக்கு என இரண்டையும் சேர்த்து 157 டன் எடையை சுமந்து செல்லும் அல்லது ஏற்ற முடியும். ஆனால், இந்த சரக்கு விமானம் 253 டன் சரக்குடன் மேலே எழும்பும் திறன் கொண்டது.

கால்பந்து மைதானம்

கால்பந்து மைதானம்

கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கான வடிவத்தை பெற்றது. அதாவது, கால்பந்து மைதானத்தைவிட 10 அடி மட்டுமே குறைவாக இருக்கும். இந்த விமானத்தில் 52 யானைகளுக்கு இணையான எடையை ஏற்ற முடியும்.

இடவசதி

இடவசதி

காக்பிட், பணியாளர்கள் அறை தவிர்த்து சரக்கு ஏற்றும் இடம் மட்டும் 43.32 மீட்டர் நீளமும், 6.4 மீட்டர் அகலமும், 4.4 மீட்டர் உயரமும் கொண்டது. எனவே, மிக பிரம்மாண்டமான வடிவம் கொண்ட சரக்குகளை கூட அசால்ட்டாக ஏற்ற முடியும்.

வேகம்

வேகம்

இந்த விமானம் மணிக்கு 850 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 15,300 கிமீ தூரம் பறக்கும். ஆனால், சரக்கு எடைக்கு தகுந்தவாறு பறக்கும் தூரம் குறையும். தற்போது 116 டன் எடையுடைய ஜெனரேட்டரை ஏற்றி வந்தால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4,000 கிமீ தூரம் மட்டுமே பறக்கும்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த விமானத்தை இயக்குவதற்கு பைலட்டுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என 6 பேர் தேவை. அதுதவிர, விமானத்தில் மொத்தமாக 20 பேர் பணிபுரிகின்றனர். ஹைதராபாத் வந்தபோது 20 விமான பணியாளர்கள் மற்றும் சரக்கை கண்காணிக்கும் பொறுப்பில் 6 பணியாளர்கள் என மொத்தம் 26 பேர் வந்திருந்தனர்.

சாதனைகள்

சாதனைகள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருக்கும் இந்த விமானம் இதுவரை 240 சாதனைகளை படைத்துள்ளது. அதில், 186.7 டன் எடையுடையே ஒற்றை சரக்கை ஏற்றிச் சென்றதுடன், 42.1 மீட்டர் நீளமுடைய சரக்கையும் ஏற்றிச் சென்று பல உலக சாதனைகளை படைத்திருக்கிறது.

வாடகை

வாடகை

இந்த விமானத்திற்கான வாடகை மிக அதிகம். 2004ம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு 3 லட்சம் டாலர் வாடகை வசூலிக்கப்பட்டது. இப்போது எவ்வளவு மடங்கு அதிகரித்திருக்கும் என்பதே தலை சுற்ற வைக்கும் செய்திதான்.

முன்புற வாயில்

முன்புற வாயில்

பொதுவாக சரக்கு விமானங்களில் பின்புறம்தான் வழி மற்றும் சரக்கு ஏற்றுவதற்கான மேடை உள்ளிட்டவற்றை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த விமானத்தின் முன்பகுதி வழியாகத்தான் சரக்குகள் ஏற்றப்படுகிறது. அதாவது, காக்பிட் அமைந்திருக்கும் மூக்குப் பகுதியை மேலே தூக்கிக் கொள்ளும். இதனால், பின்புற கதவு, மேடைகள் போன்றவற்றின் எடை வெகுவாக குறைந்திருக்கிறது.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 1988ம் ஆண்டு முதல்முறையாக பறந்தது இந்த விமானம். ரஷ்ய விண்வெளி ஓடத்தை தரையிறங்கிய இடத்திலிருந்து ஏவக்கூடிய இடத்திற்கு சுமந்து செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது. பின்னர், வர்த்தக ரீதியில் இயக்கப்பட்டு வருகிறது. 1989ம் ஆண்டு முதுகில் புரான் விண்வெளி ஓடத்துடன் பாரிஸ் ஏர் ஷோவிற்கு வருகை தந்திருந்தது.

சிறப்பான பயன்பாடு

சிறப்பான பயன்பாடு

வான்வழியாக எடுத்துச் செல்லவே முடியாது என்று கருதும் பிரம்மாண்ட பொருட்களை கூட எளிதாக எடுத்துச் சென்று சேவையாற்றி வருகிறது.

வியப்பு

வியப்பு

6 எஞ்சின்கள், 32 சக்கரங்கள் என பிரம்மாண்ட இறக்கைகள், வால் பகுதி என வியக்க வைக்கும் இந்த விமானத்தில் போயிங் 737 விமானத்தையே அடக்கிவிட முடியுமாம்

கொசுறுத் தகவல்

கொசுறுத் தகவல்

இந்தியாவில் நடுத்தர வகை விமானங்களை தயாரிப்பதற்காக, அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன், இந்த விமானத்தை தயாரித்த உக்ரைன் நாட்டின் அன்டோனிக் நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலமாக, பொது சந்தை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஒத்துழைப்புடன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 14, 2016, 16:22 [IST]
English summary
Fun Facts About World's Largest Cargo Plane Antonov An-225 Mriya.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+