ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ்... உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்... !!

By Saravana

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் தக்க வைத்து வருகிறது. ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த பயணிகள் சொகுசு கப்பலில் இருக்கும் வசதிகளையும், அழகையும் பார்த்தால் பூமியின் மிதக்கும் சொர்க்கபுரியாகவே கூறத் தோன்றுகிறது.

கப்பலில் சிறு நகரத்தையை 9 பகுதிகளாக நிர்மானித்து பொறியியல் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். உலகிலேயே 6,000 பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் என்ற பெருமையும் இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உண்டு. இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளையும், படங்களையும் தொகுத்துள்ளோம்.

செய்தியின் சுவாரஸ்ய தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

சிறு வித்தியாசம்

சிறு வித்தியாசம்

ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பிரம்மாண்ட கப்பலான 'ஆலூர் ஆஃப் தி சீஸ்' சொகுசு கப்பலைவிட இது வெறும் 2 இஞ்ச் மட்டுமே கூடுதல் நீளம் கொண்டது. எனவே, இரண்டு சொகுசு கப்பல்களும் பெரிய வித்தியாசங்கள் இல்லாத பிரம்மாண்டங்களாகவே கூறலாம்.

வடிவம்

வடிவம்

இது 2.25 லட்சம் டன் எடை கொண்டது. 1,187 அடி நீளமும், 208 அடி அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் மட்டத்திலிருந்து 236 அடி உயரம் கொண்டது. 16 அடுக்குகள் கொண்டதாக அடுக்குமாடி மாளிகையாக காட்சியளிக்கிறது.

 கட்டுமானம்

கட்டுமானம்

ஃபினலாந்து நாட்டிலுள்ள துர்கு ஷிப்யார்டில் 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

டெலிவிரி

டெலிவிரி

கடந்த 2009ம் ஆண்டு ராயல் கரீபியன் நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

பயணிகள்

பயணிகள்

இந்த சொகுசு கப்பலில் அதிகபட்சம் 6,296 பயணிகள் செல்லலாம். இதில், 2,165 பணியாளர்கள் உள்ளனர்.

அறைகள்

அறைகள்

இதிலுள்ள சொகுசு அறைகள் கடலின் அழகை ரசித்துக் கொண்டே பயணிக்கும் வகையில் பால்கனியுடன் இந்த அறைகள் சொர்க்கத்தை அளிக்க வல்லதாக அமையும்.

வசதிகள்

வசதிகள்

சூதாட்ட விடுதி, இரவு நேர விடுதிகள், ஏராளமான பார் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகள், காமெடி கிளப், 5 நீச்சல் குளங்கள், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உண்மையான பூங்காக்கங்கள், கோல்ஃப் மைதானம் என பரந்துபட்ட வசதிகளை கொண்டுள்ளது.

சென்ட்ரல் பூங்கா

சென்ட்ரல் பூங்கா

இந்த கப்பலின் 8வது தளத்தில் உண்மையான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிஜ பூங்காவாக குறிப்பிடப்படுகிறது. இந்த பார்க்கில் 12,000 செடிகளும், 56 மரங்களும் இருக்கின்றன.

அறைகள்

அறைகள்

மொத்தமாக 2,700 அறைகள் உள்ளன. இவற்றில் லாஃப் சூட் எனப்படும் 28 டூப்ளெக்ஸ் ரக சொகுசு அறைகளும் அடங்கும். இவை 545 சதுர அடி பரப்பு கொண்டது.

 வீடியோ கேம்

வீடியோ கேம்

வீடியோ கேம் மையங்கள், தியேட்டர்கள், மசாஜ் கிளப்புகள், யோகா மையங்கள், கலாச்சார நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என அனைத்து பொழுதுபோக்கு மற்றும் புத்துணர்ச்சி மையங்களும் இதில் உள்ளன.

குழந்தைகளுக்கான மையம்

குழந்தைகளுக்கான மையம்

குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களும் உள்ளன.

மலையேற்ற மையம்

மலையேற்ற மையம்

மலையேற்ற பிரியர்களுக்கான சிறப்பு சுவர் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்வா நீச்சல் குளம்

அக்வா நீச்சல் குளம்

கப்பலின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அக்வா நீச்சல் குளம் 17.9 அடி ஆழம் கொண்டது. உலகிலேயே அதிக ஆழம் கொண்ட கப்பல் நீச்சல் குளம் இது.

 உணவு வகைகள்

உணவு வகைகள்

இந்த கப்பலில் 20 வகையான உணவுகள் கிடைக்கும் என்பது பலதரப்பட்ட சமூகம், கலாச்சார உணவுப் பழக்க வழக்கங்கள் கொண்டோரை ஈர்ப்பதாக உள்ளது.

ராட்டினம்

ராட்டினம்

உலகிலேயே ராட்டினம் விளையாட்டு கொண்ட முதல் சொகுசு கப்பலாகவும் குறிப்பிடப்படுகிறது.

 சாப்பாட்டு கூட வசதி

சாப்பாட்டு கூட வசதி

ஒரே நேரத்தில் 3056 பயணிகள் சாப்பிடுவதற்கான வசதி கொண்டது. இதற்கான மேஜை, நாற்காலிகளையும், உணவு பரிமாறுவதற்கு 550 பணியாளர்களும் உள்ளனர் என்பது சிறப்பு.

புரொப்பல்லர்கள்

புரொப்பல்லர்கள்

இந்த கப்பலில் தலா 7,500 எச்பி பவரை அளிக்கும் 4 போ த்ரஸ்ட்டர்கள் கப்பலை இயக்குகின்றன. இவை ஃபார்முலா ஒன் காரின் எஞ்சினைவிட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

பெரியது

பெரியது

டைட்டானிக் சொகுசு கப்பலை விட 5 மடங்கு பெரியது இந்த ஒயாசீஸ் ஆப் தி சீஸ்.

படங்கள்

படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பலின் கூடுதல் படங்களை தொடர்ந்து காணலாம்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்.

ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பலின் படங்கள்

மீண்டும் ஒரு சுவாரஸ்ய தொகுப்பில் சந்திக்கலாம்.

Most Read Articles
English summary
MS Oasis of the Seas is an Oasis-class cruise ship, delivered to her owner, Royal Caribbean International, in October 2009. The first of her class, she was joined by her sister ship MS Allure of the Seas in December 2010. Both vessels cruise the Caribbean from Port Everglades in Fort Lauderdale, Florida. She set a new record of carrying over 6,000 passengers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X