சிந்தனைக்கும், சிரிப்புக்கும் விருந்தான சாலை எச்சரிக்கை பலகைகள்!
சாதாரணமாக சாலையில் பயணிக்கும்போது வளைவு இருப்பதை காட்டும் குறியீடுகள், அல்லது வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் சில வாசகங்களை பார்த்து பழகிவிட்டோம். இதனால், அதன் உண்மையான நோக்கத்தை கூட சில சமயங்களில் சட்டை செய்யாமல் பயணிக்கிறோம்.
சமயத்தில் இந்த கவனக் குறைவினால் விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆனால், இப்போது பார்க்கப்போகும் சாலை எச்சரிக்கை பலகைகள் சற்று வித்தியாசமாகவும், ஓட்டுனரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன. சொல்ல வரும் செய்தியை மிக நாசூக்காக கூறி, ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த எச்சரிக்கை வாசகங்கள், நிச்சயம் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பலாம்.

விஸ்கி அருந்தினால், ரிஸ்க் அதிகம்!

வேகம் சிலிர்ப்பை தரும். அதுவே மரணத்திற்கும் வழி வகுக்கும்.

வளைவான சாலையே வாகன ஓட்டியை எச்சரிக்கும் விதத்தில் எழுதப்பட்ட பலகை.

சாலையிலே பாதுகாப்பா போறது, வீட்டில ஹாயாக அமர்ந்து டீ குடிப்பது போன்ற சுகத்தை தரும்தானே!

வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் சாலை எச்சரிக்கை பலகை.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்பதை அற்புதமாக சொல்லும் வாசகம்.

எவ்வளவு சொல்லியும் கேட்காதவர்களுக்கு, நண்பனை போன்று தோளில் கைபோட்டு எச்சரிக்கும் வாசகம். வளைவில் மெதுவா போங்க நண்பரே!

வாழ்வின் மதிப்பை உணர்த்தும் வாசகம்.

சாலையில் முழு கவனத்தையும் வைக்கச் சொல்லும் வாசகம்.

ஹாஹாஹா... கரெட்டுதாங்க. ஹாஸ்பிட்டல்ல முகட்டு வளையை பார்த்துகிட்டே படுத்துகிட்டு இருக்கிறது எவ்வளவு கொடுமை இல்லையா!

வண்டி ஓட்டும்போது தூங்கிட்டா, உங்க குடும்பமே காலம் பூரா கண்ணீரில் மிதக்கும்! தூக்கம் வந்தா, குடும்பத்தை நினைச்சுக்குங்க.

நமக்கு இருக்கிறது ஒண்ணே ஒன்னு, கண்ணே கண்ணு. அட, உயிர்தாங்க.

பாசத்தை முகம் தெரியாத பக்கத்து வீட்டுக்காரங்கிட்டயும், ஃபேஸ்புக் நண்பர்கிட்டயும் காட்டுங்க. ஆனால், பக்கத்துல வர்ற வண்டிகிட்ட காட்டிடாதீங்க.

பறக்காதீங்கப்பா.

அதிகபாரம், மது மற்றும் வேகம்.. இம்மூன்றும் வாகன ஓட்டிகளுக்கு எமன் என்று உணர்த்தும் வாசகம்.

இது ராலி கார் பந்தயம் நடத்தும் இடம் இல்லை. மலைப்பகுதியின் அழகை மெதுவாக கண்டு ரசித்துச் செல்லலாமே.

பெயருக்கு முன்னாள் 'லேட்' போடுவதைவிட, சற்று 'லேட்'டாக செல்வதில் பிரச்னை இல்லை. சரிதானுங்களே.

திருமணமானால், வேகத்தை விவகாரத்து செய்துவிடுங்கள்.

ஓட்ட விடுங்களேம்பா. கிசுகிசுப்பும், தொணதொணப்பும் வேண்டாமே.

வாழ்க்கையை கொஞ்ச காலம்தான். அதனை இன்னும் குறுக்கிவிடாதீர்.

இது உலகின் அதிஉயரமான வாகன போக்குவரத்து சாலை. ஆனால், இது சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிப் பாதையல்ல!

இதுவும் மனசுல வச்சுக்கோங்க.

வளைவை மெதுவாக கடந்து அனுபவியுங்கள். சாகச முயற்சிகள் வேண்டாமே.

சரிதானுங்களே.

வாகனம் ஓட்டும்போது எந்நேரமும் விழிப்புடன் இருக்க வலியுறுத்தும் வாசகம்.

அதிவேகம் கூரான கத்தியை போன்றது, அது வாழ்க்கையை நொடியில் அறுத்து எரிந்துவிடும்.

தாறுமாறாக ஓட்டுவதை தவிர்க்க எச்சரிக்கும் வாசகம்.

விபத்தால் மரணித்தால் ஏற்படும் நிலையை சூசகமாகவும், அருமையாகவும் சொல்லியிருக்கும் வாசகம்.

உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் முக்கியமானவர் என்பது உணர்த்தும் வாசகம்.

பாதுகாப்பாக வாகனத்தை செலுத்த பழகிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணமும் இனிமையாக அமையும்.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு
இது மாதிரி எங்கேயாவது பார்த்துருக்கீங்களா?
Source: Facebook


Click it and Unblock the Notifications








