ஆத்திரமடைந்த கணவனால் மனைவியின் காருக்கு நேர்ந்த விபரீதம்

Written By:

’ஆத்திரத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது நமது ஊருக்கு மட்டுமல்ல எல்லா ஊருக்கும் பொறுந்தக்கூடிய பழமொழி. ரஷ்யாவில் தனக்கு பிடிக்காத ஒன்றை தனது மனைவி செய்தாள் என்பதற்காக கணவன் ஒருவன், மனைவியின் காரை நாசமாக்கிவிட்டு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டுள்ளான்.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

பாதிக்கப்பட்ட கணவன் மனைவி பெயரை வெளியிடாமல், பிரபல டெய்லிமெயில் இணையதளம் இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது, அதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பெர்கில் வாழ்ந்து வரும் தம்பதிகளில், மனைவி சூப்பர் மார்கெட்டை வைத்து நிர்வகித்து வருகிறார். அந்த பல்பொருள் அங்காடியை விளம்பரப்படுத்த கடையின் பெயரான வெய்னி என்பதை தன் பெயரோடு சேர்ந்து உபப் பெயராக (surname ) வைத்துகொண்டார்.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

இதனால் அத்திரமடைந்த அவரது கணவர், மனைவி உடன் தீவிரமாக சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் மனைவி முடியாது என தீர்க்கமாக கூறவே கணவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

தன் பேச்சை கேட்காமல் மனைவி செய்த காரியத்தால் ஆத்திரமுற்ற கணவன் மனைவி பயன்படுத்தும் காரை துவம்சம் செய்து மமதையை தீர்த்துக்கொண்டான். அந்த காருக்கு நேர்ந்த கதி தான் இன்று ரஷ்யாவில் மட்டுமில்லாமல் ஆட்டோமொபைல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாக மாறியுள்ளது.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

மனைவி பயன்படுத்தும் காரை நடுரோட்டில் நிற்கவைத்து, ஒரு லாரி சிமெண்டை வண்டிக்குள் கொட்டி நிரப்பிவிட்டான். கொட்டப்பட்ட சிமெண்ட கலவை நிரம்பி காரின் கண்ணாடிகள் வழியாக வழியும் அளவிற்கு சிமெண்ட்டால் கார் புதைந்தேவிட்டது.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

சாலையில் இதைப்பார்த்த ஒருவர் தனது கைப்பேசியில் மொத்த சம்பவத்தையும் பதிவு செய்து, தற்போது அதை இணையதளங்கில் உலாவிட்டுள்ளார். வலைதளங்கில் வைரலான இந்த சம்பவம் கணவனின் மனைவியை விட பல தரப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

என்ன தான் ஆத்திரமிருந்தாலும், காருக்குள் சிமெண்ட் கலவையை கொட்டி நிரப்பும் அளவிற்கு அப்படி என்ன மனைவியின் மீது கோபம் என இதுகுறித்து விசாரித்த போது, தம்பதிகள் இருவருக்கும் பல நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்ததாகவும், அது தற்போது பல்பொருள் அங்காட்டி விஷயத்தில் ஒரு பொது இடத்திற்கு வரும் அளவிற்கு சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

மேலும் கணவன், மனைவி இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது. இதை வைத்து தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே கணவன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று காரின் மீது கோபத்தை காட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

ரஷ்யாவில் காரை சிமெண்ட் கொண்டு நிரப்பப்பட்ட இந்த சம்பவம் வைரலாக மாறியுள்ளது. இதுகுறித்த கருத்து தெரிவித்த பல வலைதள வாசிகள், கணவன் மனைவியை விட, சிமெண்ட் லாரியின் ஓட்டுநரை தான் ஏகத்துக்கும் வறுத்து எடுத்துவிட்டனர்.

மனைவியின் காரில் சிமெண்டை நிரப்பி கணவன் ஆத்திரச் செயல்

கணவன் தான் கூறினான் என்றால், ஓட்டுநருக்கு சுயபுத்தி இல்லையா. இப்படிப்பட்ட ஒரு காரில் சிமெண்ட் கலவையை கொட்ட சுயபுத்தி கொண்ட யாரும் சம்மத்திக்க மாட்டான் என்றளவில் சிமெண்ட் லாரி ஓட்டுநரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Via Dailymail

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Furious husband fills wife's car with cement after the couple got quarrel between when the wife changed her surname to a supermarket chain to promote the store where she works.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark